அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்...
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள முக்குறுணிப் பிள்ளையார் ....
மீனாட்சி அம்மன் சன்னிதியில் இருந்து சொக்கநாதராகிய சுந்தரேஸ்வரரைத் தரிசிக்கச் செல்லும் வழியில் தெற்குப் பார்த்த வண்ணம் எட்டு அடி உயர ‘முக்குறுணி விநாயகர்’ எழுந்தருளி உள்ளார். கி.பி.17-ஆம் நூற்றாண்டில் திருமலை நாயக்க மன்னருக்கான அரண்மனை கட்டுவதற்காக, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே மண் எடுக்கப்பட்டது. அப்போது மண்ணுக்கடியில் இருந்து முக்குறுணி விநாயகர் கிடைத்ததாகவும், பின்னர் மன்னர் திருமலை நாயக்கர் முக்குறுணி விநாயகரை, மீனாட்சி அம்மன் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ததாகவும் வரலாறு கூறுகிறது.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று, முக்குறுணி விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் மிகப்பெரிய அளவில் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்வது வழக்கம். ‘குறுணி’ என்றால் 6 படியாகும். முக்குறுணி என்பதால், 18 படி பச்சரிசியால் கொழுக்கட்டை செய்து நைவேத்தியம் செய்கிறார்கள்.
ஆலய மடப்பள்ளியில் கொழுக்கட்டைச் செய்யப்பட்டு, விநாயகர் சதுர்த்தி யன்று காலை 11 மணி அளவில் கரும்பில் பிள்ளையினைத் தொட்டில் கட்டி தூக்கி வருவதுபோல் கொழுக்கட்டையை எடுத்துவந்து படைத்து, பக்தர்களுக்கும் வினியோகிக்கிறார்கள்.
வாழ்த்துகள் அனு!
ReplyDeleteகீதா
எமது வாழ்த்துகளும்கூடி
ReplyDelete