06 August 2022

19. அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே

19 . "அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே"




தேவர்களின் கட்டிட கலைஞர் மாயன் என்றவரின் புத்திரிதான் மண்டோதரி. 

மண்டோதரி இலங்கையின் இராணி, இராவணனின்  தர்ம பத்தினி. பெரும் பதிவிரதையான அவள், இராவணன் சீதையை லங்கைக்கு கொண்டுவந்தபோது அவனை கண்டித்தாள். அவன் செய்வது பெரும் பாவம் எனவும், அது பெரும் அழிவொன்றை கொண்டுவரும் எனவும் கூறுகிறாள்.

 இராமனுடன் ஸ்நேகிதத்தை தேடு என அறிவுறுத்துகிறாள். ஆனால், இராவணன் அவளுக்கு செவி சாய்க்கவில்லை.

யுத்ததில் இராவணன் இறந்த பொழுது, அதைக்கேட்ட அவனது  மனைவிமார்கள் ஓடி வந்து அழுகிறார்கள். 

ஆனால், அமைதியான நேர்நடையோடு வருகிறாள், மண்டோதரி. 

அப்போது அங்கு என்ன நிகழ்வு நடந்திருக்கும்? தன் கணவனைக் கொன்ற ஸ்ரீராமரை நிச்சயம் மண்டோதரி தூற்றியிருப்பாள் என்று தானே நினைப்போம். ஆனால், அந்த நிகழ்வு அங்கு நடைபெறவில்லை. மாறாக வேறு ஒன்று நடந்தது. அது என்ன?


இராவணன் இறந்து கிடப்பதைக் கண்ட மண்டோதரி கூறுவதாவது...


"அன்புக் கணவரே! உங்கள் சக்தி அளப்பறியது. இருப்பினும் இராமன் சாதாரண மனிதப் பிறவி இல்லை. உங்களை கொன்றது சங்கையும் சக்கரத்தையும் ஏந்தி நிற்கும் அந்த ஸ்ரீமந்நாராயணனே! மிகுந்த தவ வலிமையிலும், அதனால் பெற்ற வரத்தினாலும் நீங்கள் கர்வம் கொண்டீர்கள்.

என் அறிவுரைகளை தாம் காது கொடுத்து கேட்கவில்லை. சிறந்த பதிவிரதையான சீதையின் மேல் தாம் கொண்ட தவறான இச்சையே தமக்கு இம்முடிவை அளித்திருக்கிறது. ஸ்ரீ விஷ்ணுதான் புவியில் இராமனாக வந்து உங்களை கொன்றிருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை" எனக் கதறுகிறாள். 

பின், ராமனின் வில் திறமையைப் பாராட்டுகிறாள் மண்டோதரி.

ஆக மண்டோதரி இராமனை ஒரு அவதாரமாகவே காண்கிறாள். 

தன் கணவனின் மரணத்திலும் மண்டோதரி ஸ்ரீராமரை பாராட்டுவது தான் மண்டோதரியின் பெருமை. 

அதுவும் இல்லாமல் இந்த இடத்தில் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி தெய்வம் என்பதையும் மற்றவர்க்கு சுட்டிக் காட்டுகிறாள். அதனால் தான் மண்டோதரி பெண்களுள் சிறந்தவளாக போற்றப்படுகிறாள்.


"அவதார இரஹஸ்யத்தை புரிந்துகொண்டு பேசுவதற்கு மண்டோதரியைப் போல திறன் கொண்டவளா நான்? நான் இங்கிருந்து என்ன பயன். நான் வேறு ஊருக்குப் புறப்படுகிறேன்" என்கிறாள் திருக்கோளூர் பெண் பிள்ளை.





முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே


திருவாய்மொழி -முதற் பத்து

1 - 3. பத்து உடை அடியவர்க்கு 


ஒன்று எனப் பல என*  அறிவு அரும் வடிவினுள் நின்ற* 

நன்று எழில் நாரணன்*  நான்முகன் அரன் என்னும் இவரை*

ஒன்ற நும் மனத்து வைத்து*  உள்ளி, நும் இரு பசை அறுத்து* 

நன்று என நலம் செய்வது*  அவனிடை நம்முடை நாளே. 7

2926



நாளும் நின்று அடு நம பழமை*  அம் கொடுவினை உடனே 

மாளும்*  ஓர் குறைவு இல்லை;*  மனன் அகம் மலம் அறக் கழுவி*

நாளும் நம் திருஉடை அடிகள் தம்*  நலம் கழல் வணங்கி* 

மாளும் ஓர் இடத்திலும்*  வணக்கொடு மாள்வது வலமே. 8

2927








20. திருத்தஞ்சை மாமணிக்கோவில்

ஸ்ரீசெங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ நீலமேக ஸ்வாமிநே நமஹ

சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!



ரகசியம் தொடரும்...


அன்புடன் 
அனுபிரேம்  💕💕

No comments:

Post a Comment