15 August 2022

நமது 76-வது ஆண்டு சுதந்திர தினம்....

  இன்று  நமது 76-வது ஆண்டு சுதந்திர தினம்....

 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....







நமது சுதந்திரம்  பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில் சுதந்திரம் தினம் குறித்த சில  வரலாற்று சம்பவங்களை காணலாம் ... 




அயல்  நாட்டிலிருந்து வணிகத்திற்காக வந்த ஆங்கிலேயர்கள்  கொஞ்சம் கொஞ்சமாக நமது  இந்தியாவையே கைப்பற்றி 1858 முதல் இந்தியாவை பிரிட்டிஷ் அரசின் காலனி நாடாக மாற்றி ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். இந்தியர்களை அடிமைகளாக பயன்படுத்தினர். இதனால் எழுந்த கிளர்ச்சியால் இந்தியர்களுக்கு சுதந்திர தாகம் பிறந்தது. இந்தியா சுதந்திரம் அடைய பலர் போராட்டம் நடத்தி இந்தியா 1947ல் விடுதலையடைந்தது. 




இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் என அறிவிக்கப்பட்டவுடன் ஜோதிடர்கள் அன்றைய நாள் சரியில்லை, இரண்டு நாட்கள் கழித்து கொடுக்கலாம் என இந்திய தலைவர்களுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால் ஆகஸ்ட் 15 என்பதில் மவுண்ட் பேட்டன் உறுதியாக இருந்தார். இந்த சூழ்நிலையில் தான் ஆங்கிலேயர் கணக்குப்படி நள்ளிரவு 12 மணி என்பது புதிய நாள். இந்தியர்களுக்கு அதிகாலை 5 மணி தான் புதிய நாள். இதனால் ஆகஸ்ட் 14 நள்ளிரவே இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.




ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு சுதந்திர விழாவுக்கான முன்னேற்பாடுகள் துவங்கிவிட்டன். பிரிட்டிஷ் இந்திய அரசாங்கத்தின் சட்ட ஆலோசனை மன்றத்தில் தான் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த அரங்கை அலங்கரித்த முன்னாள் வைஸ்ராய்களின் புகைப்படங்கள் மலர்களால் மறைக்கப்பட்டது.

12 மணி! அந்த அரங்கில் அவைத்தலைவரின் இருக்கைக்கு மேல் பெரிய கடிகாரம் இருக்கும். இரண்டு முட்களுமே 12 ஐ தொட்டு நிற்க மணி 12 முறை கணீரென்று ஒலித்தது. தொடர்ந்து, அரங்கின் மேல் மாடத்திலிருந்து தேர்ச்சி பெற்ற கலைஞர் ஒருவர் சங்கநாதத்தை ஒலிக்கச் செய்தார். புதிய தேசம் பிறந்து விட்டதற்கான அறிவிப்பு இது.




வந்தே மாதரம்! ....

 அரங்கிலும் வெளியிலும் இருந்த அனைவரும் ஒரே நேரத்தில் எழுந்து நின்று கைதட்டினார்கள். பின்னர் எல்லாருமாய் இணைந்து வந்தே மாதரம் பாடினார்கள். இந்திய தேசத்திற்காகவும், இந்திய மக்கள் நலனுக்காகவும் ஓயாது உழைப்போம். உளப்பூர்வமாக சேவை செய்வோம் என சபதம் ஏற்கிறோம். என்ற உறுதி மொழியை நேரு சொல்ல அனைவரும் திரும்பச் சொன்னார்கள்.

 சுதந்திர போராட்டத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காக, அவர்களின் தியாகத்தை நினைவுகூறும் விதத்தில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உணர்ச்சிகரமான அந்த நாளில் மூன்று பேர் உரையாற்றினார்கள். முதலாவதாக இந்திய இஸ்லாமிய சிறுபான்மை மக்கள் சார்பாக சௌத்ரி காலிக் உஸ் ஸமான் பேசினார். இரண்டாவதாக சிந்தனையாளரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பேசினார். மூன்றாவதாக இந்தியாவின் முதல் பிரதமர் நேரு பேசினார். 




அன்றைய தினத்தின் முதல் நிகழ்ச்சியாக, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக மௌண்ட் பேட்டன் பதவி ஏற்று அவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அருகில் எட்வினா மவுண்ட் பேட்டன் அமர்ந்தார். அவர்களுக்கு இடப்புறமும் வலப்புறமும் இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் உட்கார்ந்தார்கள். தொடர்ந்து சுதந்திர இந்தியாவின் புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்கள். 





தேசிய கொடி -

இந்தியாவின் முதல் தேசிய கொடி 1906ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி கொல்கத்தாவில் பாரீஸி பாகன் ஸ்கோயர் என்ற இடத்தில் ஏற்றப்பட்டது அந்த கொடியில் சிவப்பு மஞ்சள், பச்சை என மூன்று வண்ணங்கள் இருந்தன. அந்த கொடியை 1921ம் ஆண்டு பிங்கிளி வெங்கையா என்பவர் டிசைன் செய்திருந்தார். அதன் பின் தற்போது உள்ள, இளஞ்சிவப்பு, வெள்ளை, பச்சை, நடுவே அசோக சக்ரத்துடன் கூடிய இந்த தேசிய கொடி 1947 ஜூலை 22ல் ஏறுக்கொள்ளப்பட்டு இறுதியாக ஆகஸ்ட் 15,1947 ல் ஏற்றப்பட்டது.

​தேசிய கீதம் -

இந்தியாவின் தேசிய கீதம் ஜன கன மன என நாம் எல்லோருக்கும் தெரியும், அதை எழுதியவர் ரபிந்தரநாத் தாகூர், இவர் தான் 1911ல் எழுதிய "பாரதோ பாக்யோ பிதாதா"என்ற பாடல் தான் பின்னாளில் ஜன கன மன பாடலாக மாறியது. இந்தியா குடியரசு அடைந்த ஆண்டான 1950ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி அதாவது குடியரசு ஆவதற்கு இரு தினங்களுக்கு முன்பு இந்த பாடலை தேசிய கீதமாக இந்தியா அங்கீகரித்தது.

வந்தே மாதரம் -

வந்தே மாதரம் நமது தேசிய பாடல் என்று நாம் எல்லோருக்கும் தெரியும், வந்தே மாதரம் என்ற இந்த பாடலை பக்கீம் சந்தர சேட்டர் ஜி எழுதினார். இதை இவர் 1880ல் ஆனந்தமத் என்ற அவரது புத்தகத்தில் எழுதிய பாடல் எது. 1896ம் ஆண்டு இதை முதன் முதலில் பாடியவர் ரபிந்திநாத் தாகூர், இதை தேசிய கீதம் அங்கீகரிக்கப்பட்ட அதே 1950 ஜனவரி 24ல் அங்கீகரிக்கப்பட்டது.

​வரைபடம் -

இந்தியா சுதந்தரம் பெறும் போதே இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்து சென்றுவிட்டது. அதன் பின் இந்தியாவின் எல்லைகளை கொண்ட வரைபடம்  தயாரிக்கப்பட்டது. இந்த வரைபடம்  ஆகஸ்ட் 3ம் தேதியே தயாராகியிருந்தாலும் அது வெளியிடப்பட்ட தேதி ஆகஸ்ட் 17 தான். அதாவது சுதந்திரம் கிடைத்து 2 நாட்களுக்கு பின்பு தான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.




வந்தே மாதரம்

தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு( ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-ஆதி)


பல்லவி


வந்தே மாதரம் என்போம்-எங்கள்

மாநிலத் தாயை வணங்குதல் என்போம். (வந்தே)


சரணங்கள்

1. ஜாதி மதங்களைப் பாரோம்- உயர்

ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்

வேதிய ராயினும் ஒன்றே- அன்றி

வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே)


2. ஈனப் பறையர்க ளேனும்-அவர்

எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?

சீனத்த ராய்விடு வாரோ?-பிற

தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே)


3. ஆயிரம் உண்டிங்கு ஜாதி-எனில்

அன்னியர் வந்து புகல்என்ன நீதி?-ஓர்

தாயின் வயிற்றில் பிறந்தோர்-தம்முள்

சண்டைசெய்தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே)


4. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே-நம்மில்

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்-இந்த

ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே)


5. எப்பதம் வாய்த்திடு மேனும்-நம்மில்

யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்

முப்பது கோடியும் வாழ்வோம்- வீழில்

முப்பது கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே)


6. புல்லடி மைத்தொழில் பேணிப்-பண்டு

போயின நாட்களுக் கினிமனம் நாணித்

தொல்லை இகழ்ச்சிகள் தீர- இந்தத்

தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே)




 அனைவருக்கும்  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ...

கிடைத்த சுதந்திரத்தை பேணி காத்து நாமும் உயர்ந்து,

 நமது நாட்டையும் புகழ் பெற செய்வோம் ...



வாழ்க பாரதம் ....
வாழ்க வாழ்கவே ....



அன்புடன்
அனுபிரேம்








6 comments:

  1. வணக்கம் சகோதரி
    பதிவு அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். சுதந்திரம் கிடைத்த நாள், அதன் பல நிகழ்ச்சிகளுக்கான ஆண்டு, நேரங்கள் என எல்லாவற்றையும் வரிசைப்படுத்திய பதிவு நன்றாக உள்ளது. பாராதியாரின் பாடல் அருமை. வாய் விட்டுப் பாடி மகிழ்ந்தேன். ஓவியங்களும் நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மிக அன்பான கருத்துரைக்கு நன்றிகள் கமலா அக்கா

      Delete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். இதற்கு முன் ஒர் கருத்துமிட்டேன். வந்ததா? பாரதியார் பாடல் வெகு இனிமை. வாய் விட்டு பாடி மகிழ்ந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் இனிய கருத்துரை கிடைத்தது அக்கா , ஆனால் நான் தான் சில வேலைகளால் வெளியிட தாமதம் செய்து விட்டேன் . மன்னிக்கவும் .

      ஆனாலும் மீண்டும் வந்து கேட்ட தங்களின் அன்பிற்கு மிகவும் நன்றி

      Delete
  3. Thulasidharan V Thillaiakathu commented on "நமது 76-வது ஆண்டு சுதந்திர தினம்...."
    Aug 15, 2022
    சுதந்திர தின நல்வாழ்த்துகள்! அது சரி அனு, 76, 75 குழப்பம்!! கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வாழ்த்திற்கு நன்றி கீதா அக்கா .

      தங்களின் கருத்துரை draft ல் தெரிகிறது ஆனால் இங்கு இல்லை, அதனாலே காப்பி, பேஸ்ட் செய்தேன் .

      குழப்பம் ஏதும் இல்லை அக்கா , 75 வது ஆண்டு நிறைவு விழா , 76 வது ஆண்டு தொடக்கம் ..அதன் படியே எழுதினேன் .

      Delete