06 August 2022

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர ப்ரம்மோத்ஸவம் - ஐந்து கருட சேவை

  

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ காட்சிகள்....

முந்தைய பதிவு  -- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவம் - மண் எடுக்கும் வைபவம்,  த்வஜாரோஹண காட்சிகள்  

முதல் நாள் இரவு -- பதினாறு வண்டிச் சப்பரத்தில் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ  ரெங்கமன்னார்  ... ...

 இரண்டாம்  நாள் இரவு  -ஸ்ரீ  ஆண்டாள் சந்திரபிரபை வாகனத்திலும் ஸ்ரீ ரெங்கமன்னார் சிம்ம வாகனத்திலும்  திருவீதி புறப்பாடு

மூன்றாம்  நாள்  - இரவு ஸ்ரீ ஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி, ஸ்ரீ ரெங்கமன்னார் ஹனுமந்த  வாகனத்தில் புறப்பாடு.

நான்காம்  திருநாள் - இரவு ஶ்ரீ ஆண்டாள் சேஷ  வாகனத்திலும்  ஶ்ரீ ரங்கமன்னார் கோவர்த்தன கிரி வாகனத்திலும் 

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திரு ஆடித்திருநாள் ப்ரம்மோத்ஸவம் 5ம் திருநாள் காலை 

ஶ்ரீ பெரிய பெருமாள்

ஶ்ரீ சுந்தரராஜப் பெருமாள்

ஶ்ரீ ஶ்ரீநிவாஸப் பெருமாள்

ஶ்ரீ திருத்தங்கால் அப்பன்

ஶ்ரீ ஆண்டாள்  ஶ்ரீ ரங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு ஶ்ரீ பெரியாழ்வார் மங்களாசாசன வைபவம் நடைபெற்றது....










ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருஆடிப்பூர  ப்ரம்மோத்ஸவம்  5ம் திருநாள் இரவு -  ஐந்து கருட சேவை ....

ஶ்ரீ பெரிய பெருமாள் (கருட வாகனம்)

ஶ்ரீ சுந்தரராஜப் பெருமாள் (கருடவாகனம்)

ஶ்ரீ ஶ்ரீநிவாஸப் பெருமாள் (கருடவாகனம்)

ஶ்ரீ திருத்தங்கால் அப்பன் (தங்க கருட வாகனம்)

ஶ்ரீ ஆண்டாள்(பெரிய அன்ன வாகனம் 

 ஶ்ரீ ரங்கமன்னார் (தங்க கருட வாகனம் )  

ஶ்ரீ பெரியாழ்வார் (சிறிய அன்ன வாகனம்)  















ஸ்ரீ ஆண்டாள்  திரு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா காட்சிகளை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...



நாச்சியார் திருமொழி

பன்னிரண்டாம் திருமொழி  : மற்று இருந்தீர்கட்கு


கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்

ஒன்பதாம் பாசுரம். உங்களுக்குப் பழிவராமல் இருக்கவேண்டும் என்றால் என்னை த்வாரகைக்குக் கொண்டுபோய்ச் சேருங்கள் என்கிறாள்.


கூட்டிலிருந்து கிளி எப்போதும்

 கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்

ஊட்டக் கொடாது செறுப்பனாகில் 

உலகு அளந்தான்! என்று உயரக் கூவும்

நாட்டில் தலைப்பழி எய்தி உங்கள்

 நன்மை இழந்து தலையிடாதே

சூட்டு உயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் 

துவராபதிக்கு என்னை உய்த்திடுமின் 9

625


நான் வளர்த்த கிளியானது கூட்டில் இருந்துகொண்டு எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று கூவிக்கொண்டிருந்தது. அதற்கு உணவு கொடுக்காமல் தண்டனை கொடுத்தேனாகில் உலகளந்த பெருமானே! என்று கூவுகின்றது. இந்தத் திருநாமங்கள் என் காதில் விழுந்தால் நான் மயங்கி விழுகின்றேன். ஆகையால், இந்த உலகில் பெரிய பழியைச் சம்பாதித்து உங்கள் பெயரையும் கெடுத்துக்கொண்டு தலை கவிழ்ந்து நிற்கவேண்டாதபடி உச்சிப் பகுதி மிகவும் உயர்ந்திருக்கும் மாடங்களால் சூழப்பட்டு விளங்குகின்ற த்வாரகையிலே என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்துவிடுங்கள்.




ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்

No comments:

Post a Comment