30 November 2017

கைசிக ஏகாதசி

கைசிக ஏகாதசி மஹாத்மியம்


இன்று கைசிக ஏகாதசி (30.11.2017)



கைசிகப் புராணம்....., வராக மூர்த்தி, தான் மடியில் இருத்தியிருந்த நாச்சியாருக்காக  உரைத்த பெருமை கொண்டது.

இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்..

பூமிதேவி பிறவித் துயரிலிருந்து விடுபட எளிதான வழி என்ன என்று கேட்க ....

அதற்கு வராஹப் பெருமாள் இசைத் தொண்டே சிறந்த வழி என்றும்

 இவ்வாறு  கைசிகப் பண்ணிசைத்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு....,

வைகுண்டம் சென்றடைந்த நம்பாடுவானின் கதையை பூமி தேவிக்கு கூறுகின்றார்..




27 November 2017

The Blue Umbrella ..ரஸ்கின் பாண்ட்




வாழ்க வளமுடன்,


       சில மாதங்களுக்கு முன் பையனுக்கு பள்ளியில் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்தாங்க. அதாவது ஆங்கில இலக்கியத்தில் ஏதேனும் இரு எழுத்தாளர்களை  பற்றி scrab book   செய்யணும்னு .

அதில் பையன் ஒருவர் பழையவர்,  ஒரு புதியவர் என்ற கணக்கில்

சரோஜினி நாயுடு அவர்களையும்

 ரஸ்கின் பாண்ட் அவர்களையும்  தேர்வு செய்து

அவர்களின் படங்களை பார்த்தும்...

 அவர்களின் படைப்புகளை வாசித்தும் குறிப்புகள் எடுத்தான்.


scrab book ற்கு எதுவும் பிரிண்ட் அவுட் எடுக்காமலே,

அனைத்தும் நாங்களே வரைந்தும் எழுத்தியும் செய்தோம்.

வரைந்தது எனது வேலை,   எழுதியது பையனின் வேலை😛





26 November 2017

மஹா கும்பாபிஷேக விழா...



அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன்,

ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா,

துறையூர்

திருச்சி....




கடந்த  (24.11 .2017)  24ம் தேதி எங்கள் ஊரில்   நடைபெற்ற

 மஹா கும்பாபிஷேக விழாவின் 

சில காட்சி  தொகுப்புகள் 


இன்று





17 November 2017

கைவண்ணத்தில்... விளக்கு வைக்கும் தட்டு




தமிழ் மாதங்களில் கார்த்திகை மன உறுதியை தரும் என்பது ஐதீகம்.

திருவண்ணாமலை மகாதீபம், கார்த்திகை பெளர்ணமி என விஷேசங்கள் நிறைந்தது கார்த்திகை மாதம்.




தமிழில் பாகுலம் என்றால் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும்.

நம் தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழை பொழியும் மாதம் கார்த்திகை மாதம்.

கார் என்றும், கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாக மலரும் காலம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை எனப்படும் விண்மீன் கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.

கார்த்திகை மாத பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் நாம் தமது இல்லங்களிலும் கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் .

திருக்கார்த்திகையை அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன் என்றும் அழைப்பதுண்டு.

மகாவிஷ்ணு, பிரம்மா இருவருக்கும் ஜோதிப் பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி!



விளக்கு வைக்கும் தட்டு...

இத்தகைய சிறப்பான மாதத்தில்  தினமும் மாலை வாசலில் விளக்கு ஏற்றிவோம் ..



அப்பொழுது விளக்கிலிருந்து எண்ணெய் கசிந்து அந்த இடத்தை அழுக்காக்கும் ...அதனால்  சிறு  தட்டீன் மீது விளக்கு ஏற்றுவோம் ...


அவ்வாறு வைக்கும் தட்டை கொஞ்சம் அழகுபடுத்தி வைப்பதே ...



இன்றைய எனது கைவண்ணத்தில்...




14 November 2017

திரு இந்தளூர்...


திரு இந்தளூர் ... ஸ்ரீ பரிமள ரங்கநாத பெருமாள் கோயில், மாயவரம்



இந்த எம்பெருமானுக்கு சுகந்தன்-  என்று பெயர்!

 பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்!

அவர் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்!

அதானால் பரிமள ரங்க நாதன்!

மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட!

கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும்,
 கால் மாட்டில் கங்கை அன்னையும் உள்ளார்கள்!


தாயார்: ஸ்ரீ பரிமள ரங்க நாயகி

மூலவர்: பரிமள ரங்கநாதன்


 கடந்த வாரம்  அங்கு  நடைபெற்ற கருட சேவையின் சில படங்கள் இன்று ...







05 November 2017

கோபி மஞ்சூரியன்...!

கோபி மஞ்சுரியன்


அனைவருக்கும் பிடித்த சுவையான கோபி மஞ்சுரியன்...

இன்றைய....படங்களுக்காக சமையலில்...