இன்று ( 4.11.2௦19) பொய்கையாழ்வார் திருநட்சித்திரம். .....
ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர்
இவர்.....
பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த ஆண்டு - 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை - செவ்வாய்
எழுதிய நூல் - முதல் திருவந்தாதி
பாடல்கள் - 100
சிறப்பு - திருமாலின் சங்கின் அம்சம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி
முந்தைய பதிவுகள் ..
பொய்கையாழ்வார் வைபவம்
பொய்கையாழ்வார்
அன்புடன்
அனுபிரேம்...
ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் அவதரித்தவர்
இவர்.....
பொய்கையாழ்வார் வாழி திருநாமம்!
செய்யதுலா வோணத்திற் செகத்துதித்தான் வாழியே
திருக்கச்சி மாநகரஞ் செழிக்கவந்தோன் வாழியே
வையந்தகளி நூறும் வகுத்துரைத்தான் வாழியே
வனசமலர்க் கருவதனில் வந்தமைந்தான் வாழியே
வெய்யகதிரோன் தன்னை விளக்கிட்டான் வாழியே
வேங்கடவர் திருமலையை விரும்புமவன் வாழியே
பொய்கைமுனி வடிவழகும் பொற்பதமும் வாழியே
பொன்முடியுந் திருமுகமும் பூதலத்தில் வாழியே...... !
பொய்கையாழ்வார்
பிறந்த ஊர் - காஞ்சிபுரம், திருவெக்கா பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர்,
பிறந்த ஆண்டு - 7ம்நூற்றாண்டு
நட்சத்திரம் - ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி)
கிழமை - செவ்வாய்
எழுதிய நூல் - முதல் திருவந்தாதி
பாடல்கள் - 100
சிறப்பு - திருமாலின் சங்கின் அம்சம்
ஸ்ரீ பொய்கையாழ்வார் அருளிச்செய்த முதல் திருவந்தாதி
ஒன்றும்மறந்தறியேன் ஓதநீர்வண்ணனைநான் *
இன்றுமறப்பனோ? ஏழைகாள்! - அன்று
கருவரங்கத்துள் கிடந்து கைதொழுதேன்கண்டேன் *
திருவரங்கமேயான்திசை.
6 2087
திசையும் திசையுறுதெய்வமும் * தெய்வத்
திசையும்கருமங்களெல்லாம் * -அசைவில்சீர்க்
கண்ணன்நெடுமால் கடல்கடைந்த * காரோத
வண்ணன் படைத்தமயக்கு.
7 2088
மயங்கவலம்புரி வாய்வைத்து * வானத்து
இயங்கும்எறிகதிரோன்தன்னை * - முயங்கு அமருள்
தேராழியால்மறைத்தது என்? நீ திருமாலே! *
போராழிக்கையால் பொருது.
8 2089
பொருகோட்டோரேனமாய்ப் புக்கிடந்தாய்க்கு * அன்றுஉன்
ஒருகோட்டின்மேல்கிடந்ததன்றே * - விரிதோட்ட
சேவடியைநீட்டித் திசைநடுங்கவிண்துளங்க *
மாவடிவின்நீயளந்தமண்.
9 2090
மண்ணும்மலையும் மறிகடலும்மாருதமும் *
விண்ணும்விழுங்கியதுமெய்யென்பர் * - எண்ணில்
அலகளவுகண்ட சீராழியாய்க்கு * அன்றுஇவ்
வுலகளவும்உண்டோ? உன்வாய்.
10 2091
வாயஅவனையல்லது வாழ்த்தாது * கைஉலகம்
தாயவனையல்லது தான்தொழா * - பேய்முலைநஞ்சு
ஊணாகவுண்டான் உருவொடுபேரல்லால் *
காணாகண் கேளாசெவி.
11 2092
செவிவாய்கண்மூக்கு உடலென்றைம்புலனும் * செந்தீ
புவிகால் நீர்விண்பூதமைந்தும் * - அவியாத
ஞானமும்வேள்வியும் நல்லறமும்என்பரே *
ஏனமாய்நின்றாற்குஇயல்வு.
12 2093
இயல்வாக ஈன்துழாயானடிக்கேசெல்ல *
முயல்வார்இயலமரர்முன்னம் * - இயல்வாக
நீதியாலோதி நியமங்களால்பரவ *
ஆதியாய்நின்றாரவர்.
13 2094
அவரவர்தாம்தாம் அறிந்தவாறேத்தி *
இவரிவரெம்பெருமானென்று * - சுவர்மிசைச்
சார்த்தியும் வைத்தும்தொழுவர் * உலகளந்த
மூர்த்தியுருவேமுதல்.
14 2095
முதலாவார்மூவரே * அம்மூவருள்ளும்
முதலாவான் மூரிநீர்வண்ணன் * - முதலாய
நல்லானருளல்லால் நாமநீர்வையகத்து *
பல்லாரருளும்பழுது.
15 2096
முந்தைய பதிவுகள் ..
பொய்கையாழ்வார் வைபவம்
பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
ஓம் நமோ நாராயணா..
அன்புடன்
அனுபிரேம்...
பொய்கையாழ்வார் திருவடிகளே சரணம்!!
ReplyDeleteஓம் நமோ நாராயணா..
அருமையான பதிவு.
படங்கள் தெய்வீகம்.
சிறப்பான பகிர்வு.
ReplyDeleteபாராட்டுகள். படங்கள் வழமை போல சிறப்பு.
பகிர்வு நன்று.
ReplyDelete