29 December 2018

திருப்பாவை – பாசுரம் 14

உங்கள் புழக்கடை

"எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது நீ உறங்குவது முறையோ?"




உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்

செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்

செங்கற் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்

தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்

நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்

சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.

          நன்றி திரு.கேஷவ் அவர்களுக்கு


உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன.
அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன,

காவி ஆடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள் தங்கள் கோயில்களுக்கு சங்கூதப் போகிறார்கள்.

எங்களை முன்னதாக ஏழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே வெட்கமில்லாதவளே, 


பேச்சு மட்டும் இனிமையாக பேசுபவளே !

சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய
கமலக்கண்ணனை பாட வேண்டும் எழுந்திரு!






ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்.



அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும். பாவம் புள்ள!

    ReplyDelete
  2. தொடர்ந்துட்டேதான் இருக்கோம் அனு...

    ஆண்டாள் படங்கள் அழகா இருக்கு..

    கீதா

    ReplyDelete