09 August 2022

ஶ்ரீ ஆண்டாள் - புஷ்பப் பல்லக்கு, ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....



முந்தைய பதிவுகள் ----

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம்,  த்வஜாரோஹண காட்சிகள்...  

முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  ரெங்கமன்னார்,

 இரண்டாம்  நாள் இரவு  -ஸ்ரீ  ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும்  திருவீதி புறப்பாடு,

மூன்றாம்  நாள்  - இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி, ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு,

நான்காம்  திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ  வாகனத்திலும்  ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும், 

 ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை, 

 ஆறாம்  திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...

ஏழாம்  திருநாள் மாலை - ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்..

எட்டாம் திருநாள் இரவு- ஶ்ரீ ஆண்டாள்  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு  













ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...



நாச்சியார் திருமொழி
பதிமூன்றாம் திருமொழி  : கண்ணன் என்னும் 
காதல் நோய் தணிமின் எனல் 

இரண்டாம் பாசுரம்- அவன் சூடிக்களைந்த திருத்துழாய் மாலையைக் கொண்டு வந்து என்னுடைய கூந்தலில் சூட்டுங்கள் என்கிறாள்.



பால் ஆலிலையில் துயில் கொண்ட 
பரமன் வலைப்பட்டு இருந்தேனை

வேலால் துன்னம் பெய் தாற்போல் 
வேண்டிற்று எல்லாம் பேசாதே

கோலால் நிரைமேய்த்து ஆயனாய்க்
 குடந்தைக் கிடந்த குடம் ஆடி

நீலார் தண்ணந் துழாய் கொண்டு என் 
நெறி மென் குழல் மேல் சூட்டீரே



பால் பாயும் பருவத்தை உடைய ஆலம் தளிரிலே சயனித்தருளின பரதெய்வத்தின் வலையிலே அகப்பட்டிருக்கிற என்னைக் குறித்து வேலாயுதத்தை இட்டுத் துளைத்தாற்போல் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் சொல்வதைத் தவிர்த்து, இடையனாய் மாடுமேய்ப்பதற்கு உதவும் கோலைக் கையில் கொண்டு பசுக்கூட்டங்களை மேய்த்தவனாய் திருக்குடந்தையில் சயனித்திருப்பவனாய் குடக்கூத்து ஆடினவனுமான கண்ணபிரானின் பசுமை பொருந்திக் குளிர்ந்து அழகிய திருத்துழாயைக் கொண்டுவந்து என்னுடைய அடர்ந்த ம்ருதுவான கூந்தலிலே சூட்டுங்கள்.


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

No comments:

Post a Comment