(25) அநுயாத்திரை செய்தேனோ அணிலங்களைப் போலே.
சீதையைத் தேடி ராமரும், லக்ஷ்மணனும் காடுகளில் அலைந்தார்கள். அப்போது சுக்ரீவனின் நட்பு கிடைத்தது. சுக்ரீவனுக்காக ராமர் வாலியை வதம் செய்தார். அனுமார் உதவியுடன் சீதை அசோகவனத்தில் இருக்கிறாள் என்று தெரிந்தது. ராவணனை வதம் செய்து, சீதையை மீட்க இலங்கைக்குச் செல்ல வேண்டும். சுக்ரீவனிடம் பெரிய குரங்குப் படை இருந்தது. குரங்குகளின் உதவியுடன் சமுத்திரத்தில் அணை கட்ட தீர்மானித்தார்.
குரங்குகள் எல்லாம் ராமருக்காக இங்கும் அங்கும் சென்று பெரியப் பெரிய மலைகளைத் தூக்கிக்கொண்டு வந்தன. ஒரு குரங்கு மலையைத் தூக்கி வீச, இன்னொரு குரங்கு அதைத் தாவிப் பிடித்து இன்னொரு குரங்கிடம் வீசும். இப்படி மலைகளை மாற்றி மாற்றி அனுப்பியது. இதை பார்ப்பதற்கு மலைகள் அந்திரத்தில் பறப்பது போல இருந்தது.
இதை எல்லாம் அங்கே இருந்த அணில்கள் பார்த்தது....
அடடா நாம ராமருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லையே, என்று யோசித்தன. எல்லா அணில்களும் நேராகச் சமுத்திரத்தில் போய்க் குளித்தன. ஈர உடம்புடன் கரைக்கு வந்து மணலில் புரண்டன. ஈர உடம்பில் மணல் ஒட்டிக்கொண்டது. அலுங்காமல் குலுங்காமல் மணலுடன் குரங்குகள் கடலில் போட்ட கற்களுக்கு இடையில் உடம்பை உதறிக்கொண்டன.
உதறிய பின் அணில்கள் மீண்டும் கடலில் மூழ்கி, புரண்டு, உதறும்.
இதைத் திரும்பத் திரும்பச் செய்தன.
கட்டும்போது காரைப் பூச்சு மாதிரிக் கற்களுக்கு இடையில் மணல் பூச்சு பூசியது இந்த அணில்கள்.
குரங்குகள் கற்களுடன் சென்றது யாத்திரை, அவைகளுக்குப் பின் அணில்கள் அநுயாத்திரை சென்றன ...
அணில்கள் சமுத்திரத்தில் மூழ்கி ஈரத்துடன் வெளியே வந்து மீண்டும் கடலைப் பார்த்தன ..
ஏன் அப்படிச் செய்தது தெரியுமா ...
கடலில் மூழ்கி எழுந்து வெளியே வந்த அணில்கள், கடல் நீரை அணை கட்ட சவுகரியமாக வெளியேற்றுகின்றன என்று நினைத்தனவாம். கரைக்கு வந்த அணில்கள் கடலின் நீர் மட்டம் குறைந்திருக்கிறதா என்று பார்த்ததாம்!...
அனுமார் சீதையைக் கண்டுபிடித்துச் செய்த உதவிக்கு, ராமர் அவரை இரு கைகளாலும் கட்டிக்கொண்டார்... ஆனால் அணில்களை எப்படிக் கட்டிக்கொள்ள முடியும் ? அதனால் அன்புடன் அவைகளைத் தடவிக் கொடுத்தார் ...
"வானரங்களுக்குப் பின்னால் அணில்களைப் போல அனுயாத்திரை சென்று பக்தி தொண்டாற்றினேனா? பிறகு ஏன் நான் இங்கு இருக்க வேண்டும்?" என்கிறாள் திருக்கோளூர்ப் பெண்மணி.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி -முதற் பத்து
1 - 4.அம் சிறைய
தலைமகள் தூதுவிடல்
நாடாத மலர் நாடி, நாள் தோறும் நாரணன் - தன்,
வாடாத மலர் அடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று,
வீடாடி வீற்றிருத்தல் வினையற்றது என் செய்வதோ?
ஊடாடு பனி வாடாய்! உரைத்து ஈராய் எனது உடலே. 4.9
2940
உடல் ஆடிப் பிறப்பு வீடு உயிர் முதலா முற்றுமாய்,
கடல் ஆழி நீர் தோற்றி, அதனுள்ளே கண்வளரும்
அடல் ஆழி அம்மானைக் கண்டக்கால், இது சொல்லி
விடல் ஆழி மட நெஞ்சே! வினையோம் ஒன்றாம் அளவ 4.10
2941
அளவு இயன்ற ஏழு உலகத்தவர் பெருமான் கண்ணனை
வள வயல் சூழ் வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அளவு இயன்ற அந்தாதி ஆயிரத்துள் இப் பத்தின்
வள உரையால் பெறலாகும் வான் ஓங்கும் பெரு வளமே. 4.11
2942
26. திருஇந்தளூர்
ஸ்ரீ சந்திரசாபவிமோசனவல்லீ ஸமேத ஸ்ரீ சுகந்தவன பரிமளரங்கநாதாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
No comments:
Post a Comment