Showing posts with label ஶ்ரீ அழகிய நம்பி திருக்குறுங்குடி. Show all posts
Showing posts with label ஶ்ரீ அழகிய நம்பி திருக்குறுங்குடி. Show all posts

14 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - பஞ்ச கருட சேவை.

 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

 முந்தைய பதிவு - ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் 

திருக்குறுங்குடி ஸ்ரீ வைஷ்ணவ நம்பி திருக்கல்யாண பிரம்மோற்சவம், 5ம் நாள் இரவு - பஞ்ச கருட சேவை. 

நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, கிடந்த நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி பெருமாள்கள் கருட வாகனத்தில் புறப்பாடு ...

முதல் மூன்று பெருமாள்களும் ஒரே திருக்கோவிலை சேர்ந்தவர்கள். மற்ற இருவரும் அருகில் உள்ள திருக்கோயில்களை சேர்ந்தவர்கள் ( முறையே 8 கி.மீ மற்றும் 1 கி.மீ )


13 March 2023

ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம்

 ஶ்ரீ அழகிய நம்பி - திருக்கல்யாண ப்ருமமோத்ஸவம் - மார்ச் 2023

வராஹ புராணம் மற்றும் கைசிக புராணத்தில் இத்திருத்தலத்தைப் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன. வராஹ புராணத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு வராஹ வடிவத்தில் ஸ்ரீ லட்சுமி தாயாருடன் தங்கியிருந்து சிறிய குடிகை என்று பொருள்படும் இடமாதலால் குறுங்குடி எனப் பெயர் பெற்றது எனவும், வராஹ அவதாரத்தில் மிகப் பெரிய வடிவத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு, வடிவில் குறுகிய இடம் என்பதால் குறுங்குடி என்றும் இத்திருத்தலம் பெயர் பெற்றதாகப் புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் வாமன அவதாரமும் ஒன்று. 

வாமனன் என்றால் குறுகிய வடிவினான் என்பது பொருள். அந்த குறுகிய வடிவத்துக்குள்ளே வரம்பில்லாத பூரண தத்துவங்கள் எல்லாமே அடங்கிக் கிடக்கின்றது.; ஆலமரத்தில் உள்ள அற்புத தத்துவங்கள் எல்லாம் தெண்ணீர் கயத்து சிறுமீன் சினையினும் சிறியதான ஒரு வித்துக்குள்ளே அடங்கிக் கிடப்பது போன்று பேரண்டத்திலுள்ள தத்துவங்கள் எல்லாம் தன்னுள் அடங்கிக் கொண்டு இருக்கிறது இந்த வாமன வடிவம்.