20 September 2022

2. நாகலிங்கம் ....

லேபக்க்ஷி  (Lepakshi) என்பது  ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது ஹிந்துப்பூருக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூருக்கு வடக்கே சுமார் 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. 





லேபக்க்ஷி  என்ற பெயர் வர ராமாயண கதை ஒன்று சொல்லப்படுகிறது. சீதையை கடத்திச் செல்லும் ராவணனோடு சண்டையிட்ட ஜடாயு  இங்கே வீழ்ந்ததாகவும், ராமர் ஜடாயுவிடம் நிகழ்ந்தவை கேட்கும் போது, சரிந்த ஜடாயுவை பார்த்து '' தெலுங்கில் ---- லே பட்சி ''- (தமிழில்-‘எழுந்திரு பறவையே)’ என்று அழைத்ததாகவும், அதனால் தான் இந்த ஊருக்கு லேபக்க்ஷி  என்று பெயர் வந்துள்ளது என்று கூறுகிறார்கள்.

கூர்மசேலம் மலையில் கட்டப்பட்ட இந்த கோயில் ஆமை வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. 

இந்த கோயில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னருடன் பணிபுரிந்த விருப்பண்ணா மற்றும் விரண்ணா என்ற இரண்டு சகோதரர்களால் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இந்த கோயில் அகஸ்திய முனிவரால் கட்டப்பட்டது என்று ஒரு புராண நம்பிக்கையும் உள்ளது.




பிரதான கோவிலுக்குப் பின்னால், உள் பிராகாரத்தின் தென்கிழக்கு மூலையில் ஒரு மண்டபம் உள்ளது. அங்கு உள்ள  இந்த நாகலிங்கம் , லேபாக்ஷியின் அடுத்த சிறப்பு. 18 அடி உயரம் கொண்ட, ஒரே கல்லில் பொறிக்கப்பட்ட நாகலிங்கம். நாகம் கவசமாக அமைந்த இந்த சிவலிங்கத்தை அங்குள்ள பணியாளர்களுக்கு சமையல் செய்யும் நேரத்திற்குள் செதுக்கியதாக ஒரு  கதையும்  உண்டு.

கீழே சப்தகன்னியரும் உள்ளனர்.

இதன் அருகே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அழகிய விநாயகர் சிலை ...























தொடரும்... 

அன்புடன் 
அனுபிரேம் 💕💕



1 comment:

  1. நாகலிங்கம் பாத்தேன் ஹப்பா செமையா இருக்கு நான் இணையம் பக்கம் வராம லீவு போட்டப்ப வந்திருக்கு போல இந்தப் பதிவுகள் எல்லாம்...

    ஆ!! இங்கா ஜடாயு வீழ்ந்தது? அப்படினா எங்க ஊர் ஜடாயுபுரம்!!?? என்னப்பா இது!!!!

    பிள்ளையார் நாகலிங்கம் காணொளிகள் அருமை....அழகான கலைநயமிக்க தூண்கள் பிராகாரம்....ரசித்துப் பார்த்தேன் அனு....செமையா இருக்கு

    கீதா

    ReplyDelete