07 September 2023

4. ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி --- எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்கள் .....

ஜெய்  ஸ்ரீ  கிருஷ்ணா... 





 வருணன் நந்தகோபரை பிடித்துச் செல்லுதல்

ஒரு நாள் நந்தகோபர் யமுனையில் குளிக்க சென்றிருந்தார். அப்பொழுது அதிகாலை நேரம், அதனால் இருட்டாகவே இருந்தது.

 அந்த நேரம் வருணனின் தூதர்களில் ஒருவன் நந்தகோபர் குளிப்பதை பார்த்தான் அவன் நந்தகோபரை இழுத்துக்கொண்டு, வருணனிடம் கொண்டு சென்றுவிட்டான்.

 நதிக்கு சென்ற நந்தகோபர் திரும்பி வராததை கண்டு எல்லோரும் அழ ஆரம்பித்தார்கள். 

அனைவரும் கிருஷ்ணனிடம் சென்று முறையிட்டார்கள். 

கிருஷ்ணன் கண்களை மூடிக்கொண்டு தன் யோக சக்தியை பயன்படுத்தி இது வருணனின் குறும்புத்தனம் என்று தெரிந்துக்கொண்டான். 

உடனே கிருஷ்ணன் அந்த நதி கரைக்கு சென்று அதில் குதித்து வருணன் இருக்கும் இடம் சென்றடைந்தான். 

வருணன் கிருஷ்ணனின் காலில் விழுந்து வணங்கி தன் இரண்டு கைகளையும் கூப்பி கிருஷ்ணனை பார்த்து, "பகவானே இன்று நான் ஆசிர்வதிக்க பட்டேன்.

 உங்களுடைய பாதம் எங்கெல்லாம் படுகிறதோ அதை தொடுகிறவர்கள் பிறவிக் கடலிலிருந்து காப்பாற்ற படுகிறார்கள். என்னையும் எனது தூதரையும் மன்னித்து அருளுங்கள். 

உங்களுடைய தந்தையை நீங்கள் அழைத்து செல்லலாம்".

கிருஷ்ணன் அதை ஏற்றுக்கொண்டு மனதில் சந்தோஷந்துடன் அவன் தந்தையுடன் வீடு திரும்பினான்.

இதை பார்த்த கோபியர்கள் மனதில் அவன் தெய்வமாகவே தோன்றினான்.

 பலநாட்களாக அவர்கள் மனதில் கிருஷ்ணனை பற்றி முழுவதாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அவன் வசிக்கும் வைகுண்டத்தை பார்க்க வேண்டும் என்றும் ஆசை வைத்திருந்தார்கள். 

அவர்கள் மனதில் உள்ள ஆசையை அறிந்து கொண்ட கிருஷ்ணன் அதை பூர்த்தி செய்தான்.

 அதன் விளைவாக கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்தனர், அவர்கள் நாராயணனை கிருஷ்ணனாக பார்த்தார்கள், எல்லா தேவர்களாலும் போற்ற பட்டார். 

இன்னொரு புறம் திரும்பி அவர்கள் பக்கம் பார்த்தால் அங்கும் கிருஷ்ணன் இருந்தான்.

 அதன் பிறகு அவர்கள் மறுபடியும் பிருந்தாவனம் வந்தடைந்தனர். கோபியர்கள் வைகுண்டத்தை பார்த்ததை அவர்களாலே நம்ப முடியவில்லை.

பகவான் கிருஷ்ணனின் லீலைகளே ஆச்சரியம்தான்...






முந்தைய பதிவுகள் ---


1. ஆயர்பாடி மாளிகையில்  ..2023

2. கண்ணா.... கருமை நிறக் கண்ணா.. 2023

3. கோகுலாஷ்டமி - கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான் 2023


 

மாய கண்ணன்  ---- சாட்சி பூதம்   .... 2022

ராதையின்  கண்ணன் .... 2022

ஸ்ரீ   கிருஷ்ண ஜெயந்தி ... 2022

கோபாலன் ......2022

யசோதையின்  கண்ணன் ....2022

கண்ணன் வருவான் ... 2022


கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே..... 2021

குன்று  குடையாய் எடுத்தாய்... 2021

கண்ணன் வருவான் .. 2021


 கோபாலா ...கோவிந்தா - 2020...







பெரிய திருமொழி  - பத்தாம் பத்து

10 -6 எங்கானும்  ஈது  ஒப்பது 

உயர்வற உயர்ந்த மாயோன் வெண்ணெயுண்ட 

 எளிமையில் ஈடுபடல் 



எங்கானும் ஈது ஒப்பது ஓர் மாயம் உண்டே?*

  நர  நாரணன் ஆய் உலகத்து அற நூல்*

சிங்காமை விரித்தவன் எம்பெருமான்*  

அது அன்றியும், செஞ்சுடரும், நிலனும்,*

பொங்கு ஆர் கடலும், பொருப்பும், நெருப்பும் 

நெருக்கிப் புக*  பொன் மிடறு அத்தனைபோது,*

அங்காந்தவன் காண்மின் இன்று, ஆய்ச்சியரால்* 

 அளை, வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே. 1  (2)

1898  


          

குன்று ஒன்று மத்தா, அரவம் அளவி* 

 குரை மா கடலைக் கடைந்திட்டு,*  ஒருகால்-

நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர* 

 நினைந்த பெருமான், அது அன்றியும், முன்,*

நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல்ஏழ்* 

 மலை ஏழ் உலகு ஏழ் ஒழியாமை நம்பி,* 

அன்று, உண்டவன் காண்மின் இன்று, ஆய்ச்சியரால்*

  அளை,வெண்ணெய் உண்டு, ஆப்புண்டிருந்தவனே. 2

1899







பாங்கே பிஹாரி கோவில் 

விருந்தாவன்.


  ஸ்ரீ மதுரா ஜி








தொடரும் ....

ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!




அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖


1 comment:

  1. படங்களும் கதைகளும் நல்லாருக்கு, அனு

    கீதா

    ReplyDelete