பதினாறாம் பாசுரம்- இதில் நந்தகோபன் திருமாளிகை வாயில் காவலர்களையும், அவர் அறையின் காவலர்களையும் எழுப்புகிறாள்.
31 December 2021
30 December 2021
பதினைந்தாம் பாசுரம் - எல்லே! இளங்கிளியே!
பதினைந்தாம் பாசுரம் - இதில் ஆண்டாளும் அவள் தோழிகளும் தன் திருமாளிகைக்கு வருவதான அழகிய காட்சியைக் காண ஆவலுடன் காத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
29 December 2021
பதினான்காம் பாசுரம் - உங்கள் புழைக்கடை
பதினான்காம் பாசுரம். இதில் தான் வந்து எல்லோரையும் எழுப்புவேன் என்று வாக்களித்து அதை மறந்து தன் வீட்டிலேயே படுத்திருக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
28 December 2021
பதிமூன்றாம் பாசுரம் - புள்ளின் வாய்
பதிமூன்றாம் பாசுரம் - இதில் தன் கண்களின் அழகைத் தானே ஏகாந்தத்தில் ரசித்துக்கொள்ளும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். கண்கள் பொதுவாக ஞானத்தைக் குறிக்கும் என்பதால் இவள் எம்பெருமான் விஷயத்தில் பூர்ண ஞானம் உடையவள். இவள் கண்ணன் தானே இவளைத் தேடி வருவான் என்று நினைத்திருக்கிறாள். கண்ணன் அரவிந்தலோசனன் என்று சொல்லப்பட்டிருப்பதால் இவள் அவனுக்குத் தகுதியான கண்ணழகு படைத்தவள்.
27 December 2021
பன்னிரண்டாம் பாசுரம் - கனைத்து இளங்கற்று
பன்னிரண்டாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனான, ஒரு இடையனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
26 December 2021
பதினோறாம் பாசுரம் - கற்றுக் கறவை
பதினோறாம் பாசுரம் - இதில் கண்ணனைப் போலே வ்ருந்தாவனத்திலேயே மிகவும் விரும்பப்படும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
25 December 2021
பத்தாம் பாசுரம் - நோற்றுச் சுவர்க்கம்
பத்தாம் பாசுரம்.... இதில் கண்ணனுக்குப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் எம்பெருமானே உபாயம் என்பதில் உறுதியுள்ள ஸித்த ஸாதன நிஷ்டை, இதனால் அவனால் மிகவும் விரும்பப்படுபவள்.
24 December 2021
ஒன்பதாம் பாசுரம் - தூமணி மாடத்து
ஒன்பதாம் பாசுரம்.... இதில் எம்பெருமானே உபாயம் என்ற விச்வாஸத்துடன், எம்பெருமானுடன் சேர்ந்து பல ரஸங்களை அனுபவிக்கும் ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் ஸீதாப் பிராட்டி ஹனுமானிடம் “ஸ்ரீராமனே வந்து என்னைக் காப்பார்” என்று உறுதியுடன் இருந்ததைப் போலே இருப்பவள்.
23 December 2021
எட்டாம் பாசுரம் - கீழ்வானம்
எட்டாம் பாசுரம்..... இதில் கண்ணனால் மிகவும் விரும்பப்படுபவளும் அதனால் மிகுந்த பெருமையை உடையவளுமான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
22 December 2021
ஏழாம் பாசுரம் - கீசு கீசு என்று
ஏழாம் பாசுரம்... இதில் க்ருஷ்ணானுபவத்தில் தேர்ந்தவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவளோ ஆண்டாள் மற்றும் தோழிகளின் இனிய குரலைக் கேட்பதற்காக உள்ளே காத்திருக்கிறாள்.
21 December 2021
ஆறாம் பாசுரம் - புள்ளும் சிலம்பின
இனி, 6ஆம் பாசுரம் முதல் 15ஆம் பாசுரம் வரை, ஆண்டாள் நாச்சியார், பஞ்சலக்ஷம் குடும்பங்களைக் கொண்ட திருவாய்ப்பாடியில் இருக்கும் கோபிகைகளை எழுப்புவதைக் காட்டும் வகையில் பத்து கோபிகைகளை எழுப்புகிறாள். வேதம் வல்லார்களான அடியார்களை எழுப்பும் க்ரமத்தில் இந்தப் பத்து பாசுரங்கள் அமைந்துள்ளன.
ஆறாம் பாசுரம். இதில் க்ருஷ்ணானுபவத்துக்கு புதியவளான ஒரு கோபிகையை எழுப்புகிறாள். இவள் கண்ணனைத் தானே அனுபவிப்பதிலேயே த்ருப்தி அடைகிறாள் – இது ப்ரதம பர்வ நிஷ்டை – முதல் நிலை. பாகவதர்களுடன் கூடி இருப்பதை உணர்ந்தால், அது சரம பர்வ நிஷ்டைக்குக் (இறுதி நிலை) கொண்டு செல்லும்.
20 December 2021
ஐந்தாம் பாசுரம் - மாயனை மன்னு
ஐந்தாம் பாசுரம் - நாம ஸங்கீர்த்தனத்தில் தொடர்ந்து ஈடுபட்டால் கர்மங்கள் முழுமையாகத் தொலையும் என்று காண்பிக்கிறாள். முன் செய்த வினைகள் தீயினில் போட்ட பஞ்சு போலே அழியும், இனி வரும் வினைகள் தாமரையில் தண்ணீர் போலே ஒட்டாமல் விலகும். முன் செய்த வினைகளை எம்பெருமான் முழுமையாக விலக்குகிறான். ஆனால் வரும் காலத்தில் தெரியாமல் செய்யும் வினைகளை விலக்குகிறான், ஆனால் தெரிந்து செய்யும் வினைகளை அனுபவித்தே தீர்க்கும்படி செய்கிறான்.
19 December 2021
நான்காம் பாசுரம் -ஆழி மழைக் கண்ணா
நான்காம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் செழிப்புடன் இருந்து க்ருஷ்ணானுபவம் செய்ய மழைக்கு தேவதையான பர்ஜந்யனை மாதம் மூன்று முறை மழை பொழியுமாறு ஆணையிடுகிறாள்.
18 December 2021
மூன்றாம் பாசுரம் - ஓங்கி உலகு அளந்த
மூன்றாம் பாசுரம் - வ்ருந்தாவனத்தில் இருப்பவர்கள் தன் க்ருஷ்ணானுபவத்துக்கு அனுமதி அளிப்பதால் அவர்கள் அனைவருக்கும் நன்மைகள் விளைய வேண்டும் என்று ப்ரார்த்திக்கிறாள். எல்லோருக்கும் க்ருஷ்ணானுபவம் கிடைக்க வேண்டும் என்பதே உள்ளர்த்தம்.
17 December 2021
இரண்டாம் பாசுரம் - வையத்து வாழ்வீர்காள்
இரண்டாம் பாசுரம்- க்ருஷ்ணானுபவத்தில் ஈடுபடும்போது நோன்புக்கு அங்கமாக எதைச் செய்யலாம் எதைச் செய்யக்கூடாது என்பதை அறிவிக்கிறாள்.
16 December 2021
முதல் பாசுரம் - மார்கழித் திங்கள்
முதல் பாசுரம் - ஆண்டாள் காலத்தையும், தன் க்ருஷ்ணானுபவத்தில் உதவும் கோப கோபிகைகளையும், எம்பெருமானையும் கொண்டாடி, க்ருஷ்ணானுபவதுக்காக மார்கழி நோன்பை நோற்பதாக ஸங்கல்பம் செய்து தொடங்குகிறாள்.
15 December 2021
நம்பெருமாள் ரத்தினங்கியில் ...
நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...
இராப்பத்து ஒன்றாம் நாள் - நம்பெருமாள் ரத்தினங்கியில் எழுந்தருளி ஆயிரம் கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
14 December 2021
கைசிக ஏகாதசி மஹாத்மியம்
கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.
ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார்.
மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார்.
13 December 2021
நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா ...
வாழ்க வளமுடன் ...
முந்தைய பதிவு ..நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...
பகல் பத்து ஆறாம் நாள்
நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து, மார்பில் கல் வைத்த மகாலட்சுமி பதக்கம், வைரக்கல் அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், காசு மாலை, முத்துச்சரம், வைர காதுகாப்பு உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...
நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து முதல் நாள்...
நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன் இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை,காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதித்தார்.
11 December 2021
-
ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்
-
நம் முன் தற்போது இருக்கும் மிக பெரிய அச்சுறுத்தல் "புவி வெப்பமயமாதல்" அல்லது உலக வெப்பமயமாதல். புவி வெப்பமயமாதல் ...