முந்தைய பதிவுகள்
6.சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்
7. மேல்கோட்டை கல்யாணி தீர்த்தம்
போன பதிவில் மேல்கோட்டை கல்யாணி தீர்த்தத்தின் மஹிமை வாசித்தோம்.
அடுத்து நாம் காண இருப்பது மேல்கோட்டையில் உள்ள ராயகோபுரம். முழுமை அடையாத ஒரு இடம் இது.
நாங்கள் இரவில் சென்றதால் நிலவின் ஒளியுடன் அழகிய காட்சிகள் காண கிடைத்தன.
இந்த ராயகோபுரமானது விஜயநகரப் பேரரசின் (கி.பி. 14-15 நூற்றாண்டு) காலத்தில் கட்டப்பட்ட புகழ்பெற்ற முழுமையற்ற கோயிலாகும்.
இந்த இடம் ஒரு மேட்டின் மீது அமைந்துள்ளது மற்றும் பல அருமையான வேலைப்பாடுகளுடன் கூடிய 4 தூண்களைக் கொண்டுள்ளது. இது ஒரே இரவில் கட்டப்பட்டதாக புராணங்கள் கூறுகின்றன. இவ்விடம் எண்ணற்ற திரைப்பட படப்பிடிப்புகளுக்கான இடமாகவும் உள்ளது.
பல இடங்களில் நரசிம்மர் காட்சிகளே பிரதானமாக உள்ளன.
அற்புதமான வேலைப்பாடுகள் நிறைந்த இடம் . சிறுவர்கள் எல்லாம் மேலே ஏறி விளையாடி கொண்டிருந்தனர். சில காவல் வீரர்களும் இங்கு பாதுகாப்பு பணியில் இருந்ததால், அந்த நேரத்திலும் இங்கு பயம் இல்லாமல் செல்ல முடிந்தது.
திருவாய்மொழி - ஆறாம் பத்து
6- 9 ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்
மண்ணும் விண்ணும் மகிழ* குறள் ஆய் வலம் காட்டி,*
மண்ணும் விண்ணும் கொண்ட* மாய அம்மானே,*
நண்ணி உனை நான்* கண்டு உகந்து கூத்தாட,*
நண்ணி ஒருநாள்* ஞாலத்தூடே நடவாயே.
3540
அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛
No comments:
Post a Comment