Showing posts with label புகைபடம். Show all posts
Showing posts with label புகைபடம். Show all posts
25 January 2017
30 December 2016
திருமண்டங்குடி.. தொண்டரடி பொடியாழ்வார் அவதார ஸ்தலம்
ஆழ்வார் கோவில் எனப்படும் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவில்,
தொண்டரடிப்பொடியாழ்வார் அவதார ஸ்தலம்,
திருமண்டங்குடி.
தொண்டரடிப் பொடியாழ்வார்..
சோழநாட்டில் திருமண்டங்குடியில் மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் (தேய்பிறை சதுர்த்தசி திதியில்) அவதரித்தவர்.
இவர் அருளிச் செய்த திவ்வியப் பிரபந்தங்கள் இரண்டு.
அவை:
1. திருமாலை - 45 பாசுரங்கள்
2. திருப்பள்ளி எழுச்சி - 10 பாசுரங்கள்
இவர் இயற்பெயர் விப்ரநாராயணர்.
இப்படங்கள் எல்லாம் அப்பா அனுப்பியவை....
திருமண்டங்குடி...செல்லும் வழி...
1. தஞ்சாவூர் - பாபநாசம் - புள்ளபூதங்குடி யில் இறங்க வேண்டும் ... அங்கு திருமண்டங்குடி. செல்லும் மினி பஸ் கிடைக்கும்...
2. கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் ஏறினால் கூனசஞ்சேரி யில் இறங்க வேண்டும்...
அங்கிருந்து 1௦ நிமிட நடை பயணத்தில்...திருமண்டங்குடி
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.
-தொண்டரடிப் பொடியாழ்வார்
முதல் திருமொழி (877)

ஆழ்வார் கோவில் எனப்படும் ஸ்ரீரங்கநாதர் திருக்கோவிலில்,
கடந்த 27 ஆம் தேதி ( 27.12 . 2016 ) தொண்டரடிப் பொடியாழ்வாரின் அவதார உற்சவம் நடைப்பெற்றது...
அப்பொழுது எடுத்த படங்கள் இன்று உங்கள் பார்வைக்கு....
கருடவாகனத்தில் பெருமாள்
அன்ன வாகனத்தில் தொண்டரடி பொடியாழ்வார்
வாகனத்தில் வீதி உலா
இப்படங்கள் எல்லாம் அப்பா அனுப்பியவை....
திருமண்டங்குடி...செல்லும் வழி...
1. தஞ்சாவூர் - பாபநாசம் - புள்ளபூதங்குடி யில் இறங்க வேண்டும் ... அங்கு திருமண்டங்குடி. செல்லும் மினி பஸ் கிடைக்கும்...
2. கும்பகோணத்திலிருந்து திருவைகாவூர் செல்லும் டவுன் பஸ் ஏறினால் கூனசஞ்சேரி யில் இறங்க வேண்டும்...
அங்கிருந்து 1௦ நிமிட நடை பயணத்தில்...திருமண்டங்குடி
மறம்சுவர் மதிளெ டுத்து மறுமைக்கே வெறுமை பூண்டு
புறம்சுவ ரோட்டை மாடம் புரளும்போ தறிய மாட்டீர்
அறம்சுவ ராகி நின்ற அரங்கனார்க் காட்செய் யாதே
புறம்சுவர் கோலஞ் செய்து புள்கவ்வக் கிடக்கின் றீரே.
-தொண்டரடிப் பொடியாழ்வார்
முதல் திருமொழி (877)
அன்புடன்
அனுபிரேம்
22 December 2016
சான்கி டேன்க், பெங்களூர் .... (sankey tank ,Bengalaru)
சான்கி டேன்க், பெங்களூர் .... (sankey tank , Bengalaru) ...
Malleshwaram மற்றும் Sadashiva நகர்களின் மத்தியில் பெங்களூரின் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது . இந்த ஏரி யின் பரப்பளவு... சுமார் 15 ஹெக்டேர் (37.1 ஏக்கர்) .....
அங்கு எடுத்த படங்கள்....
இந்த ஏரி மதிய நேரத்தில் மூடப்படும்....அந்த நேரத்தில் வெளியில் இருந்து எடுத்த காட்சி...
அன்புடன்,

யாருமில்லா தனிமையிலே...
அன்புடன்,
அனுபிரேம்
02 December 2016
ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..
அனைவருக்கும் வணக்கம்...
இதுவரை புதுச்சேரி பயணத்தில்....
புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )
புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..,,,
ஆரோவில் (Auroville ) உதய நகரம்....
ஆரோவில் (Auroville ) அன்னை என ரசித்தோம்....
இன்று
ஆரோவில் கடற்கரை -
ஆரோவில் அருகில் உள்ளதால் ஆரோ கடற்கரை என குறிப்பிடப்படுகிறது. அது ஆரோவிலின் எதிர் புறம், ECR சாலையின் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. புதுவையில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது...
இது ஆழமற்ற மற்றும் சிறிய அலைகள் கொண்ட கடற்கரை.... மிகவும் பிரபலமான இடமாகவும் உள்ளது... வார இறுதிகளில் மக்கள் வருகையும் அதிகமாக இருக்குமாம்...
நாங்கள் சென்றது பவுர்ணமி நிலவில்....எனவே அலைகளும் பெரிதாக ஆர்ப்பரிப்புடன் இருந்தன....
பசங்களுடன் சென்று ரசிக்க தக்க இடம்....
இதுவரை எங்கள் புதுவை பயணத்தின் பதிவுகளை ரசித்தமைக்கு மிகவும் நன்றி...
மீண்டும் ஒரு அழகான பதிவுடன் மீண்டும் சந்திக்கலாம்.....
நன்றி.....வணக்கம்....

30 November 2016
ஆரோவில் 2 (Auroville ) --- புதுச்சேரி
அனைவருக்கும் வணக்கம்...
இதுவரை புதுச்சேரி பயணத்தில்....
புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )
புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..,,,
ஆரோவில் (Auroville ) உதய நகரம்.... என இதுவரை ரசித்தோம்,..
இன்றும் ஆரோவில் (Auroville ) பற்றிய பதிவே....
மாத்ரிமந்திர் காண்பதற்கு முதலில் அனுமதி சீட்டுகள் பெறவேண்டும்.... ஒரு அறிமுக வீடியோவை பார்த்த பிறகு, ஆரோவில் பார்வையாளர்கள் 'மையத்தில் அந்த சீட்டை இலவசமாக பெறலாம்.
பார்வை நேரம்..
திங்கள் - சனிக்கிழமை ..
காலை 9 - 1:00 மணி மற்றும் 1.30 - மாலை 4.30 மணி
ஞாயிறு - காலை 9.30 மணி 1 மணி வரை மட்டுமே,
இந்த மைய பகுதியில் அமர்ந்து தியானம் செய்ய
வேண்டுமானால்... அதற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்...
மிகவும் அழகான இடம்....பராமரிப்பு மிகவும் அருமை...
தொடரும்
ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..
அன்புடன்
அனுபிரேம்
இதுவரை புதுச்சேரி பயணத்தில்....
புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )
புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake )..,,,
ஆரோவில் (Auroville ) உதய நகரம்.... என இதுவரை ரசித்தோம்,..
இன்றும் ஆரோவில் (Auroville ) பற்றிய பதிவே....
ஆரோவில் தோன்ற காரணமான ஸ்ரீஅரவிந்த அன்னையை பற்றி.....
அன்னை என்று அனைவராலும் அழைக்கப்படும் "" மிர்ரா அல்ஃபாஸா " பாரீஸ் நகரில் 1878 ஆண்டு, பிப்ரவரி திங்கள் 21 ஆம் நாள் அவதாரம் செய்தவர். சிறு வயதிலேயே படிப்பிலும், ஒவியங்கள் வரைவதிலும், பியானோ வாசிப்பதிலும் தேர்ச்சி
பெற்றிருந்த மிர்ரா மற்ற குழந்தைகளிடமிருந்து வேறு பட்டு விளங்கினார், அறியாப்பருவத்திலேயே ஆன்மீகம் அவரை ஆட்கொண்டது. நான்கு வயதிலேயே தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்து தியான நிலையில் மூழ்கத் தொடங்கினார்.. ஆன்மீக ஒளி, வெள்ளம் போல் பெருகி அவருள் பாய்ந்து பரவசப்படுத்தியது. 12 வயது இருக்கும் போது பல இரவுகள், தன் உடலை விட்டு வரும் அனுபவத்தை உணர்ந்தார்.
பின்னர் சித்து வேலைகளில் நாட்டம் ஏற்பட்டதால் அல்ஜீரிய நாட்டுக்குச் சென்று அங்கு மாகஸ் தியான் மற்றும் அவர் மனைவி அல்மா தியான் ஆகியோரிடம் பல சித்து ஞானங்களைக் கற்றார்.
விவேகானந்தரின் "ராஜயோகம்" நூல் அன்னையின் ஆன்மீகவளர்ச்சிக்குத் துணை புரிந்தது...
19 -வது வயதில் மிர்ராவிற்கு அவரது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். திருமணத்தில் நாட்டம் இல்லாத அன்னைக்கு இதுவும் ஒரு உதவியாக அமைந்தது, தொழில் முறையாக பாண்டிச்சேரி வந்த அவரது கணவர் பால் ரிச்சர்ட், இந்தியாவின் பெருமைகளையும் அரவிந்தரைப் பற்றியும் அறிந்து நாடு திரும்பியதும் அவற்றை அன்னைக்கு எடுத்துரைத்தார்.
தன் கணவருடன் 1914 ஆம் ஆண்டு புதுவை வந்த அன்னை அரவிந்தரைச் சந்தித்தார். தன்னை ஆன்மீகப் பாதையில் வழி நடத்தும் ஞானியாக, தன் உள்ளூணர்வில் கண்ட கிருஷ்ணனாக, ஆத்ம அனுபவத்தின் அளப்பரிய சக்தியாக அரவிந்தரை அன்னை உணர்ந்தார்.
முதலாம் உலகப் போர் ஆரம்பித்த போது மிர்ரா தாயகம் திரும்பினார். அங்கிருந்து ஜப்பான் முதலிய நாடுகளுக்கு
அவர் சென்று வந்தார், ஆனாலும் அவர் மனம் இந்திய மண்ணிலேயே குடி கொண்டிருந்தது. ஆறு ஆண்டுகளுக்குப்
பின்னர் 1920-ஆம் ஆண்டு புதுச்சேரிக்கு திரும்பிய அன்னை, தான் தன் பூத உடல் நீத்த தருணம் வரை அங்கேயே
தங்கிவிட்டார்.
1956 ஆம் ஆண்டு அரவிந்த ஆசிரமம் உருவான போது அதன் உடலும், உயிருமாக அன்னை விளங்கினார். அன்பும், அருள், ஆனந்தம், அமைதி என ஆன்மீக ஒளி பரப்பிய ஆசிரமம் அன்னையின் அருளால் உன்னதமான நிலையை அடைந்தது. 1952 ஆம் ஆண்டு அரவிந்தர் உலக கல்வி மையமும் 1964 ஆம் ஆண்டு ஆரோவில் என்னும் உலக சமாதான நகரமும் பாண்டிசேரியில் அன்னையின் முயற்சியால் உன்னதமான நிலையை அடைந்தது.
சுமார் 50 ஆண்டுகள் அன்னையின் அன்பும் அருளாட்சியும் மக்களுக்குக் கிட்டியது. 95 வயது வரை மக்களுக்கு அன்பையும் அருளையும் வழங்குவது மட்டுமே தன் பணியாகக் கொண்டிருந்த அன்னை 1973 ஆம் ஆண்டு நவம்பர் 17-ம் நாள் தன் பூத உடலைத் துறந்தார். இலட்சக்கணக்கான் அன்பர்கள் இன்றும் நாள்தோறும் அவரது பூத உடல் அமைந்த சமாதியில் தியானத்தில் அமர்ந்து அமைதியையும், ஆனந்தத்தையும் அடைகிறார்கள்...,
ஆரோவில் உள்ள பெரிய ஆலமரம்...
பார்வை நேரம்..
திங்கள் - சனிக்கிழமை ..
காலை 9 - 1:00 மணி மற்றும் 1.30 - மாலை 4.30 மணி
ஞாயிறு - காலை 9.30 மணி 1 மணி வரை மட்டுமே,
இந்த மைய பகுதியில் அமர்ந்து தியானம் செய்ய
வேண்டுமானால்... அதற்கு முன்பே பதிவு செய்திருக்க வேண்டும்...
மிகவும் அழகான இடம்....பராமரிப்பு மிகவும் அருமை...
தொடரும்
ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..
அன்புடன்
அனுபிரேம்
25 November 2016
ஆரோவில் (Auroville ) --- புதுச்சேரி
அனைவருக்கும் வணக்கம்....
புதுச்சேரி பயணத்தில்....
புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )
புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake ).. யை இதுவரை ரசித்தோம்,,,,
இன்று காண இருப்பது உதய நகரத்தை....
பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம் சர்வதேச புகழ் பெற்ற நகரம். உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர்.
''மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே " ஆரோவில்லின் நோக்கமாகும் 'என்ற பிரகடனத்தோடு ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம் திருக்கனவில் உதித்ததாகும்.
'பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது 'என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.
பெரிய ஆலமரத்திலிருந்து சிறிது தொலைவில் ஒரு வட்ட வடிவமான மேடையில் தாமரை மொட்டு வடிவத்தில் சலவைக்கல்லாலான ஒரு தாழியில் உலகத்தின் 121 நாடுகளிலிருந்தும் இந்தியாவில் 25 மாநிலங்களிலிருந்தும் அந்தந்த இடத்திலிருந்து ஒரு பிடி மண் கொணரப்பெற்று அங்கு இடப்பெற்றது.
நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (அமைதி) என்று பெயர்.
மையப்பகுதிக்கு செல்லும் வழி..
மைய பகுதி....golden globe ..மாத்ரி மந்திர் ...
நாங்கள் சென்றது மாலை மயங்கும் நேரத்தில் ..அப்பொழுது இந்த மைய பகுதி பார்ப்பதற்கு....தக தக வென...மிகவும் ஜொலித்தது
...
அங்கே வைக்கப் பட்டிருந்த கல்வெட்டில் ஆரோவிலின் வரலாறு....
ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.
தொடரும்...
ஆரோவில் (Auroville ) அன்னை
ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..
அன்புடன்
அனுபிரேம்..
புதுச்சேரி பயணத்தில்....
புதுவை சுண்ணாம்பாறு பாரடைஸ் கடற்கரை...( paradise beach )
புதுச்சேரி ... ஊசிட்டேரி ஏரி (ousteri lake ).. யை இதுவரை ரசித்தோம்,,,,
இன்று காண இருப்பது உதய நகரத்தை....
பாண்டிச்சேரி நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள உதய நகரம் என்ற பொருள்படும் ஆரோவில் நகரம் சர்வதேச புகழ் பெற்ற நகரம். உலகம் ஒன்றுதான் என்பதை உணர்த்தும் வகையில் 124 நாடுகளில் இருந்து மண் எடுத்து வந்து அதை ஒன்றாக்கி வைத்து உள்ளனர்.
''மனித குல ஒருமைப்பாட்டை உண்மையாக்குவதே " ஆரோவில்லின் நோக்கமாகும் 'என்ற பிரகடனத்தோடு ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்டது ஆரோவில் என்னும் சர்வதேச நகரமாகும். இது அவர்தம் திருக்கனவில் உதித்ததாகும்.
'பழமையானவை, தற்காலத்தவை, புதியவை, இனிவரவிருப்பவை ஆகிய எல்லா மதங்களையும் விட்டு விட்டுக் குறிப்பாகத் தெய்வத் தன்மையுடைய வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக ஏற்பட்டதே ஆரோவில். தன்னுடைய உணர்வைக் கண்டுபிடிக்க முயற்சி செய்வதற்கான ஓர் இடம் இது 'என்று அன்னை பூமிப்பரப்பின் வரைபடத்தை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓரிடத்தில் தொட்டுக் காட்டினார்.
நகரத்தின் மையத்தில் ஆரோவில்லின் ஆன்மாவாகிய மாத்ரி மந்திர் அமைந்துள்ளது. அதனைச்சுற்றி பூந்தோட்டங்கள் உள்ளன. இந்த மையப்பகுதிக்கு பேரமைதி (அமைதி) என்று பெயர்.
மையப்பகுதிக்கு செல்லும் வழி..
அழகிய குடில்..
மைய பகுதி....golden globe ..மாத்ரி மந்திர் ...
நாங்கள் சென்றது மாலை மயங்கும் நேரத்தில் ..அப்பொழுது இந்த மைய பகுதி பார்ப்பதற்கு....தக தக வென...மிகவும் ஜொலித்தது
...
அங்கே வைக்கப் பட்டிருந்த கல்வெட்டில் ஆரோவிலின் வரலாறு....
ஆரோவில் சர்வதேச நகரில் சுமார் 2 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் வெளிநாட்டினர் ஆவார்கள்.
தொடரும்...
ஆரோவில் (Auroville ) அன்னை
ஆரோவில் கடற்கரை ( aurovile beach )..
அன்புடன்
அனுபிரேம்..
Subscribe to:
Posts (Atom)
-
அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோயில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ளது.
-
கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தில் அருள்மிகு முத்தையா சுவாமி திருக்கோயில் அமைந்துள...
-
திருமங்கையாழ்வார் அருளியவை ---- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண்டகம், திருவெழுக்கூற்றிருக்கை, பெரிய திருமடல், சிறிய...