08 August 2022

ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....



முந்தைய பதிவுகள் ----

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம்,  த்வஜாரோஹண காட்சிகள்...  

முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  ரெங்கமன்னார்,

 இரண்டாம்  நாள் இரவு  -ஸ்ரீ  ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும்  திருவீதி புறப்பாடு,

மூன்றாம்  நாள்  - இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி, ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு,

நான்காம்  திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ  வாகனத்திலும்  ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும், 

 ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை, 

 ஆறாம்  திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...

ஏழாம்  திருநாள் மாலை - ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்..





























(323)
சித்திரகூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட

அத்திரமே கொண்டு எறிய, அனைத்து உலகும்திரிந்து ஓடி

வித்தகனே!  இராமாவோ!  நின் அபயம் என்று அழைப்ப

அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.

வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும் போது, 

இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் ஸ்பரிசிக்க வேண்டுமென்னும்  தீயகருத்தினனாய் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டு கொண்டு வந்து,  

பிராட்டியைத் துன்புறுத்த, பெருமாள் விழித்து காகம் மேல் கோபம் கொண்டு அஸ்திரத்தை வீச, அந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்க மூன்று உலகங்களுக்கும் ஓடிப்பார்த்து முடியாமல் பிராட்டியின் திருவடியிலேயே வந்து விழுந்தது.

பிராட்டியும் காகம் மேல் இரக்கம் கொண்டு அதற்கு உயிர்ப்பிச்சை அளிக்க பெருமாளிடம் வேண்ட, பிராட்டியின் சிபாரிசுக்காக காகத்தைக் கொல்லாமல் அதன் ஒரு கண்ணை மட்டும் அறுத்து உயிர்ப்பிச்சை அளித்தார்.

இந்தப் பாசுர நிகழ்வை விளக்கும் வகையில் இன்றைய சயன சேவை. வேறெங்கும் காணமுடியாத தரிசனம்.











ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...



நாச்சியார் திருமொழி
பதிமூன்றாம் திருமொழி  : கண்ணன் என்னும் 
காதல் நோய் தணிமின் எனல் 


இவளுடைய நிலையைப் பார்த்தவர்களுக்கு வருத்தத்தின் மிகுதியால் இவளை அழைத்துக் கொண்டு போகுமளவுக்கு சக்தி இருக்காதே. அப்படிப் பெருமுயற்சி செய்தார்களாகிலும் இவளை ஒரு படுக்கையிலே கிடத்தி எழுந்தருளப்பண்ணிக் கொண்டுபோக வேண்டியிருக்கும். இந்நிலையில் இவள் “என் நிலையைச் சரி செய்ய நினைத்தீர்களாகில் அந்த எம்பெருமான் ஸம்பந்தப்பட்ட பொருள்களில் ஒன்றைக் கொண்டு வந்து என் மீது தடவி என் உயிரைக் காக்கப்பாருங்கள்” என்கிறாள்.

அவர்கள் “எம்பெருமானிடத்தில் முழுவதுமாக ஈடுபட்டிருக்கும் நீ உண்மையிலேயே துன்பப்பட்டாயோ? இப்படித் துன்பப்படலாமா? ப்ரபன்ன குலத்தில் உதித்த நீ அந்தக் குலத்தின் பெருமையைப் பார்க்க வேண்டாமா? நீ இப்படிச் செய்வதால் அவனுக்கு வரும் பழியைப் பற்றி நினைக்கவேண்டாமா?” என்றெல்லாம் கேட்க இவள் “நீங்கள் இப்பொழுது நம் குடிக்குப் பழி வரக்கூடாது என்கிற காரணத்தால் சொல்லும் வார்த்தை என் தற்போதைய நிலைக்குப் பொருத்தமானதன்று. என்னை ரக்ஷிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அவன்பக்கல் உள்ள ஒன்றைக் கொண்டு வந்து அதைக் கொண்டு என்னைத் தீண்டி என்னை ரக்ஷிக்கப் பாருங்கள்” என்கிறாள்.


முதல் பாசுரம் -  அவன் திருவரையில் சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டுவந்து என் வாட்டம் தணியும்படியாக வீசுங்கள் என்கிறாள்.


கண்ணன் என்னும் கருந்தெய்வம்

 காட்சி பழகிக் கிடப்பேனை

புண்ணில் புளிப் பெய்தாற் போலப் 

 புறம் நின்று அழகு பேசாதே

பெண்ணின் வருத்தம் அறியாத 

பெருமான் அரையில் பீதக

வண்ண ஆடை கொண்டு என்னை 

வாட்டம் தணிய வீசீரே


தாய்மார்களே! கண்ணன் என்கிற கறுத்த மற்றும் உயர்ந்த தெய்வத்தின் காட்சியிலே பழகிக்கிடக்கிற என்னைக் குறித்து விலகி நின்றுகொண்டு புண்ணில் புளியின் ரஸத்தைச் சொரிந்தாற்போல் (எரிச்சலூட்டுவதாக) நன்மை சொல்வதைத் தவிர்ந்து பெண்களின் வருத்தத்தை அறியாதவனான கண்ணபிரானுடைய திருவரையில் சாத்திய பீதாம்பரத்தைக் கொண்டு வந்து என்னுடைய விரஹதாபம் தீரும்படி என் மேல் வீசுங்கள்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளது. ஸ்ரீஆண்டாள் மடி மீது, ஸ்ரீ ரெங்கமன்னார் அனந்த சேவை செய்யும் காட்சியை உடைய படங்கள் அனைத்தும் மிகவும் நன்றாக உள்ளது. தீய எண்ணம் கொண்ட காகம் கதையும் அருமை. பாசுர விளக்கங்கள் அனைத்தையும் தெரிந்து கொண்டேன். ஸ்ரீ ஆண்டாள்தேவி, அண்ணல் ரெங்கமன்னாரையும் பக்தியுடன் சேவித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete