ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....
![]() |
முந்தைய பதிவுகள் ----
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம், த்வஜாரோஹண காட்சிகள்...
முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார்,
நான்காம் திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும்,
ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை,
ஆறாம் திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...
ஏழாம் திருநாள் மாலை - ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்,
ஒன்பதாம் திருநாள் - திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில்,
பத்தாம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம்...
பதினோன்றாம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் தீர்த்தவாரி முடிந்த பின் ஆஸ்தானம் புறப்பாடு
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் 12ம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் மற்றும் ரெங்கமன்னார் புஷ்ப யாகம்.
"ஸ்ரீவிஷ்ணுசித்த குலநந்தன கல்பவல்லீம்
ஸ்ரீரங்கராஜ ஹரிசந்தன யோக த்ருச்யாம்
ஸாக்ஷாத் க்ஷமாம் கருணயா கமலாமிவான்யாம்
கோதாம் அனஸ்ய சரண:சரணம் ப்ரபத்யே"
- ஸ்ரீகோதா ஸ்துதி
கற்பக விருட்சத்தில் பூக்கும் மலர்போல விஷ்ணு சித்தரின் குலத்தில் அவதரித்த ஆண்டாளே, நமஸ்காரம். ஹரிசந்தன மரத்தின் கீழ் வாசம் செய்யும் ரங்கராஜனாகிய திருமாலின் மனம் கவர்ந்தவளே, நமஸ்காரம். பூமிதேவியின் அம்சத்தைக் கொண்ட தாயே, உன் மனம் போல் மாங்கல்யம் அமைந்தாற்போன்று எனக்கும் அருள் செய்வாயாக. மகாலட்சுமியின் அம்சத்தைக் கொண்ட அன்னையே! என் வாழ்க்கையில் மங்களமும், வளமும் பெருக வரமருள்வாய் அம்மா.
![]() |
![]() |
![]() |
ஆறாம் பாசுரம்- வெட்கமில்லாதவனான அக்கண்ணன் திருவடிப்பொடிகளையாவது கொண்டுவந்து நான் உயிர்தரிக்கும்படி என் உடம்பில் பூசுங்கள் என்கிறாள்.
நடை ஒன்று இல்லா உலகத்து
நந்தகோபன் மகன் என்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயரகில்லேன் நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா உயிர் என் உடம்பையே 6
632
வரம்புகளெல்லாம் குலைந்துகிடக்கிற இவ்வுலகத்தில் ஸ்ரீநந்தகோபர் மகன் என்று ப்ரஸித்தனாய் இரக்கமற்றவனாய் சுயநலக்காரனான ச்ரிய:பதியாலே அபலையான நான் மிகவும் துன்புறுத்தப்பட்டு சிறிதும் அசைவதற்கும் சக்தியற்றவளாய் இருந்தேன். வெட்கமில்லாதவனான அக்கண்ணன் திருவடி பட்டு மிதித்த இடத்திலுண்டான ஸ்ரீபாததூளியையாவது கொண்டுவந்து விட்டுப் பிரியாத உயிரை உடைய என் உடம்பிலே பூசுங்கள்.
அன்புடன்
அனுபிரேம் 💕💕
No comments:
Post a Comment