முந்தைய பதிவுகள்
6.சுவாமி இராமானுஜரின் ஆதிசேஷ அவதாரம்
7. மேல்கோட்டை கல்யாணி தீர்த்தம்
9.அக்கா தங்கை குளம், மேல்கோட்டை
10.திருநாராயணபுரத்தில் “தமர் உகந்த திருமேனி”
11. பீபீ நாச்சியார்
முகம்மதிய படையெடுப்பின் போது டில்லி சுல்தான் கோயிலை இடித்து விக்ரகங்களையும், பொன் பொருள் எல்லாவற்றையும் கொள்ளையடித்துச் சென்றான் என்றும், திருநாராயணனின் உற்சவமூர்த்தியும் சுல்தானிடம் தான் இருக்கிறதென்றும் அவ்வூர் மக்கள் மூலம் அறிந்தார் இராமானுஜர்.
மன்னன் உதவியுடன் சில சீடர்களை உடன் அழைத்துக் கொண்டு டில்லி சுல்தானை நேரில் கண்டு உற்சவ மூர்த்தியைத் திரும்பத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
சுல்தானுக்கு இராமானுஜரைக் கண்டு வியப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது. அவரைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருந்தான்.
தன் மகள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அந்த விக்ரகத்தை அவளுக்கு விளையாடக் கொடுத்திருந்தான்.
அதைத் திரும்பப் பெறுவதென்பது அவ்வளவு எளிதல்ல.
அதனால் ஒரு நிபந்தனையுடன் அதை எடுத்துச் செல்லலாம என்றான். நிபந்தனை இதுதான்.
இராமானுஜர் உற்சவமூர்த்தியை அழைக்க வேண்டும.
விக்ரகம் தானாகவே அவரிடம் வந்து சேரவேண்டும் என்றான்.
உடனே இராமானுஜர் ஒரு குழந்தையை அழைப்பதுபோல் ''என் செல்லப் பிள்ளாய் வருக'' என்று குழைவா அழைத்தார்.
என்ன ஆச்சரியம்! சிலைவடிவில் இருந்த விக்ரகம் மாறி ஒரு குழந்தை வடிவில் நடந்து வந்து அவர் மடியில் அமர்ந்து கொண்டு மீண்டும் சிலையாயிற்று.
சுல்தான் மலைத்துப் போனான்.
நிபந்தனைப்படியே உற்சவத்துடன் பொன்னும் பொருளும் தந்து அனுப்பி வைத்தான். மேல்கோட்டை உற்சவமூர்த்தி 'செல்லப்பிள்ளை' என்றே அழைக்கப்படுகிறார்.
சுல்தானின் மகள் சிலையைப் பிரிந்திருக்க முடியாமல் மேல்கோட்டையைத் தேடி ஓடி வந்து உற்சவமூர்த்தியை ஆரத்தழுவிக் கொண்டாள்.
அடுத்த நிமிடம் அந்த சிலையுடன் ஐக்கியமாகி விட்டாள்.
அவள் அன்பைப் பாராட்டி அவளைப் போலவே ஒரு சிலை செய்து ‘பீபீ நாச்சியார்” (துலுக்க நாச்சியார்) என்ற பெயரில் நாராயணனுக்கருகில் அமர்த்தி விட்டார் சுவாமி இராமானுஜர்.
செல்வப்பிள்ளை திருவடிகளில் பீபீ நாச்சியார்
மிக நுணுக்கமான சிற்பங்கள் கொண்ட தூண் |
திருவாய்மொழி - ஆறாம் பத்து
6- 9 ஆழ்வார் எம்பெருமானைக் கூப்பிடுதல்
தளர்ந்தும் முறிந்தும்* சகட அசுரர் உடல் வேறா,*
பிளந்து வீய* திருக்கால் ஆண்ட பெருமானே,*
கிளர்ந்து பிரமன் சிவன்* இந்திரன் விண்ணவர் சூழ,*
விளங்க ஒருநாள்* காண வாராய் விண்மீதே.
3542
அன்புடன்,
அனுபிரேம் 💛💞💞💛
No comments:
Post a Comment