14 August 2022

ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் ஆஸ்தானம் புறப்பாடு

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....




முந்தைய பதிவுகள் ----

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம்,  த்வஜாரோஹண காட்சிகள்...  

முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  ரெங்கமன்னார்,

 இரண்டாம்  நாள் இரவு  -ஸ்ரீ  ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும்  திருவீதி புறப்பாடு,

மூன்றாம்  நாள்  - இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி, ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு,

நான்காம்  திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ  வாகனத்திலும்  ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும், 

 ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை, 

 ஆறாம்  திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...

ஏழாம்  திருநாள் மாலை - ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்,

எட்டாம் திருநாள் இரவு- ஶ்ரீ ஆண்டாள்  புஷ்பப் பல்லக்கு,  ஶ்ரீ ரெங்கமன்னார் - குதிரை வாகனத்தில் புறப்பாடு, 

ஒன்பதாம் திருநாள் -  திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில்,

பத்தாம் திருநாள் -  ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி   வைபவம்...

பதினோன்றாம் திருநாள் -  ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் தீர்த்தவாரி முடிந்த பின் ஆஸ்தானம் புறப்பாடு


























ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...


நாச்சியார் திருமொழி
பதிமூன்றாம் திருமொழி  : கண்ணன் என்னும் 
காதல் நோய் தணிமின் எனல் 


ஐந்தாம் பாசுரம் - எனக்கென்றிருக்கும் திருவாயமுதம் கிடைக்கவில்லை என்றால் அவன் குழலூதும்போது தெறித்துக் கீழே விழும் துளிகளையாவது கொண்டுவந்து என் முகத்தில் தடவுங்கள் என்கிறாள்.


அழிலும் தொழிலும் உருக் காட்டான், 

அஞ்சேல் என்னான்; அவன் ஒருவன்

தழுவி முழுவிப் புகுந்து என்னைச் 

சுற்றிச் சுழன்று போகானால்

தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே 

நெடு மால் ஊதி வருகின்ற

குழலின் தொளைவாய் நீர் கொண்டு

 குளிர முகத்துத் தடவீரே  5

631


அழுதாலும் தொழுதாலும் தன் திருமேனியைக் காட்டாதவனாயும் “பயப்படாதே” என்றும் சொல்லாதவனாயும் உள்ள பெரியோனான கண்ணன் இங்கே வந்து என்னை நெருக்கி அணைத்து முன்னும் பின்னும் சூழ்ந்து கொண்டிருந்து போகாமலிருக்கிறான். ஐயோ! மயில்பீலிக் குடைகளாகிற சோலையின் கீழே பசுக்கூட்டங்களின் பின்புறத்திலே இருந்துகொண்டு பெரும் காதலுடைய கண்ணன் ஊதிக்கொண்டு வரப்பெற்ற புல்லாங்குழலின் த்வாரத்திலுண்டாகிற நீரைக்கொண்டு வந்து என்னுடைய முகத்திலே குளிர்த்தியாகத் தடவுங்கள்.



ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்


No comments:

Post a Comment