ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....
முந்தைய பதிவு -- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம், த்வஜாரோஹண காட்சிகள்...
முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார்,
நான்காம் திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும்,
ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை,
ஆறாம் திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...
நாச்சியார் திருமொழி
பன்னிரண்டாம் திருமொழி : மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
பத்தாம் பாசுரம் - தான் தன்னை எம்பெருமானின் இருப்பிடங்களில் சென்று சேர்க்கும்படி ப்ரார்த்தித்த இத்திருமொழியை அனுஸந்திப்பவர்கள் அர்ச்சிராதி கதியில் சென்று ஸ்ரீவைகுண்டத்தை அடைவார்கள் என்று பல சொல்லி முடிக்கிறாள்.
மன்னு மதுரை தொடக்கமாக
வண் துவராபதி தன் அளவும்
தன்னைத் தமர் உய்த்துப் பெய்யவேண்டித்
தாழ் குழலாள் துணிந்த துணிவை
பொன் இயல் மாடம் பொலிந்து தோன்றும்
புதுவையர்கோன் விட்டுசித்தன் கோதை
இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏத்த வல்லார்க்கு இடம் வைகுந்தமே 10
626
தொங்கும் கூந்தலை உடையவளாய், பொன்மயமான மாடங்களினால் விளங்கித் தோன்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளார்க்குத் தலைவராகிய பெரியாழ்வாருடைய திருமகளான ஆண்டாள் (நான்), ஸ்ரீமதுரை முதல் ஸ்ரீத்வாரகை வரை சொல்லப்பட்ட சில திவ்யதேசங்களில் ஆண்டாளாகிற தன்னைச் சேர்க்கவேண்டித் தன் உறவினர்களிடம் கொண்ட உறுதி விஷயமாக இனிய இசையுடன் அருளிச்செய்த அழகிய சொல் மாலையாகிய இத்திருமொழியை ஓதவல்லவர்களுக்கு வாழுமிடம் பரமபதமேயாம்.
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
No comments:
Post a Comment