20 November 2019

விளையாட்டு மைதானத்தில் .....


வாழ்க வளமுடன் 





இந்த போட்டியில்  பங்குப் பெறுவது என்பது ... அனுபவம் கிடைக்கும் என்னும் எண்ணத்திலேயே கலந்துக் கொண்டோம் ...

பல மாநிலத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர் . இந்த மாதரி icse விளையாட்டு  போட்டிகள் தேசிய அளவில் நடைபெறுவது இதுவே முதல் முறை .....

அதனால் சில பல குழப்பங்கள் இருந்தாலும் நூற்றாண்டுகள் பழமையான இந்த la martein college ல் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன...

















சின்னவர் ஜாலி யாக 




பையன் 








போட்டி ஆரம்பிக்கும் முன் நல்ல மழை.. ..பின் மதியம் நல்ல வெயில் என இரு வேறு சீதோசன நிலை. என்ன சீதோசன நிலை மாறுதல் என்றாலும் போட்டி நடைபெறும். அனைத்திற்கும் போட்டியாளர்கள் பழகி இருக்கு வேண்டும். அப்படி தான் அனைத்து மாணவர்களும் பங்குப்பெற்றனர் ...

பையன் அவரது under 14 பிரிவில் 15 ம்  இடம் பெற்றார்...


அவருக்கு மிக மகிழ்ச்சியே இத்தனை பேரின் நடுவில் பங்குபெற்றது. எங்களுக்கும் மிக வித்தியாச அனுபவங்கள். இது போன்ற விளையாட்டு போட்டிகளை இப்படி உடன் இருந்து முழு நேரமும் இது வரை நானும் பார்த்தது இல்லை . அதனால்  மிக மகிழ்ச்சியாகவே  அந்த நிமிடங்களை அனுபவித்தேன் .


முந்தைய பதிவு

1.லக்னோ பயணத்தில் ...



தொடரும் ...




அன்புடன்
அனுபிரேம்




5 comments:

  1. வணக்கம் சகோதரி

    விளையாட்டு மைதான படங்கள், காணொளி அனைத்தும் நன்றாக உள்ளது. நம் குழந்தைகள் விளையாட்டுத் துறையில் ஈடுபட்டு அதில் கலந்து கொள்ளும் போது நமக்கு மகிழ்ச்சியே..! அதை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.. தங்கள் மகன் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பரிசுகள் வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி. என்னுடைய வாழ்த்துக்களை அவருக்கு தெரிவியுங்கள். அவரை இத்துறையில் ஊக்குவித்த தங்களுக்கும் வாழ்த்துக்களுடன், பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. படங்கள், வீடியோ அருமை. .அவரை ஊக்கப்படுத்தி இத்தனைதூரம் அழைத்து வந்ததற்கு உங்களுக்கும் நல்ல அனுபவம். உங்கள் மகன் மென்மேலும் போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. படங்கள் காணொளி அனைத்தும் அருமை.
    மகனுக்கு வாழ்த்துக்கள்.
    மேலும் மேலும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றியும் நல்ல அனுபவங்களும் பெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மிக அருமை, விளையாட்டில் வெற்றி பெறுவதை விட பங்கேற்பதே பெருமைதானே.

    ReplyDelete
  5. அருமையான அனுபவப்பகிர்வு. வாழ்த்துகள்.
    தமிழ் விக்கிபீடியா டிசம்பர் 2019இல் நடத்துகின்ற ஆசிய மாதம் போட்டியில் கலந்துகொண்டு கட்டுரைகளை எழுதி வருகிறேன். இந்த மாதம் 30ஆம் நாள் வரை இப்போட்டி நடைபெறுகிறது. தமிழில் இல்லாத செய்திகளை/பதிவுகளை ஆங்கில விக்கிபீடியாவிலிருந்து தமிழுக்குக் கொண்டு வரும் என்னுடைய சிறிய முயற்சி. ஒரு நாளைக்குக் குறைந்தது ஒரு கட்டுரையாவது எழுத/மொழிபெயர்க்க திட்டமிட்டு எழுதி வருகிறேன். ஆதலால் கருத்துரை இடுவதில் தாமதமாகிறது. பொறுத்துக்கொள்க.

    ReplyDelete