13 December 2021

நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா ...

வாழ்க வளமுடன் ...

முந்தைய பதிவு ..நம்பெருமாள் வைகுந்த ஏகாதேசி பெருவிழா...


பகல் பத்து ஆறாம் நாள் 

நம்பெருமாள் ரத்தின நீள்முடி கிரீடம் அணிந்து, மார்பில் கல் வைத்த மகாலட்சுமி பதக்கம், வைரக்கல் அட்டிகை, ரத்தின அபயஹஸ்தம், காசு மாலை, முத்துச்சரம், வைர காதுகாப்பு  உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர உள் பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.






 





பகல் பத்து ஏழாம் நாள் -

நம்பெருமாள் க்ரிஷ்ணன் முத்து கொண்டை அணிந்து, கபாய் சட்டை, அடுக்கு பதக்கம், வைர அபயஹஸ்தம், முத்துமாலை உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.














பகல் பத்து எட்டாம் நாள் -

நம்பெருமாள்  முத்து கிரீடம் அணிந்து, ரத்தின மகர ஹண்டிகை, ரத்தின அபயஹஸ்தம், அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் சூடிக்கொண்டு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார்.














பகல் பத்து ஒன்பதாம் நாள்

நம்பெருமாள்   முத்துக்குறிக்காக முத்து பாண்டியன் கொண்டை, முத்து அபயஹஸ்தம், காதுகாப்பு, முத்தங்கி, முத்து ஆபரணங்கள் சூடியவாறு மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஆழ்வார்கள் பின்தொடர பிரகாரங்களில் வலம்வந்து அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளினார். 











இரண்டாம் பாசுரம் - இதில் எம்பெருமான் பரமபதம் ஸம்ஸாரம் என்னும் இரண்டு உலகங்களுடன் இருக்கும் இருப்புக்கு மங்களாசாஸனம் செய்கிறார்.

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே 

அடியார்களான எங்களுக்கும் ஸ்வாமியான உனக்கும் உள்ள ஸம்பந்தம் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய திருமார்பிலே எப்பொழுதும் இருப்பவளான அழகும் ஆபரணங்களும் இளமையும் பொருந்திய பெரிய பிராட்டியார் எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய வலது திருக்கையிலே அழகும் ஒளியும் பொருந்தி இருக்கும் திருவாழி எப்பொழுதும் இருக்க வேண்டும். உன்னுடைய இடது திருக்கையிலே இருக்கும், யுத்தங்களிலே ஆயுதமாகப் புகுந்து எதிரிகளின் உள்ளத்தை சிதறடிக்கும் பெருத்த கோஷத்தை எழுப்பும் அந்த பாஞ்சஜந்யம் என்னும் திருச்சங்கம் எப்பொழுதும் இருக்க வேண்டும். ஆழ்வார் அடியார்களைச் சொல்லுவதன் மூலம் ஸம்ஸாரத்தையும், பிராட்டி, திருவாழி, திருச்சங்கத்தைச் சொல்லுவதன் மூலம் பரமபதத்தையும் சொல்லுகிறார்.

நம்பெருமாள் திருவடிகளே சரணம் ....


தொடரும்...


முக நூல் வழி இப்படங்களை பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள் பல ...


அன்புடன் 
அனுபிரேம் 

No comments:

Post a Comment