பன்னிரண்டாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமானுக்கு நெருங்கிய தோழனான, ஒரு இடையனின் தங்கையான ஒரு கோபிகையை எழுப்புகிறாள்.
கனைத்து இளங் கற்று எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏலோர் எம்பாவாய்
இளங்கன்றுகளை உடைய எருமைகளானவை கதறிக்கொண்டு,
தம் கன்றுகளிடம் இரக்கம் கொண்டு, அக்கன்றுகளை நினைத்து தம் முலைகளில் பாலைப் பெருக்க, அதனாலே வீடு முதுவதும் ஈரமாகி சேறாக்கும்படி இருக்கக்கூடிய,
க்ருஷ்ண கைங்கர்யம் என்கிற உயர்ந்த செல்வத்தை உடையவனின் தங்கையே!
எங்கள் தலையிலே பனி பெய்யும்படிக்கு உன்னுடைய் வீட்டின் வாசலைப் பிடித்துக்கொண்டு,
அழகியதான இலங்கைக்குத் தலைவனான ராவணனை கோபத்தாலே கொன்றவனாய்,
மனதுக்கு இனிமையைக் கொடுப்பவனான ராமன் எம்பெருமானை நாங்கள் பாடியபோதும் நீ பேசவில்லை.
இனியாவது எழுந்திரு.
இது என்ன ஒரு பெரிய உறக்கம்? திருவாய்ப்பாடியில் உள்ள அனைத்து வீட்டில் இருப்பவரும் உன்னுடைய தூக்கத்தை அறிந்து கொண்டுவிட்டனர்.
நன்றி - Upasana Govindarajan Art |
ஸ்ரீ ஆண்டாள், ஆழ்வார் திருநகரி |
அன்புடன்
அனுபிரேம்
வணக்கம் சகோதரி
ReplyDeleteஇன்றைய திருப்பாவை பாசுரமும் அழகு. மனம் கனிந்து பாடிக் கொண்டேன். அதன் விளக்கத்தையும் மிக அழகாக சொல்லியுள்ளீர்கள். பாசுரம் குறித்த ஓவியமும் நன்று. ஆழ்வார் திருநகரி ஸ்ரீஆண்டாளை கண்ணும், மனமும் குளிர தரிசனம் செய்து கொண்டேன். தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.