29 September 2025

ஸ்ரீ ரங்கநாச்சியார் திருவடி சேவை

ஸ்ரீ ரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் 7-ம் திருநாள் -

தாயார் திருவடி சேவை



பிராட்டிக்கு புஷ்கரிணீம் என்ற திருநாமம் ஶ்ரீசூக்தத்தில் உண்டு!

புஷ்கரிணீம்  என்றால் போஷிப்பவள் என்று பொருள்!

கீர்த்தி, செல்வம், ரூபம் போன்றவற்றை அளிப்பவள்!
எல்லா புஷ்டிகளையும் பலனாகக் கொடுக்கும் இந்தத் திருநாமம்!

எல்லாக் சுகங்களையும்  அளிப்பவள்!

ஶ்ரீ மஹாலக்ஷ்மீ ஆத்ம ஞானத்தையும், முக்தி பலத்தையும், கொடுப்பவள்!
“ஆத்ம வித்யா ச தேவீ த்வம் விமுக்தி பலதாயிநீ”. ..என்று விஷ்ணுபுராணம் சொல்கிறது!




















ஸ்ரீரங்கநாச்சியார் திருவடி சேவை - ஆஸ்தான மண்டபத்தில் 



பெருமாள் திருமொழி 

3. மெய் இல் வாழ்க்கையை 
அழகிய மணவாளன்பால் பித்தன் எனல் 


668
  
மெய் இல் வாழ்க்கையை*  மெய் எனக் கொள்ளும்*  இவ்
வையம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஐயனே*  அரங்கா! என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்*  என்தன் மாலுக்கே (2)

    
669
 நூலின் நேர்-இடையார்*  திறத்தே நிற்கும்* 
ஞாலம் தன்னொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆலியா, அழையா*,  அரங்கா என்று* 
மால் எழுந்தொழிந்தேன்*  என்தன் மாலுக்கே 2


670  
மாரனார்*  வரி வெஞ் சிலைக்கு ஆட்செய்யும்* 
பாரினாரொடும்*  கூடுவது இல்லை யான்*
ஆர-மார்வன்*  அரங்கன் அனந்தன்*  நல் 
நாரணன்*  நரகாந்தகன் பித்தனே  3



ஸ்ரீ  நம்பெருமாள் திருவடிகளே சரணம் ... !!!
ஸ்ரீ ரங்கநாச்சியார்  திருவடிகளே சரணம் ...!!!


அன்புடன்
அனுபிரேம் 💕💕

No comments:

Post a Comment