29 September 2022

நவராத்திரி பெருவிழா .... ஸ்ரீ மீனாட்சி அம்மன்

 மதுரை ஸ்ரீ  மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில்

  நவராத்திரி மூன்றாம் திருநாள் - மீனாட்சி பட்டாபிஷேக அலங்காரம்









நான்காம் திருநாள் - தட்சிணாமூர்த்தி அலங்காரம் 

அம்பிகை தாட்சாயணியாக பிறந்து தட்சன் வேள்வியில் விழுந்து மறைந்த பின் பர்வத ராஜ குமாரி பார்வதியாக அவதரித்தாள். ஹிமாச்சல பர்வதத்தில் சுவாமியோ யோக நிலையில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு ஞானோபதேசம் செய்துகொண்டிருக்க, கன்னிப்பெண்ணாக பார்வதி தேவி ஸ்வாமிக்கு பணிவிடை செய்துகொண்டிருந்தாள்.

 அத்தருணத்தில் தான் தாரகாசுரன் முதலிய அசுரர்கள் தேவர்களை துன்புறுத்த, அவர்களை அழிப்பதற்காக சுப்பிரமணிய சுவாமி அவதரிக்கவேண்டும் என்பதன் பொருட்டு மன்மதன், சுவாமி மீது பூ அம்பு எய்ய வருகிறான் ...

இவை அனைத்தும் இன்றைய அற்புதமான அலங்காரத்தில் அப்படியே காட்சி படுத்தப்பட்டுள்ளது... 

 வெள்ளிப் பனிமலையில் முயலகன் மீது கால் ஊன்றி கீழே அமர்ந்துள்ள சனகாதி முனிவர்களுக்கு உபதேசிக்கும் வண்ணம் நான்கு திருக்கரங்களோடு தட்சிணாமூர்த்தியாக சுவாமி அமர்ந்திருக்க, பார்வதி தேவி உடனிருக்க, அருகில் பாணத்தை எய்ய தயாராக நிற்கும் மன்மதன் 












ஸ்ரீ மீனாட்சி அம்மன் திருவடிகள் போற்றி புகழ் பாடும் 108 போற்றி திருநாமங்கள் ...


11. ஓம் ஆறுமுகம் அன்னையே போற்றி 

12. ஓம் ஆதியின் பாதியே போற்றி 

13. ஓம் ஆலால சுந்தரியே போற்றி 

14. ஓம் ஆனந்த வல்லியே போற்றி 

15. ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி 

16. ஓம் இமயத்தரசியே போற்றி 

 17. ஓம் இடபத்தோன் துணையே போற்றி 

18. ஓம் ஈஸ்வரியே போற்றி

 19. ஓம் உயிர் ஓவியமே போற்றி

 20. ஓம் உலகம்மையே போற்றி


தொடரும் ...

அன்புடன் 
அனுபிரேம்  💛💚💙💗💓

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமையாக உள்ளது. ஸ்ரீ மீனாட்சி அம்மனை பக்தியுடன் மனங்குளிர கண்டு கொண்டேன். கதைப்பகிர்வும், அவற்றிற்கேற்ற பொருத்தமான அலங்காரங்களும் பார்க்கவே ரம்யமாக இருக்கின்றன. பார்த்துப் பார்த்து ரசித்தேன். ஸ்ரீ மீனாட்சி, சொக்கநாதர் அனைவரையும் நலமுடன் காக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொள்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete