31 January 2023

ரங்கஸ்தலம் ...

 வாழ்க வளமுடன் ..


முந்தைய பதிவில்  ஜடாயு பூங்கா பதிவுடன் நிறுத்தி இருந்தேன். ஒரு நாள் பயண பதிவை பல மாதங்களாக எழுதுவதை நினைத்தால்  கொஞ்சம் வருத்தமாகவே உள்ளது. ஆனாலும்  இடையில் பல பயணங்கள், வழக்கமாக போடும்  பதிவுகள் என நேரம் மிக விரைவாகவே செல்லுகின்றன . இத்தொடரை முடித்த பின்னே  காசி பயண தொடரை பகிர வேண்டும். 

1. லேபக்க்ஷி 

அடுத்து நாங்கள் சென்றது  ரங்கஸ்தலம் ....


பெங்களூரில் இருந்து 70 கிமீ தொலைவில் சிக்கபல்லாபூர், திப்பனஹள்ளி கிராமத்தில் உள்ள கோவில் இது. 


லேபக்க்ஷி  கோவிலில் இருந்து 70 km  தொலைவில் உள்ளது.அங்கு 11மணிக்கு கிளம்பி இங்கு 12மணிக்கு வந்தோம்.

இந்த ரங்கஸ்தலா ஸ்ரீ ரெங்கநாதர் கோவில் சோழர்களால் கட்டப்பட்டு பின்னர் விஜயநகரப் பேரரசால் உருவாக்கப்பட்ட மிக பழமையான கோவில்.





அங்கு செல்லும் வழியே கொஞ்சம் காடு  போல தான் இருந்தது. அருகில் கடைகள், வீடுகள் ஏதும் இல்லை. இக்கோவில் மிக ரம்யமான இடத்தில்  அமைதியாக  உள்ளது. நாங்கள் போன போது வெகு சிலரே  இருந்தனர், ஆனால்  நிறைய நிறைய குரங்குகள், சேட்டைகார பிள்ளைகள் ....














இக்கோவில் மோக்ஷ ரங்கநாதர் கோயில்  என்றும் அழைக்கப்படுகிறது. நந்தி மலைத் (nandhi hills)  தொடரில் அமைந்துள்ளது.

 மேலும் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ள ஆதி ரங்கம், சிம்ஷாவில் உள்ள மத்திய ரங்கம்  மற்றும் ஸ்ரீரங்கத்தின்  ரெங்கநாதரை தரிசித்த பிறகு, இந்த கோயிலுக்கு ஒரு பக்தர் சென்றால், அவர்கள் மோட்சத்தை அடைவார்கள் என்பது உள்ளூர் புராணம்.





 தொடரும் ...


அன்புடன் 
அனுபிரேம் 💕💕






5 comments:

  1. இப்போதுதான் இந்தக் கோவிலைப்பற்றிக் கேள்விப்படுகிறேன். அடுத்த முறை செல்லப்பார்க்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. சென்று வாருங்கள் சார், அருமையான கோவில்

      Delete
  2. நான் காசி கயா யாத்திரையை மார்ச்சில் திட்டமிட்டிருக்கிறேன். அதற்குள் எழுதிடுவீங்கன்னு பார்த்தால்....

    ReplyDelete
  3. மோக்ஷரங்கநாதர் கோவில் படங்கள் மிக அருமை.

    ReplyDelete
  4. இதுவரை பார்த்திராத கோயில். அவனைக் காண அவனருளை வேண்டுகிறேன்.

    ReplyDelete