வாழ்க வளமுடன்
‘நவாப்புகளின் நகரம்’ என்ற சிறப்புப்பெயருடன் அழைக்கப்படும் லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத்தின் தலைநகரமாகும்.
இது கோமதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது.
சூர்யவம்ஷி எனும் ராஜவம்சத்தினரின் ஆட்சியிலிருந்து இந்நகரத்தின் வரலாறு துவங்குகிறது.
விமான நிலையத்தில் |
நவாப் ஆசஃப் உத் தௌலா என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரம் ஆவாத் நவாப்புகளின் தலைநகரமாக திகழ்ந்திருக்கிறது.
இவர்களின் ஆட்சியில்தான் இந்நகரின் கலாச்சாரம் மற்றும் பிரசித்தமான உணவுத்தயாரிப்பு பாரம்பரியம் முதலியவை செழித்து வளர்ந்திருக்கின்றன.
இன்று வியக்கவைக்கும் அளவுக்கு நவநாகரீக நவீனத்தின் எல்லா அம்சங்களும் லக்னோ நகரில் கலந்து விட்டாலும் இன்னமும் இந்த நகரம் தனது புராதன அடையாளத்தையும் வாசனையையும் இழக்கவில்லை என்பது ஒரு சிறப்பம்சம்.
மெட்ரோ |
லக்னோ அருகிலும் , தொலைவிலும் பார்க்க பல இடங்கள் உண்டு ..
ஆனால் எங்கள் இந்த பயணம் சுற்றுலாவுக்கானது அல்ல .
மகனின் விளையாட்டு போட்டிக்காக சென்றோம் .அவரின் archey - icse school games இந்த வருடம் இங்கு நடைபெற்றது . அவரும் முதல் முறையாக பங்கு பெறுவதால் நாங்களும் அனைவரும் சென்றோம் .
அதனால் இந்த நான்கு நாட்கள் பயணத்தில் மூன்று நாட்கள் விளையாட்டு மைதானத்தில் தான் இருந்தோம் . கடைசி நாள் மட்டும் அருகில் உள்ள சில இடங்களை சென்று பார்த்தோம் .
அதனால் காட்சி தொகுப்பாக அப்படங்கள் இனி வரும் பதிவில் காணலாம்.
முன்பே முதல் விமான பயண படங்கள் மேக காதலிகள் என்னும் பதிவில் பதிவிட்டேன் .. அதன் தொடர்ச்சியே இனி வரும் காட்சிகள் ...
அன்புடன்
அனுபிரேம்
மகனுக்கு வாழ்த்துகள்பா அனு .இந்தமாதிரி Archery games இல் பங்கெடுக்க நிறையபேர் முன்வருவதில்லை அவரை என்கரேஜ் செய்யும் உங்களுக்கும் பாராட்டுக்கள் .படங்கள் தொடர்கிறேன் .
ReplyDeleteநன்றி அஞ்சு ...
DeleteArchery games ல அவங்க அப்பா கலந்துட்டு இருகாங்க..அதனால் அவனும் ஆர்வமா பங்கெடுத்து கொள்கிறான் ...
மகனுக்கு வாழ்த்துக்கள் அனு.
ReplyDeleteபோட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
வெற்றி, தோல்வி முக்கியமில்லை இதில் கிடைக்கும் அனுபவம் மிக அவசியம் .
மனவலிமை, உடல் வலிமை கிடைக்கும்.
எங்கள் சாரின் அண்ணா பேத்தி நிறைய Archery games போட்டிகளில் கலந்து கொண்டாள் முன்பு.
இப்போது துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்கிறாள்.
நன்றி மா ...
Deleteஅதில் கலந்து கொள்ளும் அளவு பையனுக்கு பயற்சி இல்ல ..ஆனாலும் ஒரு நல்ல அனுபவம் கிடைக்கும் என்றே கலந்துக் கொள்ள செய்தோம் ...பல வித அனுபவங்கள் மா ...
கண்டிப்பாக அவன் எதிர்காலத்திற்க்கு உபயோகமாக இருக்கும் ..
.....துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்கிறாள்.....ஓ வாழ்த்துக்கள் மா ...
வணக்கம் சகோதரி
ReplyDeleteபடங்கள் அருமையாக அழகாக இருக்கிறது . லக்னோ பயணம் இனிதாக அமைத்து ரசித்ததற்கு மகிழ்ச்சி. மகனின் விளையாட்டு ஆர்வத்திற்கு வாழ்த்துக்கள். மேலும் படங்களைக் காண ஆவலாக இருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி கமலா அக்கா ..
Deleteமகனுக்கு வாழ்த்துகள் அனு. மகனை ஊக்கப்படுத்தி அவரின் விருப்பத்தினை பூர்த்தி செய்கிறமைக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஅழகான படங்கள்.
நன்றி அம்மு
Delete