31 December 2023

15.எல்லே! இளங்கிளியே!

 15.எல்லே இளங்கிளியே...

இளமை தங்கிய கிளிபோல் இருப்பவளே! எழுந்திராய். வாய்ப்பேச்சில் நீ சமர்த்தையாய் இருக்கின்றாய் என்பதை நாங்கள் அறிவோம். தோழிகள் அனைவரும் வந்தனரா, வந்தனர், ஆச்சரியமான செய்கைகளை உடையவனான கண்ணனை பாடுவதற்காக எழுந்திராய்.



30 December 2023

14.உங்கள் புழைக்கடை

   14. உங்கள் புழைக்கடை

பெண்ணே! உன் புழைக்கடை யில் உள்ள குளத்தில் செங்கழுநீர் மலர்ந்தது. அல்லி மலர் மூடிக் கொண்டது. சன்னியாசிகள் கோயிலுக்கு சங்கு ஊதச் செல்கின்றனர். சங்கு சக்கரம் ஏந்திய கமலக்கண்ணனை நாம் துதித்தல் வேண்டும். எழுந்திராய்.



29 December 2023

13.புள்ளின் வாய் கீண்டானை

13.புள்ளின் வாய் கீண்டானை

பகாசுரனையும், இராவணனையும் அழித்தவனான கண்ணனைப் பாடி நோன்பு நோற்கும் பிள்ளைகள் களத்திற்குச் சென்று விட்டார்கள். சுக்கிரன் உச்சிப்பட்டு வியாழன் மறைத்தான். நீயும் எங்களோடு சேர்ந்து வாராய்.



28 December 2023

12. கனைத்து இளங் கற்று

12. கனைத்து இளங் கற்று

கிருஷ்ண கைங்கர்யமாகிற மேலான செல்வத்தை உடையவனுடைய தங்கையே! இராவணனைக் கொன்ற இராமனை நினைத்தாலே மனதுக்கு இன்பத்தைத் தரும். அவன்  பேரைச் சொல்லியும் நீ வாய் திறவாமல் இருக்கின்றாய். நீ சீக்கிரம் எழுந்திராய்.


27 December 2023

11.கற்றுக் கறவை

11.கற்றுக் கறவை

கண்ணனுக்கு ஏற்ற தங்கக் கொடி போன்றவளே ! கிருஷ்ணனின் செல்வப் பெண்டாட்டியே! மயில் போன்ற சாயல் உடையவளே! உன் தோழிமார்களாகிய நாங்கள் உன் முற்றத்தில் வந்து நின்று கண்ணனை துதிக்கின்றோம்! நீ எழுந்து வாராய்.


 

26 December 2023

10.நோற்றுச் சுவர்க்கம்

10. நோற்றுச் சுவர்க்கம்...

பெண்ணே! வாசலைத் தான் திறக்கமாட்டாய். எங்களுக்கு பதிலாவது சொல்லக் கூடாதா? நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை நாம் துதித்தால் அவன் நமக்காக பலனைத் தந்திடுவான். கும்பகர்ணன் தன் உறக்கத்தை உனக்களித்தானா? கதவைத் திற.




25 December 2023

9. தூமணி மாடத்து

 9.தூமணி மாடத்து

வீடு முழுக்க விளக்கு எரிய பஞ்சணை மீது படுத்துறங்கும் மாமன் மகளே! தாழ்ப்பாளை திறந்து விடு, அவளுடைய தாயைப் பார்த்து, உன் மகள் ஊமையா? செவிடா? மீளா உறக்கம் கொண்டாளா? நாங்கள் மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று ஆயிரம் நாமங்களும் சொல்லி விட்டோம். அவள்  எழுந்திருக்கவில்லையே.



24 December 2023

8. கீழ்வானம் வெள்ளென்று

 8.கீழ்வானம் வெள்ளென்று...

பெண்ணே! கீழ்வானம் வெளுத்து விட்டது. எருமைகள் பனிப்புல் சென்று விட்டன. கோபிகைகள் கிருஷ்ணனை துதிக்க போகாமல் உனக்காக அனைவரையும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். அப்பரம் பொருள் இரங்கி அருள் புரிவான். உடனே புறப்பட்டு வா.


23 December 2023

7 .கீசு கீசு என்று

7. கீசு கீசென்று...

பெண்ணே! பாரத்வாஜ பறவைகள் கீசுகீசு என்று ஒளி எழுப்புவது கேட்கவில்லையா? இடைப் பெண்கள் தயிர் கடையும் ஓசை கேட்கவில்லையா? நாங்கள் நாராயணனைத் துதித்து பாடுகின்றோம். கதவைத்திற.



22 December 2023

6.புள்ளும் சிலம்பின காண்

6. புள்ளும் சிலம்பின

பெண்ணே பறவைகள் கூவுகின்றன. கோயிலில் பெரிய சங்கின் ஒளி கேட்டிலையோ, பூதனையின் நச்சுப்பாலை உண்டவனை யோகிகளும், முனிவர்களும் தியானித்து துதிக்கும் ஹரிநாமம் கேட்கவில்லையா. எழுந்து வா.



21 December 2023

5. மாயனை மன்னு

5. மாயனை மன்னு

வடமதுரையில் அவதரித்தவனும், யமுனைத் துறை தலைவனும், திருவிளக்கைப் போன்று ஒளி உடையவனுமான தாமோதரனை தூய புஷ்பங்கள் கொண்டு தூவி, அவன் நாமங்களைப் பாடினால் நம் பாவங்கள் தீயிலிட்ட தூசு போன்று உருத் தெரியாமல் போகும்.


20 December 2023

4. ஆழி மழைக் கண்ணா!

4. ஆழி மழைக் கண்ணா! 

மழைக்கு அதிபதியான வருணனே! நீ கடல் நீரைப் பருகி, நாராயணன் உருவம் போல் கருத்து, பத்மநாபன் கையில் உள்ள சக்கரம் போல் மின்னி, சங்கு போல் இடி இடித்து உலகம் வாழும்படியாக மழை பெய்திடாய்.



19 December 2023

3. ஓங்கி உலகளந்த...

3. ஓங்கி உலகளந்த...

திரிவிக்ரமனை அதிகாலையில் நாம் நீராடி துதித்தால் மாதம் மும்மாரி பெய்யும். விவசாயம் செழித்திடும். பசுக்கள் குடம் குடமாய் நிறைய பால் சொரியும். குறைவற்ற செல்வம் நிறைந்திடும்.




18 December 2023

2. வையத்து வாழ்வீர்காள்!

2. வையத்து வாழ்வீர்காள்! 

இந்த விரதத்தின் போது தினமும் அதிகாலையில் நீராடுவோம். நெய், பால் உட்கொள்ளோம். மைதீட்டோம். மலரைச் சூடோம். செய்யத் தகாதவற்றை செய்யோம். பெரியோர் வழி கடைபிடிப்போம்.




17 December 2023

1. மார்கழித் திங்கள்

 மார்கழித்திங்கள்...

இடைப்பெண்களே! இது மார்கழி மாதம் சந்திரன் பூரணமான நன்னாளில் நாம்
நாராயணனான ஸ்ரீகிருஷ்ணனை வணங்கினால், அவன் நம் விரதத்திற்கான பலனை அளித்திடுவான். வாருங்கள்.




முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.