ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....
முந்தைய பதிவு -- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம், த்வஜாரோஹண காட்சிகள்
முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் ... ...
நான்காம் திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும்
ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்தில் |
ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்தில் |
ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி : மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
எட்டாம் பாசுரம் - அவன் பசுக்களை ரக்ஷித்த கோவர்த்தனத்துக்கு அருகில் என்னைக் கொண்டு சேருங்கள் என்கிறாள்.
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடு வாழ் சாதியும் ஆகப் பெற்றான்
பற்றி உரலிடை யாப்பும் உண்டான்,
பாவிகாள்! உங்களுக்கு ஏச்சுக் கொலோ?
கற்றன பேசி வசவு உணாதே,
காலிகள் உய்ய மழை தடுத்து
கொற்றக் குடையாக ஏந்தி நின்ற
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் 8
624
கண்ணன் கன்றுகளின் கூட்டங்களை மேய்ப்பதையே தொழிலாகப் பெற்றான். வீட்டை விட்டுச் சென்று காட்டிலேயே தங்கி வாழும்படியான இடைச்சாதியிலும் பிறக்கப் பெற்றான். வெண்ணெய் களவில் பிடிபட்டு உரலிலே கட்டுப்படவும் பெற்றான். இப்படி எம்பெருமானின் குணத்தையும் குற்றமாகக் கொள்ளும் பாவிகளே! உங்களுக்கு இவை என்னிடம் வசவு வாங்கக் காரணமாயிற்றே! நீங்கள் கற்ற கல்விகளைப் பேசி என்னிடத்தில் வசவு கேட்டுக் கொள்ளாமால் பசுக்கள் பிழைக்கும்படிக் கல்மழையைத் தடுத்து வெற்றிக்குடையாக எம்பெருமானால் தரிக்கப்பட்ட கோவர்த்தன மலையினருகில் என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
No comments:
Post a Comment