04 December 2018

புளியஞ்சோலை சுற்றுலா

வாழ்க நலம்.....






புளியஞ்சோலை, கிழக்குத் தொடர்ச்சி மலைகளுள் கொல்லிமலை பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி ஆகும்.

இது திருச்சிராப்பள்ளியில் இருந்து சுமார் 72 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.



 துறையூரில் இருந்து 28 கி.மீ.,தொலைவில் உள்ளது. 







நாங்கள் சென்றது போன கோடையில் ...






நாங்கள் சென்ற போது  புளியஞ்சோலையில்  நீர்வரத்து அதிகம் .....என்று சொல்ல ஆசை தான்


ஆனால் என்ன செய்வது  ..  நாங்கள் சென்றபோது அங்கு நீர்வரத்தே இல்லை..

மிக  சொற்ப நீர் தான் ஓடியது.


அதையும் சிறிது தூரம் நடந்து சென்றே கண்டுபிடித்தோம் ...

அந்த இடம்  கொஞ்சம் சுத்தமாவும் , குளுமையாகவும் இருக்கவே அங்கேயே  மகிழ்ந்து விளையாண்டு வந்தோம்...

 மிகவும் குளிர்ச்சியான பரவசமான இடம் அது..











மிக அருமையான இடம் தான் ,  நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது ..... இந்த இடம் முழுவதும் நீரால் நிரம்பி இருக்குமாம்...


நீர்வரத்து அதிகமாக இருக்கும் போது சென்று காண வேண்டும் ...

தொடரும்


அன்புடன்
அனுபிரேம்




8 comments:

  1. அழகான இடம்.
    ஜீவசாமதி இருக்கு போல் இருக்கே!
    சுவரில் சித்தர்கள் படம் வரைந்து இருக்கே! போனீர்களா அங்கு.
    பிள்ளைகளுக்கு அருவிக்கரை ஓரம் விளையாட இடம் கிடைத்தது மகிழ்ச்சி.
    விளையாடி வந்தது மகிழ்ச்சி அளித்து இருக்கும் எல்லோருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இல்ல மா அங்க போகலை ..எங்களுக்கு நேரமும் ஆகிடுச்சு..அப்புறம் அங்க ஏதோ வேலையும் நடந்துகிட்டு இருந்துச்சு அதான்..


      கொஞ்சம் தண்ணி நாளும் பசங்க ரொம்ப சந்தோசமா இருந்தாங்க..

      Delete
  2. அழகான இடம்தான் போல! வரண்டிருக்கும் ஆறுகளை கண்டால் மனசு வலிக்குதுப்பா

    ReplyDelete
    Replies
    1. மழைகாலத்தில் அங்க பொங்கி தண்ணி போகுமாம் ராஜி க்கா கூட வந்த அண்ணா சொன்னார் ..

      Delete
  3. இந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன்...

    தண்ணீர் இல்லையென்றாலும் அழகான பகுதியாகத் தானே தெரிகின்றது...
    வாய்ப்புக் கிடைக்கும் போது சென்றுவரவேண்டும்!...

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. அட! புளியஞ்சோலை போய் வந்தீங்களா...ஹையோ செமையான இடம் அனு. அங்கு தொடங்கும் இடத்தில் ஒரு உணவுக் கடை இருக்குமே...அப்புறம் நடக்கும் முன் அங்கு கொஞ்சம் இயற்கை உபாதைகளைக் கழிக்கவும் வீடு போன்று....உங்கள் படத்தில் இப்போது அந்த இடம் நல்லாவே டெவலப் ஆனது போல இருக்கு.

    நாங்கள் சென்றிருந்த போது நீர் வரத்து நன்றாக இருந்தது. அதிகம் இல்லை என்றாலும் முழுவதும் ஓடிக் கொண்டிருந்தது. ட்ரெக்கிங்க்....

    இதன் வழியாகவும் கொல்லி மலை போகலாம்...ட்ரெக் செய்து....அருமையான இடம் அனு...இது...எனக்கு மிகவும் பிடித்த இடம்.

    உங்கள் படங்கள் அருமைஅய இருக்கு.. தண்ணீர் கொஞ்சம் சுத்தமாகவும் இருக்கு. துறையூரிலிருந்து ஒரு மணி நேரம் ஆகும் பேருந்து என்றால்....அந்தக் கோயில் கூட இப்ப மாறியிருக்கு...

    கீதா

    ReplyDelete
  5. நல்லதோர் இடம் போலத் தெரிகிறது. தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  6. மிக அருமையாக இருக்குது அனு படங்கள், மிக அழகிய மனதுக்கு இதம் தரும் இடங்கள்.. ஆனா அந்த தண்ணி வற்ற்றிய கற்களைப் பார்க்கத்தான் என்னமோ பண்ணுது மனது..

    ReplyDelete