Showing posts with label காவேரி. Show all posts
Showing posts with label காவேரி. Show all posts

26 February 2021

காவேரியும் காட்சிகளும் ...

 வாழ்க வளமுடன் ..

கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள அகண்ட காவேரியில் எடுத்த காட்சிகள் இன்றைய  பதிவில் ...

ஆற்றின் நடுவே மணல்வெளி 

16 November 2020

துலா மாதத்தில் ...

 வாழ்க வளமுடன் ...


துலா மாதம் முடிந்து இன்று கார்த்திகை ஒன்று , இன்று முடவன் முழுக்கு . இந்த வருடம்  முதல் முறையாக துலா முழுக்கு செய்யும் பாக்கியம் கிடைத்தது. அன்று எடுத்த வீடியோ பதிவுடன் இன்றைய பதிவு ...


02 August 2018

வாழி காவேரி..



வாழ்க வளமுடன்..

நடந்தாய் வாழி காவேரி! 
நாடெங்குமே செழிக்க! 
நன்மையெல்லாம் சிறக்க!







17 January 2018

காவேரியில் ....

அனைவருக்கும் அன்பின் வணக்கங்கள்....


வாழ்க வளமுடன்......




திருச்சியில்  மேலூரின்  அருகே ....  காவேரியின் நடுவே ஒரு சூரிய உதயத்தில்  எடுத்த சில படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு...




19 September 2017

காவேரி மஹா புஷ்கரம் ...



புஷ்கரம் ....நதிகளை வணங்கும் விழா...


நவகிரகங்களில் ஒருவரான  குருபகவான் பிரம்மனை நோக்கி ஒரு வேண்டுதலோடு கடுமையான தவம் மேற்கொள்கிறார். 

குருவின் கடும் தவ வலிமையை எண்ணி வியந்த பிரம்மன், குருவின் முன்பு தோன்றி குருவே உனது கோரிக்கை தான்  என்ன என்று வினவுகிறார். ...

உடனே குருபகவான், பிரம்மா உங்களிடம் உள்ளதைத்தான் நான் கேட்பேன் என்றார், கேளுங்கள் என்றதும் தாங்கள் வைத்திருக்கும் கமண்டலத்தில் (சொம்பு) இருக்கும் புஷ்கரம் என்னும் தீர்த்தத்துடன் தான் எப்பொழுதும் வசிக்க வேண்டும் என்று குரு வரம் கேட்க பிரும்மாவும் சம்மதித்தார்......


 புஷ்கரம் ....பிரம்மா என்னை உங்களிடம் இருந்து பிரித்துவிடாதீர்கள் என்று கெஞ்சியது. 

அதனால் தர்ம சங்கடமடைந்த பிரம்மன், தான் கொடுத்த வாக்கை பின்வாங்காமல்,  குருவுக்கும்,புஷ்கரத்திற்கும் இடையே  ஒரு சமாதான உடன்படிக்கை மேற்கொண்டார் . 

அதனையேற்று செயல்பட  இருவரும் ஒப்புக்கொண்டனர். ..

அது முதல் பிரும்மாவின் கமண்டல தீர்த்தமான புஷ்கரம் என்னும் தீர்த்தம் தேவ லோகத்திலிருந்து பூமிக்கு வந்து ஒவ்வொரு வருஷமும் சுமார் பன்னிரெண்டு நாட்கள் ஒவ்வொரு நதியிலும் வாசம் செய்கிறது.

அதாவது   புஷ்கரம், குருபகவான் சஞ்சரிக்கும் மேஷ ராசி முதல் மீன ராசிவரை உள்ள 12 ராசிகளிலும்  அந்தந்த ராசிக்குரிய புண்ணிய  நதிகளில் வாசம் செய்து மக்களுக்கு நன்மை  பாலிப்பது என்று முடிவெடுக்கப்பட்டது.