25 November 2019

லா மார்டினியர் காலேஜ் ,லக்னோ





விளையாட்டு போட்டிகள்  நடைபெற்றது இந்த கல்லூரியில் தான்  ..மிக பழமையான கல்லூரி. போட்டிகள் முடிவுற்றவுடன், கடைசி நாள் அவர்கள் பள்ளி மாணவர்கள் விருப்பமானவர்களுக்கு இவ்விடத்தை  சுற்றிக் காட்டினர்.

எங்களையும் அப்படி ஒரு மாணவர் அழைத்து சென்று அனைத்து இடத்தையும் காட்டினார்.

மிக அழகான இடம் . நல்ல பராமரிப்பு ...வேகமாக பார்த்தும் முழுதாக காண 2 மணி நேரம் ஆனது .








லா மார்டினியர் ஆண்கள்  கல்லூரி பதினெட்டாம் நூற்றாண்டின் செல்வந்தரான பிரெஞ்சுக்காரரான மேஜர் ஜெனரல் கிளாட் மார்ட்டினின் (1735-1800)  நிதியுதவியால் நிறுவப்பட்டது.

 அவர் பிரெஞ்சு மற்றும் பின்னர் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் அதிகாரியாக இருந்தார்.

அவர் இந்தியாவின் பணக்கார பிரெஞ்சுக்காரர்.

கான்ஸ்டான்ஷியா, இப்போது ஆண்கள்  கல்லூரியைக் கொண்டிருக்கும் அரண்மனைக் கட்டிடம் 1785 ஆம் ஆண்டில் மார்ட்டினின்  இல்லமாக கட்டப்பட்டது, ஆனால் 1802 ஆம் ஆண்டு வரை முடிக்கப்படவில்லை, 1800 செப்டம்பர் 13 அன்று மார்ட்டின் இறந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான் முழுவதுமாக முடிக்கப்பட்டது.



மார்ட்டின் அவர்கள்  திருமணம் செய்து கொள்ளவில்லை. எனவே அவரின் சொத்துக்கள் அனைத்தும்,  அவரின் விருப்பப்படி 
லா- மார்டினியர் என்று பெயரிடப்பட்ட மூன்று பள்ளிகளை நிறுவுவதற்கு பயன்படுத்தப்பட்டது . மேலும் அவரின் எஸ்டேட் சொத்துக்கள் அனைத்தும் இக்கல்லூரி நிர்வாகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது .


கரையின் அந்த பக்கம் கோமதி ஆறு ஓடுகிறது ...


















முந்தைய பதிவுகள்

1.லக்னோ பயணத்தில் ...

2.விளையாட்டு மைதானத்தில் .....


தொடரும் ...




அன்புடன்
அனுபிரேம்





2 comments:

  1. வணக்கம் சகோதரி

    அழகான கல்லூரி. மிக அமைதியாகவும், விஸ்தரிப்பில் பெரிதாகவும் இருக்கிறது. கல்லூரி பற்றி விபரங்கள் தெரிந்து கொண்டேன். தகவலுக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. அழகான பெரிய கல்லூரி.

    ReplyDelete