13 December 2021

நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...

 நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா பகல் பத்து முதல் நாள்...

நம்பெருமாள் கவரிமான் தொப்பாரைக் கொண்டை, தங்க கிளியுடன்  இரத்தின அபயஹஸ்தம், கலிங்கதுரா, பவளமாலை, நெல்லிக்காய் மாலை,காசு மாலை, புஜ கீர்த்தி, பருத்திக்காய் காப்பு  அலங்காரத்தில் பக்தர்களுக்கு அர்ஜுன மண்டபத்தில் சேவை சாதித்தார்.







பகல் பத்து இரண்டாம் நாள் -

நம்பெருமாள்  சவுரிக் கொண்டை, வைர அபயஹஸ்தம், வைரகாதுகாப்பு, தங்க கிளி, நெல்லிக்காய் மாலை, பவள மாலை, தங்க பஞ்ஜாயுத மாலை,  பருத்திக்காய் காப்பு  அலங்காரத்தில் பக்தர்கருக்கு சேவை சாதித்தார்.











பகல் பத்து மூன்றாம் நாள் - 

நம்பெருமாள் அலங்காரக் கொண்டை அணிந்து, காசு மாலை, திருமார்பில் அழகிய மணவாளன் பதக்கம்,  மகாலட்சுமி பதக்கம், வைரஅபயஹஸ்தம், முத்துச்சரம், வைர ஒட்டியானம், ரத்தின திருவடி உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்தார். 















பகல் பத்து நான்காம் நாள்

நம்பெருமாள் சவுரி தொப்பாரக் கொண்டையுடனான சிகை அலங்காரம், முத்துச்சரம், காசுமாலை, ரத்தின அபயஹஸ்தம், முதுகில் முத்து சட்டை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.















பகல் பத்து ஐந்தாம் நாள் 

நம்பெருமாள் ரத்தின பாண்டியன் கொண்ட,  வைர அப யஹஸ்தம், வைர கைக் காப்பு,விமான பதக்கம், நெல்லிக்காய் மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் 
அணிந்து சிறப்பு அலங்காரத்தில் அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவைசாதித்தார்.


















அழகு முதலிய கல்யாண குணங்களுடன் கூடிய எம்பெருமானை, இந்த ஸம்ஸாரத்திலே கண்டு, அந்த எம்பெருமானுக்கு என்ன ஆபத்து வருமோ என்று பயந்து, கால தத்வம் உள்ளவரை இப்படியே நன்றாக இருக்க வேண்டும் என்று பெரியாழ்வார் மங்களாசாஸனம் செய்கிறார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்து ஆண்டு *
பலகோடி நூறாயிரம்,
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா !* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு

மல்லர்களை அடக்கிக் கொன்ற பலம் பொருந்திய திருத்தோள்களையும் மாணிக்கத்தைப் போன்ற நிறத்தையும் உடைய எம்பெருமானே! உன்னுடைய சிவந்த திருவடிகளுக்குப் காலம் உள்ளவரை குறைவற்ற ரக்ஷை இருக்க வேண்டும். ஆழ்வார், முதலில் மனிதர்களின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு தேவர்களின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, பிறகு ப்ரஹ்மாவின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, இறுதியாக பல பல ப்ரஹ்மாக்களின் காலக்கணக்கில் பல ஆண்டுகள் என்று சொல்லி, காப்பிடுகிறார்.

நம்பெருமாள் திருவடிகளே சரணம் ....


தொடரும்...

முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

No comments:

Post a Comment