13 December 2018

ரங்கநதி - இந்திரா செளந்தர்ராஜன்

வாழ்க வளமுடன்

இன்றைய வாசிப்பு அனுபவத்தில்

  ரங்கநதி -.இந்திரா செளந்தர்ராஜன் அவர்களின் நாவல் .





என்ன சொல்ல வார்த்தைகள் இல்லா பிரமிப்பு இந்த நாவலில் ... பிணம் தூக்கி என்னும் வார்த்தையை சாதாரணமாக கூட நம்மால் சொல்ல இயலாது …..ஆனால் இந்த நாவலில் வார்த்தைக்கு வார்த்தை , வரிக்கு வரி அதிகம் வருகிறது… எண்ண இயலா கதாபாத்திரம்..ஆனால் நம் எண்ணங்களில் வலம் வரும் பாத்திரம் நாயகனும்,நாயகியும் .. மனதிற்கு நெருக்கமாக அமைந்த நாவல் இது ....அதற்கு காரணம் ஸ்ரீரங்கமும், காவிரியும் ....எத்துனை முறை சென்றாலும் மீண்டும் மீண்டும் செல்ல வேண்டும் என்றே மனம் வேண்டும் ... அடுத்து காவிரி சூழலில் சிக்கி பலியான பல உயிர்கள் … எத்துனை ஆசைகளுடன் , குளிக்க , பரிகாரம் பண்ண , சுற்றுலாவில் மகிழ என எண்ணி, அங்கு இறங்கி மீளா உயிர்கள் பல ... பல வைணவ சித்தாந்தங்களை தெள்ளத் தெளிவாக ஆணித்தரமாக கூறுகிறார் கதையாசிரியர்…..எனக்கு அதுவும் மிக பிடித்த விஷயம் ஆனதால்.. அங்கேயும் இந்த கதை இன்னும் இன்னும் பிடித்துவிட்டது….. பல பேரின் வாழ்க்கை சூழல் அவர்களின் மனநிலை என பல விஷயங்கள்….. நான்கு சுவற்றுக்குள் இருக்கும் பெண்கள் பல நேரங்களில் மிக ஆக்ரோஷமாக ,சுயநலமாக இருப்பதற்கு காரணம் ...அவர்களின் சுயத்தை யாரும் புரிந்து கொள்ளாதது என்ற அந்த வசனம் நிதர்சன உண்மை…… பல நேரங்களில் நம் வாழ்வியலில் காணும் பெண்கள் பலர் ... அடுத்தவர்களை பற்றி மட்டும் பேசுபவர்களாக … அடுத்தவரின் துன்பத்தில் மகிழ்பவர்களாக இருப்பதற்கு காரணம் ..அவர்களின் மோசமான குடும்ப சூழல்களே.. நல்ல குடும்ப சூழல் அமையாதவர்கள் தன் மன புழுக்கத்தை இவ்வாறு தன் மனகுழப்பத்தை வெளியேற்றி விடுகின்றனர்…. அதில் அவர்களுக்கு ஒரு மகிழ்ச்சி … காவிரி தாய் என்பவள் ஆத்மார்த்தமான அன்புக்கு உரியவள் என்றும்…. தவறு செய்பவர்களை தண்டிக்கும் தாய் எனவும்….அவளின் இரு பக்கங்களின் நியாயங்களை கூறும் விதம் அழகு ... இந்த நாவலை முடிக்கும் முன் நானும் பல முறை….அந்த காவிரியில் மூழ்கி எழுந்து வந்து விட்டேன்... வாய்ப்பு கிடைக்கும் போது வாசித்து பாருங்கள் ...நல்ல அனுபவங்கள் கிடைக்கும்.

அன்புடன்
அனுபிரேம்



6 comments:

  1. படித்ததில்லை. இந்திரா சௌந்தர்ராஜன் கதை என்றால் அமானுஷ்யம் கலந்து சுவாரஸ்யமாகஇருக்கும்.​

    ReplyDelete
  2. கதையை படிக்க ஆவலை ஏற்படுத்திய விமர்சனம் அருமை.

    ReplyDelete
  3. இந்திரா சௌந்தரராஜன் நாவல்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். இதுவரை இந்த புத்தகத்தை கேள்விப்படவே இல்லம்மா.

    பகிர்வுக்கு நன்றி அனு

    ReplyDelete
  4. இதுவரை படிக்கவில்லை. விரைவில் படிப்பேன்.

    ReplyDelete
  5. ஓ படித்ததில்லை கிடைச்சால் படிக்கோணும்..

    ReplyDelete