ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....
முந்தைய பதிவு -- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம், த்வஜாரோஹண காட்சிகள் , முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரம் ... ...
இரண்டாம் நாள் - ஸ்ரீ ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும் திருவீதி புறப்பாடு....
மூன்றாம் நாள் - இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலியிலும் , ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்திலும் புறப்பாடு...
ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலியில் |
ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி : மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
ஏழாம் பாசுரம் - உன்னுடைய இந்தத் துன்பம் எப்போது தீரும் என்று கேட்க அவனுடைய திருத்துழாய் மாலையைச் சூட்டினால் மட்டுமே போகுமாகையாலே அவன் வெற்றிமாலை சூட்டி இருக்கும் இடத்தில் என்னைக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.
வண்ணம் திரிவும் மனம் குழைவும்
மானம் இலாமையும் வாய் வெளுப்பும்
உண்ணலுறாமையும் உள் மெலிவும்
ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்
தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு
சூட்டத் தணியும் பிலம்பன் தன்னைப்
பண் அழியப் பலதேவன் வென்ற
பாண்டிவடத்து என்னை உய்த்திடுமின் 7
623
என்னுடைய மேனி நிறத்தின் மாறுபாடும் மனத்தளர்ச்சியும் மானமில்லாத நிலையும் வாய் வெளுத்திருக்கும் நிலையும் உணவு வேண்டியிராமையும் அறிவு சுருங்கிப்போயிருப்பதுமான இவை எல்லாம் எப்போது தணியும் என்றால் கடல்வண்ணன் என்று ப்ரஸித்தனான ஒப்பற்றவனான கண்ணனுடைய குளிர்ந்த அழகிய திருத்துழாய் மாலையைச் சூட்டுமளவில் நீங்கும். அதை உங்களால் இங்கே கொண்டு வர முடியாததால், நம்பிமூத்தபிரானான பலராமன் ப்ரலம்பாஸுரனை எலும்பு முறியும்படி கொன்று முடித்த இடமாகிய பாண்டீரம் என்னும் ஆலமரத்தினருகில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
தங்கப் பரங்கி நாற்காலி படத்திற்குக் கீழே தலைப்பு போட்டிருந்தால், எது என்று தேடவேண்டி வந்திருக்காது
ReplyDelete