ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....
முந்தைய பதிவுகள் ----
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம், த்வஜாரோஹண காட்சிகள்...
முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார்,
நான்காம் திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ வாகனத்திலும் ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும்,
ஐந்தாம் திருநாள் - ஐந்து கருட சேவை,
ஆறாம் திருநாள் இரவு - ஶ்ரீ ஆண்டாள் கனக தண்டியல், ஶ்ரீ ரங்கமன்னார் கஜ (யானை) வாகனத்தில்...
ஏழாம் திருநாள் மாலை - ஶ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் சயன திருக்கோலம்,
ஒன்பதாம் திருநாள் - திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில் ...
மூன்றாம் பாசுரம் - அவன் கடைக்கண் என்னும் அம்பு பட்டு வெந்துகிடக்கும் என் நெஞ்சானது குளிரும்படி அவன் திருமார்பில் இருக்கும் வனமாலையை எடுத்து வந்து என் மார்பில் இட்டுப் புரட்டுங்கள் என்கிறாள்.
கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்கண் என்னும் சிறைக்கோலால்
நெஞ்சு ஊடுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சேல் என்னான்; அவன் ஒருவன்
அவன் மார்வு அணிந்த வனமாலை
வஞ்சியாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே 3
629
கம்ஸனைத் தொலைத்தவனாயும் பெரிய வில் போன்ற புருவங்களை உடையவனுமான கண்ணபிரானின் கடைக்கண் என்னும் சிறகையுடைய அம்பால் நெஞ்சு முழுவதும் நிலைகுலைந்து வருந்துகின்ற என்னை நோக்கி “பயப்படாதே” என்று ஒரு வார்த்தையும் சொல்லாதவனாய் நம்மைக்காட்டிலும் மிக உயர்ந்தவனான அந்த எம்பெருமான் தன் திருமார்பில் சூட்டிக்கொண்டிருக்கும் வனமாலையை ஏமாற்றாமல் கொடுத்தருள் வானாகில் அம்மாலையைக் கொண்டுவந்து என்னுடைய மார்பில் இட்டுப் புரட்டுங்கள்.
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்
No comments:
Post a Comment