17 December 2018

திருப்பாவை – பாசுரம் 2

வையத்து வாழ்வீர்காள்!

நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்





வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற் கடலுள்

பையத் துயின்ற பரமன் அடி பாடி,

நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,

மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,

செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாறு எண்ணி உகந்து ஏலோர் எம்பாவாய்.





            நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு

பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு
செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்,
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம்.
கோள் சொல்லமாட்டோம். தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம் என்று இவ்வாறெல்லாம் எண்ணி, செய்வதே  நம் பாவை நோன்பு.




ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.




அன்புடன்,
அனுபிரேம்.

5 comments:

  1. அழகான படங்களுடன் பதிவு அருமை.
    ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் .

    ReplyDelete
  2. பாவை நோன்பின் விளக்கம் நன்று.

    ReplyDelete
  3. பாவை நோன்பின் விளக்கம் இந்த வருடம்தான் அறிந்தேன்

    ReplyDelete
  4. மார்கழி திருப்பாவை இடம் பெறத் தொடங்கிவிட்டதா சூப்பர்...நல்ல விளக்கம் அனு...படங்களும் அருமை..ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடியாச்சு இன்று ஆனால் இப்பத்தான் நான் வையத்துள் வந்திருக்கேன் பாருங்க...ஹா ஹா ஹா

    ஹெப்பல்லா ஏரியா முகப்புப் படம்? பார்த்தால் அப்படித் தெரிந்தது அதான் கேட்டேன்...நல்லாருக்கு அனு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ..இது எங்க வீட்டியின் அருகே உள்ள ஏரி படம் கீதா க்கா...

      Delete