30 January 2023

மார்கழி கோலங்கள் ....

வாழ்க வளமுடன் ...

இந்த வருடம் எங்கள்  வீட்டில் போட்ட மார்கழி கோலங்கள் உங்கள் பார்வைக்கு ....
27 January 2023

பழனி முருகன் கோயில் கும்பாபிஷேகம்...

 பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக விழா 16 ஆண்டுகளுக்குப் பின் இன்று சிறப்பாக  நடைபெற்றது. அக்காட்சிகளின்  தொகுப்பு இன்று ...


26 January 2023

நமது குடியரசு தினம் ....

 

  இந்தியர்களாகிய நாம் இன்று  74ஆவது  குடியரசு தினத்தை கொண்டாடுகின்றோம்........!24 January 2023

தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை

 தை அமாவாசை திருநாங்கூர் கருட சேவை

தைமாதம் 8ஆம் தேதி (22-01-2023) ஞாயிற்றுக்கிழமை.. தை‌ அமாவாசை திருநாங்கூர் 11 திவ்யதேச எம்பெருமான்களின் பிரம்மாண்ட மங்களாசாசன கருட சேவை உத்ஸவம் நடைப்பெற்றது. 15 January 2023

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💞💞

💞💞  அனைவருக்கும்  இதயம் கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் !! 💞💞14 January 2023

ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்...

 ஆண்டாள் வாழித்திருநாமம்


திருவாடிப் பூரத்து  செகத்து உதித்தாள் வாழியே

திருப்பாவை முப்பதும்  செப்பினாள் வாழியே

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே

மருவாரும்  திருமல்லி வள நாடி வாழியே

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப் பாதங்கள் வாழியே 

30. திருப்பாவை - வங்கக் கடல் கடைந்த மாதவனைக்

 முப்பதாம் பாசுரம் - எம்பெருமான் தன் ஆசைகளைப் பூர்த்தி செய்வதாகச் சொல்ல, ஆண்டாள் இப்பொழுது கோபிகை பாவத்தை விட்டு, தானான தன்மையில் இப்பாசுரத்தைப் பாடுகிறாள். 

அவள் யாரொருவர் இந்த முப்பது பாசுரங்களையும் கற்றுக் கொண்டு பாடுகிறார்களோ, அவர்கள் தன்னைப் போன்ற பரிசுத்த பாவத்துடன் இல்லாவிடினும், தனக்குக் கிடைத்த அதே கைங்கர்ய ப்ராப்தி அவர்களுக்கும் கிடைக்கும் என்று அறுதியிடுகிறாள். 
13 January 2023

29. திருப்பாவை - சிற்றஞ்சிறு காலே வந்து

 இருபத்தொன்பதாம் பாசுரம் -  இதில் மிகவும் முக்யமான கொள்கையை வெளியிடுகிறாள் – அதாவது, கைங்கர்யம் நம் ஆனந்தத்துக்கு இல்லை அவனுடைய ஆனந்தத்துக்கு மட்டுமே. மேலும் க்ருஷ்ணானுபவத்தில் கொண்ட மிகப் பெரிய அவாவினால், இந்த நோன்பை அதற்கு ஒரு வ்யாஜமாக மேற்கொண்டதையும் தெரிவிக்கிறாள்.
12 January 2023

28. திருப்பாவை - கறவைகள் பின் சென்று கானம்

 இருபத்தெட்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமான் அனைத்து ஆத்மாக்களுடன் கொண்டுள்ள நிருபாதிக ஸம்பந்தம், (ஆண்டாளாகிய) தான் எந்த ஸாதனத்திலும் ஈடுபட முடியாத இயலாமை, எம்பெருமானின் பெருமை, அவன் தானே யவரையும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்  உஜ்ஜீவிப்பிக்கும் தன்மை ஆகியவைகளை விளக்குகிறாள்.


11 January 2023

27. திருப்பாவை - கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!

  இருபத்தேழாம் பாசுரம் - ஆண்டாள் எம்பெருமான் அனுகூலர் மற்றும் ப்ரதிகூலர்களை தன்னிடம் ஈர்த்துக் கொள்வதாகிய விசேஷ குணத்தை விளக்குகிறாள். மேலும் உயர்ந்த புருஷார்த்தம், எம்பெருமானுடன் எப்பொழுதும் பிரியாமல் இருந்து தொடர்ந்து கைங்கர்யம் செய்வதாகிய ஸாயுஜ்ய மோக்ஷமே என்பதை நிரூபிக்கிறாள்.

10 January 2023

26. திருப்பாவை - மாலே ! மணிவண்ணா!

 இருபத்தாறாம் பாசுரம் -  இதில் நோன்புக்குத் தேவையான உபகரணங்கள் என்ன என்பதை அவனுக்கு அறிவிக்கிறாள். 

முன்பு எதுவும் வேண்டாம் என்று சொன்னவள், இப்பொழுது மங்களாசாஸனம் செய்வதற்கு பாஞ்சஜந்யாழ்வான் முதலிய கைங்கர்யபரர்கள், அவன் திருமுகத்தைத் தெளிவாகக் காண ஒரு விளக்கு, அவன் இருப்பை அறிவிக்கும் கொடி, அவனுக்கு நிழல் கொடுக்கும் விதானம் போன்றவைகளைக் கேட்கிறாள். 

நம் ஆசார்யர்கள், ஆண்டாள் இவற்றைத் தான் செய்யும் க்ருஷ்ணானுபவம் முழுமையாகவும் முறையாகவும் அமைவதற்கு இவ்வுபகரணங்களை வேண்டுகிறாள் என்று காட்டுகின்றனர்.

09 January 2023

25. திருப்பாவை - ஒருத்தி மகனாய்

  இருபத்தஞ்சாம் பாசுரம் - எம்பெருமான் அவர்களிடம் நோன்புக்கு ஏதாவது தேவையா என்று கேட்க அவர்கள் அவன் குணங்களுக்கு மங்களாசாஸனம் செய்ததால் அவர்கள் துன்பங்கள் விலகின என்றும், இனி அவனுக்குக் கைங்கர்யம் செய்வது ஒன்றே வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
08 January 2023

24. திருப்பாவை - அன்று இவ்வுலகம்

 இருபத்து நாலாம் பாசுரம் - அவன் அவ்வாறு அமர்ந்ததைக் கண்டு அவனுக்கு மங்களாசாஸனம் செய்கிறாள். பெரியாழ்வார் திருமகளாராதலால், ஆண்டாளின் லக்ஷ்யம் எம்பெருமானுக்கு மங்களாசாஸனம் செய்வதே. ஸீதாப் பிராட்டி, தண்டகாரண்யத்து ருஷிகள், பெரியாழ்வார் போலே ஆண்டாளும் அவள் தோழிகளும் எம்பெருமான் நடையழகைக் கண்டதும் மங்களாசாஸனம் செய்தார்கள். மேலும் இப்படிப்பட்ட ம்ருதுவான திருவடிகளை உடைய எம்பெருமானை நடக்க வைத்துவிட்டோமே என்றும் வருந்தினார்கள்.07 January 2023

23. திருப்பாவை - மாரி மலை முழைஞ்சில்

  இருபத்துமூன்றாம் பாசுரம் - இதில் கண்ணன் எம்பெருமான் ஆண்டாளை வெகுகாலம் காக்க வைத்ததை எண்ணி, அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்கிறான். அதற்கு அவள் எம்பெருமானைப் படுக்கையை விட்டு எழுந்து, சில அடிகள் நடந்து, அவனுடைய சீரிய ஸிம்ஹாஸனத்தில் எழுந்தருளி, சபையில் தன் விண்ணப்பத்தை ஒரு ராஜாவைப் போலே கேட்குமாறு ப்ரார்த்திக்கிறாள்.
06 January 2023

22 . திருப்பாவை - அங்கண் மா ஞாலத்து

 இருபத்திரண்டாம் பாசுரம் -  இதில் எம்பெருமானிடம் தனக்கும் தன் தோழிகளுக்கும் வேறு புகலில்லை என்பதையும், விபீஷணாழ்வான் ஸ்ரீராமனிடம் சரணடைய வந்தாப்போலே தாங்கள் வந்துள்ளதையும் அறிவிக்கிறாள். மேலும் தான் எல்லா ஆசைகளையும் துறந்துவிட்டதையும் எம்பெருமானின் அருளையே வேண்டுவதையும் அவனுக்கு அறிவிக்கிறாள்.
05 January 2023

21. திருப்பாவை - ஏற்ற கலங்கள்

  இருபத்தொன்றாம் பாசுரம் - இதில் கண்ணனின் ஆபிஜாத்யம் (ஸ்ரீ நந்தகோபனுக்கு மகனாகப் பிறந்தது), பரத்வம், திடமான வேத சாஸ்த்ரத்தால் அறியப்படும் தன்மை முதலிய குணங்களைக் கொண்டாடுகிறாள்.
04 January 2023

20. திருப்பாவை - முப்பத்து மூவர்

  இருபதாம் பாசுரம் - இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் சேர்த்து எழுப்பி நப்பின்னைப் பிராட்டியிடம் “நீ எங்களையும் அவனையும் நன்றாகச் சேர்த்து, அனுபவிக்கும்படி செய்” என்று கேட்கிறாள்.
03 January 2023

19. திருப்பாவை - குத்து விளக்கு

  பத்தொன்பதாம் பாசுரம் - இதில் கண்ணனையும் நப்பின்னைப் பிராட்டியையும் மாறி மாறி எழுப்புகிறாள்.
02 January 2023

18. திருப்பாவை - உந்து மதகளிற்றன்

 பதினெட்டாம் பாசுரம் - எப்படி எழுப்பியும் எம்பெருமான் எழுந்திருக்காமல் இருக்க, நப்பின்னைப் பிராட்டியைப் புருஷகாரமாக முன்னிட்டுக் கொண்டு எழுப்பினால், கண்ணன் எம்பெருமானை எழுப்பலாம் என்றெண்ணி அவ்வாறே செய்கிறாள். 
01 January 2023

17. திருப்பாவை - அம்பரமே தண்ணீரே

 பதினேழாம் பாசுரம் - இதில் ஸ்ரீ நந்தகோபன், யசோதை மற்றும் நம்பி மூத்த பிரானை (பலராமன்) எழுப்புகிறாள்.