02 December 2023

65."ஆரியனைப் பிரிந்தோனோ தெய்வாரியாண்டான் போலே?"

(65) ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வாரி ஆண்டானைப் போலே.




ஒரு சமயம் ஆளவந்தார் திருவரங்கத்திலிருந்து திருவனந்தபுரம் புறப்பட்டார். புறப்படும் முன் தன் சீடரான தெய்வவாரி ஆண்டானிடம் திருவரங்கத்திலேயே தங்கி, மடத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

தெய்வவாரி ஆண்டான் தன் குரு ஆளவந்தாரிடம் அளவு கடந்த பிரேமை கொண்டவர்.

 குருவை விட்டு என்றுமே பிரிந்தது இல்லை. 

ஆளவந்தார் கிளம்பியதும் அவருடைய பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை. 

அவருடைய திருமேனி மெதுவாக வெளுக்க ஆரம்பித்தது. நாளடைவில் இளைத்துப் போய், காய்ச்சல் வந்து, நோய்வாய்ப்பட்டார்.


உடன் இருந்தவர்கள் வைத்தியர்களை அழைத்துக்கொண்டு வந்தார்கள். இவருடைய நாடியைப் பிடித்துப் பார்த்து. இவர் உடம்புக்கு ஒன்றும் இல்லை ஆனால் உள்ளத்தில் தான் ஏதோ ஏக்கம் அதனால் தான் இந்த நோய் என்றார்கள்.

 கூட இருந்த அடியாகள் தன் குருவைப் பிரிந்த ஏக்கம் தான் இவருக்கு இந்த நோய் வரக் காரணம் என்றார்கள்.

 மருத்துவர்கள் ”இந்த வியாதி தீர மருந்து இல்லை. இதற்கு வைத்தியம் உடனே இவரை அவருடைய குருவுடன் அழைத்துச் செல்லுங்கள்!” என்றார்கள்.


கூட இருந்த மற்ற அடியார்கள் மருத்துவர் கூறிய அறிவுரையின்படி அவரைக் கட்டிலோடு திருவனந்தபுரம் நோக்கிச் சுமந்து சென்றார்கள். 

முதல் நாள் குருவிடம் செல்கிறோம் என்ற நினைப்பே அவர் காய்ச்சலைக் குறைந்தது.

 திருவனந்தபுரம் நெருங்க நெருங்க அவருடைய நோய் படிப்படியாகக் குறைந்தது. எழுந்து உட்கார்ந்தார். 

சிரித்துப் பேச ஆரம்பித்தார். பிறகு நன்றாக நடக்க ஆரம்பித்தார். திருவனந்தபுரம் அருகில் சென்றபோது இவருக்கா நோய் வந்தது என்று கூட வந்த அடியார்கள் வியந்தார்கள்.


திருவனந்தபுரத்தில் ஆளவந்தார் பெருமாளைச் சேவித்துவிட்டு வெளியே வந்தபோது, தெய்வாரி ஆண்டான் எதிரில் வந்தார்.


இவ்வளவு நாள் குருவைப் பார்க்காமல் உள்ளம் துடித்துக்கொண்டு இருந்த ஆண்டான் குருவின் பார்த்தவுடன் காலில் விழுந்து அப்படியே தரையிலேயே படுத்திருந்தார் (குரு எழுந்துகொள் என்று சொல்லும் வரையில் எழுத்திருக்கக் கூடாது).


”மடத்தைப் பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டு வந்தேன், ஆனால் இவரே அதை மதிக்காமல் இங்கே வந்துவிட்டாரே என்று ஆளவந்தார் துணுக்குற்று சற்று கோபமாக ”ராமர் சொல் பேச்சைக் கேட்டுப் பரதன் வைத்த இடத்தில் இருந்தார். 

ஆனால் நீரோ என் சொல் பேச்சை கேட்காமல் இங்கே வந்துவிட்டீர். நான் என்ன ராமரைப் போலப் பெரியவனா ? இல்லையே! நீரும் பரதனைப் போலத் தொண்டனா ? இல்லையே!” என்றார்.( 46 - வைத்த இடத்து இருந்தேனோ பரதரைப்போலே!)


தரையில் கிடந்தபடியே இந்தச் சுடுச்செல்லைக் கேட்ட ஆண்டானுக்கு உள்ளம் வெதும்பியது. குருவைத் தேடிக்கொண்டு சிஷ்யனாக வந்தேன். ஆனால் குருவின் கோபத்துக்கு ஆளாகிவிட்டோம். சிஷ்யனாக இருப்பதற்கே இனி அருகதை இல்லாமல் போய்விட்டதே என்று மிகுந்த சோகத்தில் ஆழ்ந்தார். எங்கே எழுந்துகொண்டால் அவர் கோபம் அதிகமாகிவிடுமோ என்று அஞ்சி அப்படியே தரையில் கிடந்தார்.


”என்ன ஆண்டானே ! ராமரைப் போல என்னையும் வீரனாக்காமல் நீர் எழுந்திருக்க மாட்டீரோ ?” என்று ஆளவந்தார் குத்தலாகக் கேட்கத் தெய்வாரி ஆண்டான் செய்வதறியாமல் திகைத்து பாபரப்புடன் எழுந்துகொண்டார்.


கூட வந்தவர்கள் ஆண்டான் திருவரங்கத்தில் நோய்வாய்ப்பட்டு இருந்ததையும், வைத்தியர்களின் அறிவுரைப்படி அவரை அழைத்துக்கொண்டு வந்த கதையும் சொல்ல ஆளவந்தார் அவருடைய குரு பக்தியைக் கண்டு வியந்து, மகிழ்ந்து அவரை அணைத்துக்கொண்டு “ஆண்டானே போய்த் திருவனந்தபுரம் பெருமாளைச் சேவித்துவிட்டு வாரும்!” என்றார்.


ஆண்டான் “என்னுடைய திருவனந்தபுரம் எதிரே இருக்க அங்கே எதற்கு நான் அங்கே போக வேண்டும் ?” என்றார்


தெய்வாரி ஆண்டானின் குருபக்தியைக் கண்டு எல்லோரும் வியந்து நிற்க, ஆளவந்தார் “என்னுடன் வாரும் சேர்ந்து பெருமாளைச் சேவிக்கலாம்” என்று ஆண்டானை கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.


“சாமி! நான் தெய்வாரி ஆண்டானை போல ஆரியனை(குரு) பிரிந்தேனோ ? பிரிந்ததால் மெலிந்தேனோ ? மெலிந்து தளர்ந்தேனோ ? ஆரியனை கண்டவுடன் தெய்வம் என்றேனோ ? எதுவும் நான் செய்யவில்லையே! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்!” என்றாள்.



முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -இரண்டாம் பத்து

2-2 திண்ணன் வீடு


திருமால் பரத்துவத்தை அவதாரத்திலே எடுத்துக்கூறல்

காக்கும் இயல்வினன்* கண்ண பெருமான்,* சேர்க்கை செய்து* தன் உந்தியுள்ளே,* வாய்த்த திசைமுகன்* இந்திரன் வானவர்,* ஆக்கினான்* தெய்வ உலகுகளே. 3028 கள்வா எம்மையும்* ஏழ் உலகும்,* நின் உள்ளே தோற்றிய* இறைவ! என்று,* வெள் ஏறன் நான்முகன்* இந்திரன் வானவர்,* புள் ஊர்தி* கழல் பணிந்து ஏத்துவரே. 3029 ஏத்த ஏழ் உலகும் கொண்ட* கோலக் கூத்தனைக்,* குருகூர்ச் சடகோபன் சொல்,* வாய்த்த ஆயிரத்துள்* இவை பத்துடன்,* ஏத்த வல்லவர்க்கு* இல்லை ஓர் ஊனமே.

3030









66. திருவித்துவக்கோடு

ஸ்ரீ வித்வக்கோட்டுவல்லீ ஸமேத ஸ்ரீ உய்ய வந்தான் ஸ்வாமிநே 

நமஹ


ரகசியம் தொடரும்...



அன்புடன் 

அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment