06 November 2019

பேயாழ்வார்

பேயாழ்வார்  அவதார  திருநட்சித்திரம் இன்று  (6.11.2௦19)


ஐப்பசி மாதம் சதய  நட்சத்திரத்தில் அவதரித்தவர் இவர்...


  பேயாழ்வார் வாழி திருநாமம்!

திருக்கண்டேனென நூறுஞ் செப்பினான் வாழியே

சிறந்த ஐப்பசியில் சதயம் செனித்தவள்ளல் வாழியே

மருக்கமழும் மயிலைநகர் வாழவந்தோன் வாழியே

மலர்கரிய நெய்தல்தனில் வந்துதித்தான் வாழியே

நெருங்கிடவேயிடைகழியில் நின்ற செல்வன் வாழியே

நேமிசங்கன் வடிவழகை நெஞ்சில் வைப்போன் வாழியே

பெருக்கமுடன் திருமழிசைப் பிரான் தொழுவோன் வாழியே

பேயாழ்வார் தாளிணையிப் பெருநிலத்தில் வாழியே .....!


பிறந்த ஊர் -  மயிலாப்பூர்

பிறந்த நாள் - ஏழாம் நூற்றாண்டு

நட்சத்திரம் - ஐப்பசி சதயம் (வளர்பிறை தசமி திதி)

கிழமை      - வியாழன்

எழுதிய நூல் - மூன்றாம் திருவந்தாதி

பாடல்கள் -100

சிறப்பு - செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் கட்கம் என்னும் வாளின் அம்சம் (நந்தகாம்சம்)


தொண்டை நாட்டில் மயூரபுரி எனும் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் உள்ள புஷ்கரணி யில் திருமாலின் *நாந்தகம் எனும் வாளின்* அம்சமாக அவதரித்தவர்.


திருக்கோவலூர் திருத்தலத்தில் இடைக்கழியில்

 *வையம் தகளியா* என பொய்கையாழ்வாரும் ,

*அன்பே தகளியா* என பூதத்தாழ்வாரும் விளக்கேற்ற

திருமாலைக் கண்டு *திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்* எனத் தொடங்கி நூறு பாசுரங்கள் மூன்றாம் திருவந்தாதி பாடியவர்.


ஸ்ரீ  பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி


அழகன்றேஆழியாற்கு ஆழிநீர்வண்ணம் * 
அழகன்றேஅண்டங்கடத்தல் * - அழகன்றே 
அங்கைநீரேற்றாற்கு அலர்மேலோன்கால்கழுவ * 
கங்கைநீர்கான்றகழல்.

6 2287


கழல்தொழுதும்வாநெஞ்சே! கார்கடல்நீர்வேலை * 
பொழிலளந்தபுள்ளூர்திச்செல்வன் * - எழிலளந்தங்கு  
எண்ணற்கரியானை எப்பொருட்கும்சேயானை * 
நண்ணற்கரியானைநாம். 

7 2288


நாமம்பலசொல்லி நாராயணாவென்று * 
நாமங்கையால்தொழுதும்நன்னெஞ்சே! - வா * மருவி 
மண்ணுலகமுண்டுமிழ்ந்த வண்டறையும்தண்துழாய் * 
கண்ணனையேகாண்கநங்கண்.

8 2289


கண்ணும்கமலம் கமலமேகைத்தலமும் * 
மண்ணளந்தபாதமும் மற்றவையே * எண்ணின்  
கருமாமுகில்வண்ணன் கார்க்கடல்நீர்வண்ணன் * 
திருமாமணிவண்ணன்தேசு. 

9 2290


தேசும்திறலும் திருவும்உருவமும் * 
மாசில்குடிப்பிறப்பும் மற்றவையும் - பேசில் 
வலம்புரிந்தவான்சங்கம் கொண்டான்பேரோத * 
நலம்புரிந்துசென்றடையும்நன்கு. 

10 2291நன்கோதும் நால்வேதத்துள்ளான் * நறவிரியும் 
பொங்கோதருவிப்புனல்வண்ணன் * - சங்கோதப் 
பாற்கடலான் பாம்பணையின்மேலான் * பயின்றுரைப்பார் 
நூற்கடலான் நுண்ணறிவினான். 

11 2292


அறிவென்னும்தாள்கொளுவி ஐம்புலனும்தம்மில் * 
செறிவென்னும்திண்கதவம் செம்மி * - மறையென்றும் 
நன்கோதி நன்குணர்வார்காண்பரே * நாள்தோறும் 
பைங்கோதவண்ணன்படி. 

12 2293


படிவட்டத்தாமரை பண்டுலகம்நீரேற்று * 
அடிவட்டத்தாலளப்ப நீண்ட - முடிவட்டம் * 
ஆகாயமூடறுத்து அண்டம்போய்நீண்டதே * 
மாகாயமாய்நின்றமாற்கு.

13 2294


மாற்பால்மனஞ்சுழிப்ப மங்கையர்தோள்கைவிட்டு * 
நூற்பால்மனம்வைக்கநொய்விதாம் * -நாற்பால 
வேதத்தான்வேங்கடத்தான் விண்ணோர்முடிதோயும் * 
பாதத்தான்பாதம்பணிந்து.

14 2295


பணிந்துயர்ந்தபௌவப் படுதிரைகள்மோத * 
பணிந்தபணிமணிகளாலே - அணிந்து *அங்கு 
அனந்தனணைக் கிடக்கும்அம்மான் * அடியேன் 
மனந்தனணைக் கிடக்கும்வந்து. 

15 2296

முந்தைய பதிவுகள் ..

பேயாழ்வார் வைபவம்  போன வருட பதிவு

திருக்கோவிலூர் ...- முதலாழ்வார்கள் வைபவம்....

பேயாழ்வார்பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!


ஓம் நமோ நாராயணா..அன்புடன்

அனுபிரேம்...


2 comments:

 1. பேயாழ்வார் திருவடிகளே சரணம்!!


  ஓம் நமோ நாராயணா..


  ஸ்ரீ பேயாழ்வார் அருளிச்செய்த மூன்றாம் திருவந்தாதி படித்து மகிழ்ந்தேன் அனு, நன்றி.
  வாழ்த்துக்கள்.
  படங்கள் எல்லாம் அருமை.

  ReplyDelete
 2. அழகிய படங்களுடன் இவர் பற்றிய பகிர்வு சிறப்பு.

  ReplyDelete