03 September 2023

27. ஆதிசங்கர விமான மண்டபம், அலஹாபாத்.

 ஜெய் ஸ்ரீ ராம் .....




முந்தைய பதிவுகள் ...


 1. வாரணாசி ......




27. ஆதிசங்கர விமான மண்டபம், அலஹாபாத்.




திரிவேணி சங்கம கரையில் தென்னிந்திய முறையில், காஞ்சி காமகோடி பீடத்தால் கட்டப்பட்ட கோயில் இதுவாகும் .

 நான்கு மாடியுடன், 131 அடி உயரம் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

 1970-ம் ஆண்டு தொடங்கப்பட்ட கட்டிடப் பணிகள், 16 ஆண்டுகள் கழித்து நிறைவடைந்தன. 

நுழைவாயில் ஆதிசங்கரர், மந்தன் மிஸ்ரா விக்கிரகங்கள் காணப்படுகின்றன.

 சுவர்களில் ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் ஓவியங்களைக் காணலாம். அமர்ந்த கோலத்தில் காமாட்சி தேவி விக்கிரகம், வெளிப்புறச் சுவரில் மூகாம்பிகை, துர்கை, விந்தியவாசினி சிற்பங்கள் காணப்படுகின்றன.

 இரண்டாவது தளத்தில் பாலாஜி வடிவத்தில் மகாவிஷ்ணு, எதிரே வேணி மாதவர் அருள்பாலிக்கின்றனர். 

மூன்றாவது தளத்தில் ருத்ராட்ச மண்டபம் உள்ளது. இங்கு யோக சஹஸ்ரலிங்கத்துடன் 1,008 சிறிய சிவலிங்கங்களைக் காணலாம்.

மண்டபத்தைச் சுற்றி சிவலீலையை உணர்த்தும் ஓவியங்கள், சிவபெருமானின் அவதாரங்களைக் காட்டும் சிற்பங்கள் காணப்படுகின்றன. 

கோயிலைச் சுற்றிச் செல்லும்போது ராமாயணக் காட்சிகளைச் சித்தரிக்கும் ஓவியங்கள், நரசிம்மர், வாமன சிற்பங்களைக் காணலாம். 

இங்கு தினமும்  பண்டிதர்கள் சிறப்பு பூஜை, ஆராதனைகளை செய்து வருகின்றனர்.



இந்த ஆதிசங்கர விமான மண்டபம், காண வேண்டும் என்று மிக ஆவலாக  இருந்தேன், ஆனால்  காண முடியவில்லை. அடுத்தமுறை சரியான திட்டமிடலுடன் சென்று  தரிசனம் செய்ய வேண்டும் 


முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் : 9

சங்கக் கயனு மறியாமைப்

பொங்குஞ் சுடரா னவர்கோயில்

கொங்கிற் பொலியும் புனல்கொண்டு

அங்கிக் கெதிர்காட் டுமையாறே.

 


சங்கத்தைக் கையின்கண் கொண்ட திருமாலும் அறியாதவாறு பொங்கி எழும் சுடராகத் தோன்றிய சிவபிரான் உறையும் கோயில், காவிரி, மகரந்தம், தேன் ஆகியன பொலியும் நீரைக் கொண்டு வந்து, அழல் வடிவான இறைவன் திருமுன் அர்க்கியமாகக் காட்டும் திருவையாறாகும்.



தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼


2 comments:

  1. விவரங்கள் சூப்பர். ஓ அப்ப வெளிலருந்துதான் படம் எடுக்க முடிஞ்சதோ? படங்கள் நல்லாருக்கு அனு
    உள்ள போக முடியாம போச்சா?

    ஸ்ரீராம் காசிக்குப் போனப்ப இது பார்த்ததை தரிசனம் செய்தது பற்றிச் சொல்லியிருந்தார்.

    கீதா

    ReplyDelete
  2. ஆமா அக்கா இங்க உள்ளே சென்று காண முடியவில்லை

    ReplyDelete