11 September 2026

மகாகவி பாரதியாரின் --- நின்னைச் சரணடைந்தேன்..

  மகாகவி பாரதியாரின் நினைவு நாள் இன்று ...





🌺 கண்ணம்மா – எனது குலதெய்வம்

பல்லவி

நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணம் 1

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணம் 2

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைப் போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணம் 3

தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வண்ணம்
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணம் 4

துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

சரணம் 5

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!
நின்னைச் சரணடைந்தேன் – கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்!

பொருள்: தங்கம், புகழ், உயர்வு போன்ற ஆசைகளால் வரும் கவலைகளையும், அச்சத்தையும் நீக்கி, தன் செயல்களை விட இறைவனின் திருவுளத்தை ஏற்று, துன்பமின்றி அறநெறியில் வாழவும், நல்லதை வளர்த்து தீமையை அகற்றவும் கண்ணம்மாவிடம் பாரதியார் சரணடைகிறார்.



















வளர்க கவியின் புகழ்.....!


அன்புடன்
அனுபிரேம் 🍀🍀🍀

No comments:

Post a Comment