19 December 2018

திருப்பாவை – பாசுரம் 4

ஆழிமழைக்கண்ணா -

நாடெங்கும் மழை நீரை பெய்யச் செய்து நாங்கள் மார்கழியில் மகிழ்ச்சியுடனே நீராடவேண்டும்:




ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்* 

ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி* 

ஊழி முதல்வன் உருவம்போல் மெய் கறுத்து* 

பாழியந் தோள் உடைப் பற்பநாபன் கையில்*

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்று அதிர்ந்து* 

தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல் 

வாழ உலகினில் பெய்திடாய்* 

நாங்களும் மார்கழி நீர் ஆட மகிழ்ந்து-ஏலோர் எம்பாவாய்


நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு



மண்டல வர்ஷத்துக்குத் தலைவனான வருணதேவனே!

 சிறுதும் ஒளிக்காமல்  கடலில் புகுந்து ,நீரை மொண்டு ,இடிஇடித்து ஆகாயத்தில் ஏறி  திருமாலின் திருமேனி போல் ,
கருத்து அழகான தோள் கொண்ட பத்பநாபன் கையில் 
உள்ள சக்கரம்போல் மின்னலடித்து, அவனுடைய சங்கம் போல், அதிர்ந்து முழங்க ,
 உன்னுடைய வில்லாகிய சார்ங்கம் வீசியபாணங்ள் போல் மழை பெய்து உலகம் அனைத்தும் வாழ, நாங்களும்  மகிழ்ந்து மார்கழி நோன்புக்கு  நீராடுவோம்.




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

7 comments:

  1. ஆண்டாள் திருவடி சரணம்.

    ReplyDelete
  2. இந்துக்கள் வழிப்பாடு தன்னலம், குடும்பநலத்தோடு சமூகம் நலன் சார்ந்தே இருக்கும் என்பதுக்கு இந்த பாடல் உதாரணம்ப்பா

    ReplyDelete
  3. மிக அழகான படங்களுடன் திருப்பாவை பகிர்வு...

    வாழ்க நலம்..

    ReplyDelete
  4. ஆழி மழைக்கண்ணனை வேண்டியாகிற்று. இப்ப தமிழ்நாட்டின் தலைநகரத்துக்கு ரொம்பவே அவசியம் இந்த ஆழிமழைக்கண்ணன்...ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்து ஏறி* சரமழைபோல் சென்னையில் பெய்திடாய்...நு...இல்லைனா ரொம்ப கஷ்டம்...தண்ணியே இல்லை சென்னையில் ரொம்ப மோசம்

    கீதா

    ReplyDelete
  5. மழை வேண்டும் என்றால் இந்த பாடலை தினம் பாட வேண்ட வேண்டும் என்பார்கள்.
    படங்கள் எல்லாம் அழகு.

    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.

    ReplyDelete