வெண்ணை திருடிய கண்ணன்
கோகுலத்திலே, ஒரு வீட்டிலே புகுந்து வெண்ணெய் திருடிக் கொண்டிருக்கிறான் கிருஷ்ணன்.
அப்போது அங்கு வந்த அந்த வீட்டின் பெண்மணி “யார் நீ?” எனக் கேட்கிறாள்.
“பலராமனின் தம்பி” என சாமர்த்தியமாகக் கூறுகிறது குழந்தை.
“இங்கு எங்கு வந்தாய்?” என வினவுகிறாள் அந்தப்பெண்.
“என்வீடு என நினைத்து நுழைந்து விட்டேன்” என்கிறான் கண்ணன். (ஏனெனில், கிராமங்களிலே எல்லா வீடுகளும் ஒரே மாதிரி இருக்குமல்லவா!)
அந்தப் பெண் விடவில்லை.
மேலும் கேட்கிறாள்.
“அதுசரி, வெண்ணெய்ப் பாத்திரத்தில் கையை வைப்பானேன்?” என்கிறாள்.
“கன்றுக்குட்டி ஒன்று காணவில்லை. ஒருவேளை அது இந்த வெண்ணெய்ப் பாத்திரத்தில் இருக்கிறதோ எனப் பார்க்கிறேன். ஏதும் வருத்தமடைய வேண்டாம்” என விஷமமாகப் பதிலளிக்கிறான் கண்ணன்.
கன்றுக்குட்டியை வெண்ணெயிருக்குமிடத்தில் தேடிய அந்த குறும்பனைக் கண்டு யார்தான் மோகிக்க மாட்டார்கள்.
கோகுலத்திலே, கிருஷ்ணன் வெண்ணெயை மட்டும் திருடவில்லை.
கோபிகைகள் அனைவருடைய உள்ளத்தையும் கொள்ளை கொண்டான்.
அதனால் தான், தயிர், மோர், பால் எனக்கூவி விற்க வேண்டிய ஒருபெண்மணி, கிருஷ்ணன் மீதிருந்த பிரேமை மிகுதியால், “கோவிந்தா, தாமோதரா, மாதவா” என கூவிக்கொண்டே போனாள் என்கிறார் லீலாசுகர்.
![]() |
முந்தைய பதிவுகள் ---
![]() |
![]() |
பெரியாழ்வார் திருமொழி
மூன்றாம் பத்து
3-3 மூன்றாம் திருமொழி - சீலைக் குதம்பை
கண்ணன் கன்றுகளை மேய்த்துவிட்டு திரும்பி வருவதைக் கண்டு யசோதை மகிழ்தல்
கண்ணா உன் திருவடிகளே சரணம் !!!!
கேசவா உன் திருவடிகளே சரணம் !!!!









No comments:
Post a Comment