திருமங்கை மன்னன் திவ்ய தரிசனம்...
பெரிய திருமொழி - மூன்றாம் பத்து
3- 7 கள்வன் சொல்
திருவாலி 3
அன்னையும் அத்தனும் என்று* அடியோமுக்கு இரங்கிற்றிலள்*
பின்னைதன் காதலன்தன்* பெருந் தோள் நலம் பேணினளால்*
மின்னையும் வஞ்சியையும்* வென்று இலங்கும் இடையாள் நடந்து*
புன்னையும் அன்னமும் சூழ்* புனல் ஆலி புகுவர்கொலோ!
1214
முற்றிலும் பைங் கிளியும்* பந்தும் ஊசலும், பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும்* விட்டு அகன்ற செழுங் கோதை தன்னைப்*
பெற்றிலேன் முற்று இழையை* பிறப்பிலி பின்னே நடந்து*
மற்று எல்லாம் கை தொழப் போய்* வயல் ஆலி புகுவர்கொலோ!
1215
காவி அம் கண்ணி எண்ணில்* கடி மா மலர்ப்பாவை ஒப்பாள்*
பாவியேன் பெற்றமையால்* பணைத் தோளி பரக்கழிந்து*
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்* நெடுமாலொடும் போய்*
வாவி அம் தண் பணை சூழ்* வயல் ஆலி புகுவர்கொலோ!
1216
தாய் மனம் நின்று இரங்க* தனியே நெடு மால் துணையா*
போயின பூங் கொடியாள்* புனல் ஆலி புகுவர் என்று*
காய் சின வேல் கலியன்* ஒலி செய் தமிழ் மாலை பத்தும்*
மேவிய நெஞ்சு உடையார்* தஞ்சம் ஆவது விண் உலகே. (2)
1217
முந்தைய பதிவுகள் ...
ஓம் நமோ நாராயணாய நம!!
திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்!
அன்புடன்,
அனுபிரேம் 🌻🌻🌻
No comments:
Post a Comment