26 December 2018

திருப்பாவை – பாசுரம் 11

கற்றுக் கறவை

"பெண்ணே! நீ அசையாமல், பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன? "


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர் தம் பொற்கொடியே

புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண்டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு




கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை 
எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், 

மாசுமருவற்றவனுமான கோபாலனை 
தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே!

 புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற

 அழகுடைய மயில் போன்றவளே! 

நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும்
 உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள்.

 அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். 

செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! 

இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! 

அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?.






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. பாசுரம் நன்று வாழ்க நலம்.

    ReplyDelete
  2. பாசுரம் படித்து படங்களின் அழகை ரசித்து ஆண்டளை வேண்டிக் கொண்டேன்.

    ReplyDelete