13 December 2023

9. அக்கா தங்கை குளம், மேல்கோட்டை

 



முந்தைய பதிவுகள் 






6.சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்

7. மேல்கோட்டை கல்யாணி தீர்த்தம் 

8. மேல்கோட்டை   ராயகோபுரம்


9.அக்கா தங்கை குளம், மேல்கோட்டை  

இவை இரண்டு குளங்களும்  ஒரு படிநிலையால் மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த படிநிலை குளங்களும்  இரண்டு சகோதரிகளால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இந்த இரண்டு குளங்களும் அருகருகே தோண்டப்பட்டு, இடையில் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. 

படிகள் மிக  நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. 

ஹனுமான் கோயிலும், குலசேகர ஆழ்வார் கோயிலும் கரையில் கட்டப்பட்டுள்ளன. 

இந்த குளங்களில் ஒன்றில் உள்ள தண்ணீர் குடிப்பதற்கும் மற்றொன்று துணி துவைப்பதற்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. 

மேலும்  இந்த  குளம் மீன்களால் நிரம்பியுள்ளது, சிறிய ஆமைகளும்  இருந்தன. 








சில மக்கள் இங்கு சிறிய பூஜைகளும்  செய்கிறார்கள். பின் அனைவரும் அமர்ந்து  ஒய்வு எடுக்கிறார்கள்.

செல்லும் பாதை 

வழியில் 


திருவாய்மொழி - ஆறாம் பத்து 

6- 9 ஆழ்வார் எம்பெருமானைக்  கூப்பிடுதல் 


ஞாலத்தூடே நடந்தும் நின்றும்*  கிடந்து இருந்தும்,* 

சாலப் பலநாள்*  உகம்தோறு உயிர்கள் காப்பானே,* 

கோலத் திரு மா மகளோடு*  உன்னைக் கூடாதே,* 

சாலப் பல நாள்*  அடியேன் இன்னும் தளர்வேனோ?   


3541



தொடரும் ....




அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛

No comments:

Post a Comment