தொடர்ந்து வாசிப்பவர்கள்

15 August 2018

எங்கள் நாடு

 பாரத நாடு

எங்கள் நாடு

பாரதியாரின் வரிகளில்..மன்னும் இமய மலையெங்கள் மலையே 

      மாநில மீதது போற்பிறி திலையே! 

இன்னறு நீர்க்கங்கை யாறெங்கள் யாறே 

      இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? 

பன்னரும் உபநிட நூலெங்கள் நூலே 

      பார்மிசை யேதொரு நூல்இது போலே? 

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே

      போற்றுவம் இஃதை எமக்கிலை ஈடே 1


13 August 2018

ஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

இன்று  (13.8.2018)  ஆண்டாள் அவதாரம்  திருநட்சத்திரம் .....

 (ஆடிப்பூரம்) ........


ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!

உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!

திருவல்லிக்கேணி ஸ்ரீ கோதை நாச்சியார்

11 August 2018

அறப்பளீஸ்வரர் திருக்கோவில், கொல்லிமலை

வாழ்க நலம்..


 கொல்லிமலையில் அருளும் சிவபெருமானுக்கு அறப்பளீஸ்வரர் என்பது திரு நாமம்.

09 August 2018

வல்வில் ஓரி விழா 2௦18வாழ்க வளமுடன்


வல்வில் ஓரி விழா 2௦18

செம்மேடு,கொல்லி மலை,நாமக்கல்.


ஆண்டுதோறும்  ஆடி மாதம் 18 ஆம் தேதி சேரமன்னன் வல்வில் ஓரியின் நினைவாக  வில்வித்தைப் போட்டி  செம்மேடு,கொல்லி மலையில்  நடைப்பெறுகிறது.....


08 August 2018

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோவில், திருவண்பரிசாரம்
திருவண்பரிசாரம் /திருப்பதிசாரம்


மூலவர்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன்

தாயார்: கமலவல்லி நாச்சியார்

உற்சவர்: திருவாழ்மார்பன்

கோலம்: வீற்றிருந்த திருக்கோலம்

திசை: கிழக்கு

விமானம்: இந்திர கல்யாண விமானம்

தீர்த்தம்: லக்ஷ்மீ தீர்த்தம்
04 August 2018

காவேரி தாயாருக்கு சீர் வரிசை...
ஸ்ரீரங்கம்  அம்மாமண்டபத்தில் நேற்று  நடைபெற்ற ஆடி 18  (03.08.2018) அரங்கன் வருகையும் , காவேரிதாயாருக்கு மரியாதை செய்ததும் அழகிய படங்களாக ...
02 August 2018

வாழி காவேரி..வாழ்க வளமுடன்..

நடந்தாய் வாழி காவேரி! 
நாடெங்குமே செழிக்க! 
நன்மையெல்லாம் சிறக்க!31 July 2018

சுவாமி நம்மாழ்வார் பிறந்ததலம்

வாழ்க வளமுடன்

நம்மாழ்வார் பிறந்ததலம்

திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உண்டானது.

சுவாமி நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கையின் பிறந்த ஊர் இது.
27 July 2018

ஜடாயுபுரீஸ்வரர் திருக்கோவில் , ஜடாயுபுரம், திருப்பதிசாரம்வாழ்க வளமுடன்


அடுத்து நாங்கள் சென்றது   நாகர்கோவில் அருகில் இருக்கும் திருப்பதிசாரத்திற்கு  ...   “திருவாழ்மார்பனை” காண...

24 July 2018

நாகர்கோவில்..வாழ்க வளமுடன்


குமரியம்மன் திருக்கோவிலில் தரிசனம் செய்த பின்..கன்னியாகுமரியில் இருந்து கிளம்பிவிட்டோம்...
12 July 2018

திருவள்ளுவர் சிலை

   வாழ்க நலம்...


                    
அடுத்து நாங்கள் செல்ல வேண்டியது    திருவள்ளுவர் சிலை ஆனால் அங்கு நடக்கும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அங்கு செல்ல  அனுமதி இல்லை...

அதனால்    விவேகானந்தர் பாறையிலிருந்தே பார்த்து ரசித்தோம்..

10 July 2018

விவேகானந்தர் பாறை

வாழ்க நலம்


மாத்தூர் தொட்டிப் பாலம் பார்த்துவிட்டு...அடுத்தநாள் நாங்கள் காண  சென்றது


விவேகானந்தர் பாறை


 சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரிக்கு வந்திருந்த போது கடலுக்குள் அமைந்திருக்கும் இந்தப் பாறைக்கு நீந்திச் சென்று, மூன்று நாட்கள் தியானம் செய்திருக்கின்றார். எனவே அவரது நினைவாக இந்தப் பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டு 1972 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. அதன் பிறகு இந்தப் பாறைக்கு விவேகானந்தர் பாறை என்ற பெயர் ஏற்பட்டது.

07 July 2018

வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..நாதமுனிகள் (ஆனி – அனுஷம்)


ஆனி தனில் அனுடத்தில் அவதரித்தான் வாழியே

ஆளவந்தார்க்க் உபதேசமருளிவைத்தான் வாழியே

பானு தெற்கிற்கண்டவன் சொல் பலவுரைத்தான் வாழியே

பராங்குசனார் சொல்பிரபந்தம் பரிந்து கற்றான் வாழியே

கானமுறத் தாளத்தில் கண்டிசைத்தான் வாழியே

கருணையினால் உபதேசக் கதியளித்தான் வாழியே

நானிலத்தில் குருவரையை நாட்டினான் வாழியே

நலம்திகழும் நாதமுனி நற்பதங்கள் வாழியே


06 July 2018

பாலத்தின் கீழிருந்து...மாத்தூர் தொட்டிப் பாலம்

வாழ்க நலம்..


முந்தைய பதிவில் மாத்தூர் தொட்டிப் பாலத்திலிருந்து கீழே பார்த்தோம் இன்று கீழிருந்து மேலே காணலாம்....05 July 2018

காணி நிலம்


எனது இரண்டாவது சிறுகதை....எங்கள் ப்ளாக் கில் வெளிவந்தது.காணிநிலம்


கேசவன் தன் நிலத்தில் நின்று சுத்தி பார்த்தான்….

எங்கும் பசுமை...எதிலும் பசுமை…

பார்க்க பார்க்க மனம் பூரா சந்தோசம்…

கடவுளே! ரொம்ப நன்றி...எங்களுக்கு இந்த நிலத்தையும் , தண்ணியையும், காத்தையும் கொடுத்தத்துக்கு ன்னு சொல்லி கிட்டே..03 July 2018

மாத்தூர் தொட்டிப் பாலம் 1வாழ்க நலம்...


 திற்பரப்பு   படகுத்துறை பார்த்து விட்டு அடுத்து நாங்கள் சென்றது மாத்தூர் தொட்டிப் பாலத்திற்கு...29 June 2018

கரையோரம்...வாழ்க நலம்...


திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு  அடுத்து நாங்கள் படகில் செல்ல அனுமதி சீட்டு வாங்கியதால்...படகுத்துறைக்கு செல்ல ஆரம்பித்தோம்..அங்கு தான் ஒரு ஆச்சிரியம்  காத்திருந்தது....28 June 2018

திற்பரப்பு நீர்வீழ்ச்சி


வாழ்க வளமுடன்...


அடுத்து நாங்கள் சென்ற இடம் திற்பரப்பு நீர்வீழ்ச்சி.


 ‘குமரி குற்றாலம்’ என அழைக்கப்படும் இது நாகர்கோவிலில் இருந்து 42 கி.மீ. தொலைவில் உள்ளது.

கோடை காலத்திலும் வற்றாத அருவி.


25 June 2018

விவேகானந்த கேந்திரம்,விவேகானந்தபுரம்

வாழ்க வளமுடன்


அடுத்த நாள் காலையில் நாங்கள் சென்ற இடம்   விவேகானந்த கேந்திரம்..

இங்கு உள்ள கடற்கரையில் சூரிய உதயம் காண்பதற்கு மிக  அழகாக  இருக்கும் என்று கேள்விப்பட்டதால்  காலை 6 மணிக்கு நாங்கள் அங்கு இருந்தோம்..இந்த கடற்கரை காலை 6 மணி முதல் 7. 30 வரை மட்டுமே திறந்து இருக்கும்...23 June 2018

பெரியாழ்வார்இன்று  (23.6.2018)  பெரியாழ்வார்    அவதார தினம் .....

 (ஆனியில் – ஸ்வாதி)........


ஆழ்வார்  வாழி திருநாமம்!

நல்லதிருப் பல்லாண்டு நான்மூன்றோன் வாழியே

நானூற்றிரு பத்தொன்றும் நமக்குரைத்தான் வாழியே

சொல்லரிய ஆனிதனிற் சோதிவந்தான் வாழியே

தொடைசூடிக் கொடுத்தாள் தான் தொழுந்தமப்பன் வாழியே

செல்வநம்பி தன்னைப்போற் சிறப்புற்றான் வாழியே

சென்றுகிழியறுத்துமால் தெய்வமென்றான் வாழியே

வில்லிபுத்தூர் நகரத்தை விளக்கினான் வாழியே

வேதியர்கோன் பட்டர்பிரான் மேதினியில் வாழியே


22 June 2018

மரக்காணம் - ஸ்ரீ வேணுகோபால சுவாமி திருக்கோவில்

வாழ்க நலம்விழுப்புரம் மாவட்டம் , மரக்காணத்தில்  உள்ள

ஸ்ரீ ராதா ருக்மணி சமேத  ஸ்ரீ வேணுகோபால சுவாமி  திருக்கோவிலில் நடைபெற்ற உற்சவத்திலிருந்து சில படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு..அப்பாவின் பார்வையாக...21 June 2018

சின்ன சின்ன...வாழ்க வளமுடன்..


என்ன சின்ன சின்ன..

இன்று சின்ன சின்ன கவிதைகளின் தொகுப்பு...


சமீபத்திய ஊர் சுற்றலின் போது எடுத்த படத்தை எங்கள் நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப அங்கிருந்து வந்த சுட சுட கவிதைகளின் தொகுப்பு இது...

பகிர்ந்த படம் இது தான்...19 June 2018

சன் செட் பாயிண்ட் (sunset point )

வாழ்க வளமுடன்..sunset point ...காந்தி மண்டபத்திலிருந்து  கடற்கரை சாலையிலே செல்லும் போது இந்த இடத்திற்கு செல்லாம்..

ஆட்டோ...வேன் வசதிகளும் உண்டு..


பலர் சூரிய மறைவை காண இங்கு ஆவலுடன் காத்திருந்தனர்...


14 June 2018

உயிருள்ளவரை உன்னோடு தான்……

வாழ்க வளமுடன்...


உயிருள்ளவரை உன்னோடு தான்……


மீண்டும் ஒரு வாசிப்பு அனுபவத்துடன் வந்துள்ளேன்...

வழக்கம் போல் இது கதைக்கான  விமர்சனம் அல்ல... எனது வாசிப்பு அனுபவம்...


வநிஷா…..இது இவரின் மூன்றாவது கதை....


13 June 2018

முப்பரிமாண ஓவியங்கள்...

 முப்பரிமாண ஓவியங்கள்   (3D Art) 

அதாவது இரு-பரிமாண ஓவியங்கள் முப்பரிமாணத் தன்மையுடன் இருப்பதோடு, ஒருவித வேடிக்கையான செய்கையுடன்  பங்கேற்பாளரின் பங்களிப்பை கோருவதாகவும் இருக்கும்.


பார்ப்பவர் அந்த ஓவியத்துடன் ஓர் விளையாட்டிலோ அல்லது செய்கையிலோ  ஈடுபடுவது போன்று புகைப்படம் எடுத்துக் கொள்ளும் வகையில் புத்திசாலித்தனமான கோணங்களுடன் அந்த ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.


நாங்கள் சென்ற மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் இந்த  முப்பரிமாண ஓவியங்கள் 3D ஓவியங்கள் இருந்தன..

வெகு சுவாரஸ்யம்...அப்படங்கள் இன்று தங்கள் பார்வைக்கு...


08 June 2018

காந்தியும் சார்லி சாப்ளினும் மெழுகு பொம்மை அருங்காட்சியகத்தில் அடுத்து நாங்கள் ரசித்தவை...


காந்தி மற்றும்  சார்லி சாப்ளினின் தத்ரூப சிலைகளை...


06 June 2018

மெழுகு பொம்மை அருங்காட்சியகம் (wax museum )- கன்னியாகுமரியில் (6)


  வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 

3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)

4.காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)அடுத்து சிறிது ஓய்வுக்கு பின் நாங்கள் சென்றது மெழுகு பொம்மை அருங்காட்சியகம்...


கன்னியாகுமரி பஸ் நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது. 


இங்கு பல தலைவர்களின் மெழுகு பொம்மை உள்ளது . அனைத்தும் ரொம்ப சுவாரஸ்யம்...பார்க்கவே அருமையாக இருந்தது...நாங்கள் சென்றது மதிய நேரம் அதனால் கூட்டமும் இல்லை... பொறுமையாக காண முடிந்தது...


நாம் அருகில் சென்றும் படம் எடுத்துக் கொள்ளலாம்...அன்னை தெரசா

அப்துல் கலாம்02 June 2018

300 வது பதிவு...


அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்....


இந்த பதிவு  இத்தளத்தின் 3௦௦ வது பதிவு...

31 May 2018

பட்டாணி பருப்பு வடை...


இனிய காலை வணக்கம்..


இந்த மாதம் ஒரு இனிப்பு...ஒரு பானகம் எல்லாம் பார்த்தாச்சு..இப்போ காரமா ஒரு வடை...


28 May 2018

ஸ்ரீ நம்மாழ்வார்


இன்று  (28.5.2018)  நம்மாழ்வார்    அவதார தினம் .....

 (வைகாசியில் – விசாகம்)........
ஆழ்வார்  வாழி திருநாமம்!திருக்குருகைப் பெருமாள் தன் திருத்தாள்கள் வாழியே

திருவான திருமுகத்துச் செவியென்னும் வாழியே

இருக்குமொழி என்னென்ஞ்சில் தேக்கினான் வாழியே

எந்தை எதிராசர்க்கு இறைவனார் வாழியே

கருக்குழியில் புகா வண்ணம் காத்தருள்வோன் வாழியே

காசினியில் ஆரியனைக் காட்டினான் வாழியே

வருத்தமற வந்தென்னை வாழ்வித்தான் வாழியே

மதுரகவி தம் பிரான் வாழி வாழி வாழியே


25 May 2018

23 May 2018

காந்தி மண்டபம் -கன்னியாகுமரியில் (4)

வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 

3.அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)   காந்தி மண்டபம்


மகாத்மா காந்தியடிகளின் அஸ்தி கரைப்பதற்கு முன் வைக்கப்பட்ட இடம் தான்...இந்த  நினைவாலயம்.

முக்கடல் சங்கமத்தில் மூழ்கி நீராடுவதற்கு முன் தேச தந்தைக்கு இறுதி மரியாதை செல்லுத்துவதற்கு வசதியாக இது அமைக்கப்பட்டுள்ளது.

21 May 2018

அரசு அருங்காட்சியகம் - கன்னியாகுமரியில் (3)

வாழ்க வளமுடன்..

முந்தைய பதிவுகள்..


1..  கன்னியாகுமரியில்...

2.சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோயில்..கன்னியாகுமரி 


இன்று ..

அரசு அருங்காட்சியகம்- கன்னியாகுமரிதென்னிந்திய கோயில்களின் கைவினை கலைபொருட்கள் தொகுத்து வைக்கப்பட்டுள்ள காட்சியகம்.

 இது கடற்கரை சாலையில் அமைந்துள்ளது.


கடற்கரைக்கு செல்லும் முன் நாங்கள் இங்கு சென்றோம்...