09 September 2025

பதினோராவது நாள் - சட்டத்தேரில் அம்மையும் அப்பனும் ..

 ஆவணி மூலத் திருவிழாவின்  கொடியேற்றம்  

 முதல்நாள் ---கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

இரண்டாம் நாள் --- நாரைக்கு முக்தி கொடுத்த லீலை.

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...

 ஐந்தாம் நாள் திருவிழா - உலவாக் கோட்டை அருளிய லீலை

ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை

ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை

எட்டாம்  நாள் திருவிழா - நரியை பரியாக்கிய லீலை 

ஒன்பதாம்  நாள் -  புட்டுக்கு மண் சுமந்த லீலை 

பத்தாம் நாள்  - விறகு விற்ற லீலை 

பதினோராவது  நாள் - சட்டத்தேர்













ஆவணி மூல திருவிழா பதினோராம் நாள் இரவு சுவாமி சுந்தரேஸ்வரர் அன்னை மீனாட்சி ஒரே சப்தாவர்ண சப்பரத்திலும் திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருவாதவூர் எம்பிரான் மாணிக்கவாசகர் சிம்மாசனத்தில் எழுந்தருளிய காட்சி.













திருவாசகம் - எம்பிரான் மாணிக்கவாசகர்


"பண்சுமந்த பாடற் பரிசு படைத்தருளும்

பெண்சுமந்த பாகத்தன் பெம்மான் பெருந்துறையான்

விண்சுமந்த கீர்த்தி வியன்மண் டலத்தீசன்

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை

மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு

புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்" 


அன்பர் பாடும் பாடலைப் பரிசிலாகக் கொண்டருள் கின்ற பெண்பாகனும், திருப்பெருந்துறையை உடையவனும், தேவலோகத்தவரும் புகழும்படியான புகழை உடையவனும், மண்ணுலகத் தலைவனும், நெற்றிக் கண்ணனும் ஆகிய கடவுள் கூடற் பதியில், மண் சுமந்து கொண்டு பாண்டியன் கைப்பிரம்படியால் புண் பட்ட பொன்போலும் திருமேனியைப் புகழ்ந்து பாடுவோம்.   


மீனாட்சி அம்மன்  சுந்தரேஸ்வரர்  திருவடிகளே சரணம் ....




தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

1 comment:

  1. படங்கள் அனைத்தும் வெகு அழகு. தொடர்கிறேன்.

    ReplyDelete