21. "தேவு மற்றறியேனோ மதுரகவியாரைப் போலே"
மதுரகவியாழ்வார் பிறந்த மண் திருக்கோளூர். இவரது ஊருக்கு அருகாமையில் உள்ள திருக்குருகூரில் (திருநகரி) உள்ள நம்மாழ்வாரின் பெருமையை மதுரகவி ஆழ்வார், அயோத்தி செல்லும் போது அறிந்தார்.
வானத்தில் ஒரு ஒளியைப் பார்த்து திருநகரி வந்து அங்கு நம்மாழ்வார் பதினாறு வருடங்களாக ஒரு புளிய மரத்தடியில் அசைவின்றி இருப்பதை காண்கிறார்.
வைணவத்தில் பகவத் சம்பந்தம் கிடைக்கிறதோ இல்லையோ ஆச்சார்ய சம்பந்தம் இருந்தால் போதும். பகவத் சம்பந்தம் தானே வந்து சேரும். ஆனால், ஆச்சார்ய சம்பந்தம் இல்லாமல் நேரடியாக பெருமாள் சம்பந்தம் எளிதானது அல்ல. வைணவத்தின் சூட்சமே அதில்தான் அடங்கியுள்ளது.
மதுரகவியாழ்வார் அதற்கு ஒரு உதாரணம்.
நம்மாழ்வாரை பரிக்ஷித்த மதுரகவி ஆழ்வார் அவரது மதிப்பை உணர்ந்து அவரது பாதங்களில் விழுகிறார், சீடராகிறார்.
ஆச்சார்யர் நம்மாழ்வாரை அனைத்துமாக ( மாதா, பிதா, குரு, தெய்வம்) ஏற்றுக்கொள்கிறார் மதுரகவியாழ்வார் (அன்னையாய் அத்தனாய்) .
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
938
இப்பாசுரத்தில் ஆழவார், நம்மாழ்வாரை தவிர வேறு எந்த இறைவனையும் நான் அறியேன் (தேவு மற்று அறியேன்) என்கிறார். அவர் உலக இன்பங்களை மட்டும் துறக்கவில்லை, பர உலகையும் எம்பெருமானையும் துறக்கிறார் தன் குருவிற்காக.
ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யர்களால் வெளிப்படுத்தப்படும் "குருவே அனைத்தும்" எனும் தத்துவம் (ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம்) மதுரகவி ஆழ்வாரின் ஆச்சார்ய பக்தியால் துளிர்விட்டதே.
மதுரகவிகள் நம்மாழ்வாரைத் தரிசித்த போது நம்மாழ்வாருக்கு பதினாறு வயசு.
நம்மாழ்வார் இந்த உலகத்தை விட்டு வைகுண்டம் கிளம்பிய போது முப்பத்திரண்டு வயது.! கிளம்பும் போது மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வாரைப் பார்த்து உங்களைப் பிரிந்து நான் என்ன செய்வேன்.
உங்களை எப்படிப் பூஜிப்பேன் என்று கேட்க அதற்கு நம்மாழ்வார் “கவலைப் படாதே தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சினால் நான் வருவேன்” என்று சொன்னார்.
மதுரகவிகளும் அதே போலக் காய்ச்ச ஒரு விக்ரகம் கிடைத்தது.... மதுரகவியாவாருக்கு அந்த விக்ரகம் நம்மாழ்வாரைப் போல இல்லை.
நம்மாழ்வாரிடம் “இதில் இருப்பவர் கையை கூப்பிக்கொண்டு இருக்கிறாரே !உங்களைப் பூஜிக்க எனக்கு உபதேச முத்திரையில் வேண்டுமே!” என்று கேட்க, அதற்கு நம்மாழ்வார் “மீண்டும் காய்ச்சும்” என்றார்.
மதுரகவியாழ்வார் மீண்டும் காய்ச்சினார்.
அப்போது நம்மாழ்வார் போலவே ஒரு விக்ரகம் கிடைத்தது.
மதுரகவியாழ்வார் மிகுந்த சந்தோஷத்துடன் அந்த விக்ரகத்தைப் பிரதிஷ்டை செய்து, திருவிழாக்கள் ஏற்பாடு செய்து, திருவாய்மொழியைப் பலருக்கு உபதேசம் செய்து, பல ஊர்களில் அதைப் பரப்பினார்.
நம்மாழ்வாரின் பாசுர ஓலைகளைத் தலையில் வைத்துக்கொண்டு “வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்” என்று பிரகடனம் செய்துகொண்டு ஊர் ஊராகச் சென்றார்.
மதுரையை வந்து அடைந்தார்.
மதுரை வீதியில் இப்படி “வேதம் தமிழ் செய்த மாறன் வந்தார்” என்று கூறிக்கொண்டு சென்ற போது, அங்கே இருந்த சங்க புலவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆழ்வாரைக் கூப்பிட்டு “மதுரகவியாரே, உங்கள் ஆழ்வாரைத் தமிழ்ப் புலவர் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது, தமிழ்ச் சங்கம் வளர்த்த மதுரையில் உங்கள் ஆழ்வாரைப் போற்ற உங்களுக்கு அனுமதி இல்லை. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.
மதுரகவியாழ்வார் “நீங்கள் ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?” என்றார்.
'' உங்கள் ஆழ்வார் பாடல்களைச் சங்கப் பலகையில் ஏற்றுங்கள் பிறகு பார்க்கலாம்” என்றார்கள் தமிழ்ப் புலவர்கள்.
மதுரகவியாழ்வார் தன் ஓலைக்கட்டிலிருந்து ஒரு ஓலையை உருவினார். அதை ஒரு முறை படித்தார்
“கண்ணன் கழலினை, நண்ணும் மனமுடையீர்!
எண்ணும் திருநாமம் திண்ணம் நாரணமே” என்று இருந்தது.
”உங்கள் சங்கப் பலகைக்கு இந்த ஓலையில் இருக்கும் இரண்டு வரி போதும்” என்று கொடுத்தார்.
சங்கப் புலவர்கள் அந்த ஒரு ஓலையை எடுத்து சங்கப்பலகையில் வைத்தார்கள். மறுபுறம் முந்நூறு சங்கப்புலவர்கள் அமர்ந்திருந்தார்கள். தமிழ் சங்கப் பலகை அனைவரையும் தள்ளி ஓலைச்சுவடியை ஏற்றுக்கொண்டது.
புலவர்களும் நம்மாழ்வாரின் மகிமையை உணர்ந்தார்கள்.
இப்படி தன் குருவான நம்மாழ்வாரைத் தவிர எனக்கு வேறு ஒரு தெய்வம் கிடையாது என்று இருந்த எங்கள் ஆழ்வார் மதுரகவியாழ்வார் போல நான் இல்லையே சாமி, அதனால் ஊரை விட்டுப் போகிறேன் என்றாள் திருக்கோளூர் பெண்மணி.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
திருவாய்மொழி -முதற் பத்து
1 - 4.அம் சிறைய
தலைமகள் தூதுவிடல்
அம் சிறைய மட நாராய்! அளியத்தாய்! நீயும் நின்
அம் சிறைய சேவலுமாய் ஆ ஆ என்று எனக்கு அருளி
வெம் சிறைப் புள் உயர்த்தார்க்கு என் விடுதூதாய்ச் சென்றக்கால்
வன்சிறையில் அவன் வைக்கில், வைப்புண்டால் என் செய்யுமோ? 4.1
2931
என் செய்ய தாமரைக்கண் பெருமானார்க்கு என் தூதாய்
என் செய்யும் உரைத்தக்கால்? இனக் குயில்காள்! நீர் அலிரே?
முன் செய்த முழுவினையால் திருவடிக்கீழ்க் குற்றேவல்
முன் செய்ய முயலாதேன் அகல்வதுவோ? விதியினமே 4.2
2932
22. திருவெள்ளியங்குடி
ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ கோலவில்லிராமாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
அனுபிரேம் 💕💕
No comments:
Post a Comment